பார்வை LOOK 63-04-28 1. சகோதரன் ஜிம்மி. காலை வணக்கம் நண்பர்களே. அது.... இக்காலை வேளையில் மறுபடியுமாக பீனிக்ஸில் இருப்பதற்கும், இந்த அருமையான ஐக்கியத்தின் தருணத்தை உணர்ந்து மகிழ்ந்து கொண்டிருப்பதற்கும் நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். நான் இங்கே நீண்ட நேரம் இருந்து அந்த அருமையான பாடல்களை கேட்க எனக்கு நேரம் இருந்தால் நன்றாக இருக்கும். வாலிபனான ஜிம்மி அந்தப் பாடலை மிக அருமையாக பாடுவதைக் காண்பதென்பது அருமையானது. ஹூம்! அந்த பையன் செயற்கையாகவே அதைச் செய்யத் தலைப்படவில்லை, அது சரியல்லவா? 2. அவனுடைய விலையேறபெற்ற தாய் அங்கே கதவண்டை உட்கார்ந்திருந்தார்கள் என்று சகோதரன் அவுட்லா இக்காலை வேளையில் என்னிடமாக கூறினார். அவர்களுக்கு எண்பத்தொன்று வயது ஆகின்றது. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அநேக வருடங்களுக்கு முன்னர் அந்தச் சிறு குழந்தையை நீங்கள் உங்கள் கரங்களில் தாலாட்டும்போது, அவனின் சிறு கரங்கள் உங்கள் கன்னங்களில் தட்டியிருக்கும், பிறகு உங்கள் பையன் சபையில் பாடும் போது எண்பது வயது நிறைந்தவர்களாக, அவன் பாடுவதைக் கேட்போம் என்று ஒருக்கால் அந்த நேரத்தில் நினைத்திருக்க மாட்டீர்கள் என்று நான் யூகிக்கின்றேன். அப்படி நீங்கள் அப்போது நினைத்துப்பார்த்ததுண்டா? அது மிக அருமையானது, மிக அருமையான ஒன்று. அது மிக அருமையானது, மிகவும் அருமையானது. மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். தேவன் உங்களுக்கு ஆம், அநேக வருடங்கள் என்று கூற முடியாது, ஏனென்றால் நீங்கள் உங்களுக்குள்ளாக ஒரு நித்தியவாசியாக இருக்கின்றீர்கள். உங்களுக்கு புரிகின்றதா? ஆகவே துவக்கம் என்ற ஒன்றை நீங்கள் செய்யவில்லை, ஆதலால் உங்களால் முடிவும் பெற முடியாது, ஏனென்றால் நீங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாக இருக்கின்றீர்கள். அது மிக அருமையான ஒன்றாகும். 3. சகோதரன் டைசன், அவரை சந்திக்கும் சிலாக்கியம் எனக்கு இன்னும் கிட்டவில்லை, ஆனால் இங்கே சபையில் அடுத்த வாரம் முழுவதுமாக தொடர்ந்து அவர் ஆராதனையை நடத்தப்போகின்றார், இன்றிரவு முதல் செய்யப்போகின்றார். ஆகவே நான் இந்த எழுப்புதலில் மகத்தான வெற்றி இருக்கின்றது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். நான் மாத்திரம் இங்கே எங்கேயாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு, நம்முடைய சகோதரன் பிரசங்கிக்கையில் தேவனுடைய அருமையான காரியங்களில் அப்படியே மூழ்கிக் கிடந்தால் நலமாயிருக்கும் என்று விருப்பம்கொள்கிறேன். நான் அவர் எருசலேமைச் சேர்ந்த ஒரு மிஷனரியின் மகன் என்று நான் கேள்விப்பட்டேன். இந்த வாரம் நடைபெறவிருக்கின்ற நம் சகோதரனின் ஊழியத்தில் நீங்கள் களிகூர்ந்து மகிழ்வீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். உங்களால் கூடுமானால் கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள், அவர் பேசுவதைக் கேளுங்கள், அவருக்கு ஆதரவாயிருங்கள். உங்களால் வர முடியாதவர்கள், மற்றும் வீட்டிலிருந்து தூரத்தில் இருப்பவர்கள், நகரத்துக்கு வெளியில் இருப்பவர்கள், திரும்ப வர முடியாதவர்கள், நான் செய்யப்போகின்ற விதமாக மாத்திரம் செய்யுங்கள், அவருக்கு ஜெபம் செய்யுங்கள், ஆராதனையின் வெற்றிக்காக ஜெபியுங்கள். 4. பீனிக்ஸில் முதல் முறையாக வந்தபோது எனக்கு நினைவில் உள்ளது. இந்த சபைக்குத் தான் வந்தேன், ஆனால் அது வேறே ஒரு இடத்தில் இருந்தது. அது இந்த சபை தான், ஆனால் வேறே ஒரு கூரையின் கீழாக ஆராதித்தோம், சகோதரன் அவுட்லாவுடன் மகத்தான ஒரு ஐக்கியத்தை நாம் கொண்டிருந்தோம். அந்த கூட்டத்தின் போது ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒரு ஒலிப்பதிவு தட்டு என்னிடம் உள்ளது. அது எப்போதுமே நான் சிறிது தளர்வுறும் போது, அந்த இசைத்தட்டை போட்டுக் கேட்பேன், அந்த இசைத்தட்டு இப்பொழுது கீரல் கொண்டதாக உள்ளது. ஒருக்கால், அந்த இசைத்தட்டை பதிவு செய்த அந்த மனிதன், இங்கே இருக்கின்றார் என்று நினைக்கின்றேன், சிகப்பு நிற நெகிழ்வான இசைத்தட்டாகும் (Red Flexible Record). அதன் பிறகு, ஆம், இங்கே இந்த வாலிப பாடற்குழுவினர் பாடிய இசைத்தட்டுகளை அநேகம் நான் வைத்திருக்கிறேன், அப்போது இவர்கள் எல்லோரும் சிறு குழந்தைகளாக இருந்திருப்பார்கள். அதிலிருந்து நாங்கள் நிறைய பெற்றுக்கொள்கிறோம். 5. இந்த அருமையான பாடல்களை நாங்கள் கேட்கையில், நான் சகோதரன் அவுட்லாவிடம், "அவை ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுவதில் எனக்கு மகிழ்ச்சி, ஏனென்றால் அவைகளை நான் ஆராய்ந்து பார்க்க விரும்புகிறேன். அந்த பாடல்களை கேட்க எனக்கு விருப்பம், உட்கார்ந்திருக்கையில் அந்த ஒலிநாடா கருவியை போட்டு, அந்த பாடல்களை கேட்க எனக்கு விருப்பம்" என்று கூறினேன். 6. இசையைப் போன்று வேறு ஒன்றுமே கிடையாது. உங்களுக்குத் தெரியுமா, தேவன் இசையின் மூலம் சுகமளிக்கின்றார். உங்களுக்கு அது தெரியுமா? ஆம் - ஆம். தேவன் இசையின் மூலம் சுகமளிக்கின்றார். 7. தேவன் அன்பினால் சுகமளிக்கின்றார். பாருங்கள்? மருந்தைக் கொண்டு தேவன் சுகமளிக்கின்றார். ஜெபத்தின் மூலமாக தேவன் சுகமளிக்கின்றார். சுகமளிக்க தேவன் அநேக வழிகளைக் கொண்டி ருக்கின்றார். உங்களுக்கு எந்த வகையில் அது தேவைப்படுகின்றதோ அந்த வகையைப் பொறுத்து உங்களுக்கு செய்யப்படுகின்றது. 8. சில சமயங்களில் சிறிது அன்பு, பிரயோகிக்கப்படும் போது, அது ஒரு பழைய காயத்தை ஆற்றுகின்றது, ஒரு முறுமுறுப்பு அல்லது ஏதோ ஒன்றை அது ஆற்றும். சரியாக அந்த இடத்திலே அது சுகத்தை அளிக்கும், சிறிய அன்பையும், சிறிய அக்கறையை, கவனிப்பையும் செலுத்தினால் கூட போதும். 9. சில சமயங்களில் மிகவும் நீங்கள் சோர்வுற்றிருக்கின்ற நேரத்தில், நாம் வழக்கமாக சாதாரண மொழியில் கூறுவது போல, ஆழக்குழிகளில் போடப்பட்டது போல, (ஆழக்குழிகளில் போடப்பட்டு போல என்பது ஒரு பழைய ஆங்கில சொற்றொடர் ஆகும். அதன் அர்த்தம் மிகவுமாக மனச்சோர்விலும், தன்னம்பிக்கை இழப்பது போல உணர்ந்தல் என்பதாகும் - தமிழாக்கியோன்) உணரும் போது அந்த ஒலி நாடாக்களில் ஒன்றை, அந்த இசையை, பதிவு செய்யப்பட்ட அந்த இசைத்தட்டை பாடல் கருவியில் போட்டு பாடலை இயக்குவேன். முதலாவதாக என்ன நடக்கும் தெரியுமா, அப்போது உங்கள் காலை தரையில் தட்ட ஆரம்பிப்பீர்கள் அல்லது உங்கள் கையை தட்டுவீர்கள் பிறகு எல்லாமே சரியாகிவிட்டிருக்கும். அப்போது, நீங்கள் நிமிர்ந்து எழுந்து, மறுபடியும் தொடர்ந்து செல்ல தயாராகிவிடுவீர்கள். 10. இப்பொழுது, இந்த ஆறு மணி நேர செய்திகள், அவை சுவிசேஷ செய்தி வகையைச் சேர்ந்தது அல்ல, அது நான் வீட்டிலிருக்கையில், அது தாமே ஒரு விதமான என்னை அங்கே எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்று எல்லோரும் அறிந்துள்ளனர், அது ஒரு விதத்தில் நீண்ட பிரசங்கமாக இருக்கின்றது. நீங்கள் பாருங்கள், நான் அந்த ஆறு மணி நேரத்தில் கூற முடிந்ததைக் காட்டிலும், அநேக மக்களால் ஐந்து நிமிடங்களில் இன்னும் அதிகமான காரியங்களை கூற முடியும். ஆகவே, நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்பதைப் பொறுத்து காரியம் உள்ளது. 11. இப்பொழுது, இக்காலையில் ஒரு சிறு குறிப்பு இங்கே என்னிடமாக உள்ளது என்று நினைக்கிறேன், ஒரு சகோதரி, தன்னுடைய சிறு குழந்தையை கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்ய விரும்புகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நான் சகோதரன் அவுட்லாவிடம், "நீங்கள் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதுண்டா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இல்லை." என்றார். இல்லை, அவர் தாமே .. வேதாகமம் எப்படியாக அவர்களை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கூறுகின்றதோ அதே விதமாக அவர் பிரதிஷ்டை செய்கின்றார். 12. ஆகவே நான் - நான் இப்பொழுது நினைப்பது என்னவென்றால், இந்த நேரத்தில், இங்கே மேலே கொண்டு வரும்படிக்கு சிறு பிள்ளையை வைத்துள்ள இந்த சகோதரி, அதை மேலே கொண்டு வருவார்கள். அது வேதாகமத்தின் போதகமாக இருப்பதால் இதில் நாம் விசுவாசம் கொண்டுள்ளோம். கர்த்தராகிய இயேசு நமக்கு வைத்துச் சென்றுள்ள மாதிரியையும் மற்றும் வேத வசனம் கூறுவதையும் நாம் பின்பற்ற முயற்சிக்கின்றோம், நமக்கு தெரிந்த வரைக்குமாக, அவர் எப்படியாக அதைச் செய்தாரோ அதை அப்படியே பின் பற்றுவோமாக. அவர், அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததாகவோ அல்லது அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படவேண்டும் என்று சீஷர்களுக்கு கட்டளை கொடுத்ததாகவோ வேதாகமத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக நம்மால் காணமுடியாது. அவர் - அவர்... "சிறு பிள்ளைகளின் மேல் அவர் கைகளை ஆசீர்வதிக்கும்படிக்கு அவர்கள் அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். அப்போது அவர் தம்முடைய கைகளை அவர்கள் மேல் வைத்து வைத்து, "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள், பரலோகராஜ்யம் அப்படிப்பட்ட வர்களுடையது" என்று சொன்னார். 13. ஆகவே ஆர்கன் இசைக்கருவி அல்லது பியானோ வாசிப்பவர் முன் வந்து அந்த அருமையான இசையை, சற்று மெதுவாக மிருதுவாக "அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், பாவக் களங்களிலிருந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்" என்னும் பாடலை இசைப்பார்களானால்... அந்த பாடல் உங்களுக்கு தெரியும் என்று நான் நம்புகிறேன். 14. அந்த பையனின் பெயர் என்ன? [குழந்தையின் தாய், "அது ஒரு சிறு பெண் குழந்தை அதன் பெயர் ரெபெக்கா" என்று கூறுகின்றார்கள் - ஆசி.] ரெபெக்கா. இக்குழந்தையின் கடைசி பெயர் என்ன? ["ஹாம்மர்."] ஹாம்மர். இவர்கள் சகோதரன் மற்றும் சகோதரி ஹாம்மர்.["ஆம்.") தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இக்குழந்தை உங்களுக்கு ஒரே குழந்தையா? "எங்களின் நான்காவது பெண் குழந்தை" நான்காவது பெண் குழந்தையா. நீங்கள் ஒரு சுவிசேஷகனாக இருக்கவேண்டியவர்கள். பிலிப்புவுக்கு நான்கு பெண் குழந்தைகள் இருந்தன, உங்களுக்கு தெரியும். ("அது சரியே.") அக்குழந்தைகள் எல்லாம் தீர்க்கதரிசினிகளாக இருந்தனர். [குழந்தையின் தகப்பன், "நான் ஒரு ஊழியக்காரன் இல்லை" என்று கூறுகிறார்.] நீங்கள் அப்படியாக இல்லாமலிருக்கலாம், ஆனால் எப்படியாயினும், சகோதரன் ஹாம்மர், இந்த பெண் குழந்தைகளிலிருந்து நான்கு தீர்க்கதரிசினிகளை தேவன் உங்களுக்கு அளிப்பார் என்று நான் நம்புகிறேன். 15. மிக இனிமையான ஒன்று. இவள் இப்பொழுது கொட்டாவி விடுகிறான். நீங்கள் இதைப் பார்க்கவேண்டும். எனக்கு குழந்தைகள் மிகவும் பிடிக்கும். ஆனால் குழந்தைகளை பிரதிஷ்டை செய்ய என் கையில் தூக்க நாள் எப்போதுமே பயம் கொண்டிருக்கிறேன், குழத்தைகளை உடைத்து விடுவேனோ என்று எப்போதுமே எனக்கு 96 பலம் உண்டு. உங்களுக்கு தெரியுமா, குழந்தைகள்... முந்தைகளை கரத்தில் ஏந்தியவுடன் ஒரு விதமான உணர்வு எனக்கு "உங்களால் குழந்தைகளை உடைக்க முடியாது" என்று என் வவி எப்போதுமே என்னிடம் கூறுவான். ஆகவே, ஆனால் இலவகள் மிக இனிமையானதாக காணப்படுகின்றன. இக்குழத்தைகளை பார்க்கும்போது அவைகளை கையில் வேண்டும் என்கின்ற ஒரு உணர்வு உண்டாக்கும் விதமாக குழந்தைகள் காணப்படுகின்றன. ஆகவே, அது சரியான ஒன்றாயிருக்குமானால் நான் இக்குழந்தையை கையில் எந்தப்போகிறேன். 16. இப்பொழுது, இப்படி செய்கின்ற ஒரு காரியமானது என் மனைவிக்கு பிடித்தமான ஒன்றாகும். இவள் ஒரு சிறு பொம்மையல்லவா? சிறிய ரெபெக்கா ஹாம்மர், நீ நலமா? அது அருமையானதாகும். இக்குழந்தைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம், இந்த இணைப்பிற்கு தேவன் என்ன ஒரு அருமையான குழந்தையை அளித்துள்ளார் பாருங்கள். அது தேவனிடமிருந்து மாத்திரமே வருகின்றது. தேவனைத் தவிர வேறே எவராலும் ஜீவனை அளிக்க முடியாது. இப்பொழுது நம் தலைகளை தாழ்த்துவோமாக. 17. எங்கள் பரலோகப் பிதாவே, உம்முடைய மகத்தான கரத்தினாலே, இந்த வீட்டிலே வைக்கப்பட்டிருக்கின்ற இந்த அன்பின் சிறிய உருவை நாங்கள் இக்காலை வேளையிலே உம்மிடமாக கொண்டு வருகின்றோம். எப்படியாக இந்த தாய் தாமே, இத்தனை மாதங்களாக தன்னுடைய இருதயத்தின் கீழாக இதைச் சுமந்து, இது வெளி வருகையில் எப்படியாக காணப்படும் என்று ஏங்கியிருப்பாள். ஆகவே இதோ இக்குழந்தை இக்காலையில் இங்கே இருக்கின்றது, இந்த அருமையான சிறிய பெண் குழந்தை அதற்கு அவள் ஒரு வேதாகம பெயரை வைத்திருக்கிறாள். இதோ இப்பொழுது இக்குழந்தை தேவனுடைய பீடத்தண்டை வந்துள்ளது, இவளும் இவள் கணவரும் இக்குழந்தையை பிரதிஷ்டை செய்யும்படிக்கு இங்கே கொண்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இக்குழந்தையை அளித்த தேவனிடமே இந்த குழந்தையை கொடுக்க வந்துள்ளனர். பிதாவே, இவர்கள் வீட்டை ஆசீர்வதிக்கும்படியாக நாங்கள் ஜெபிக்கிறோம். இவர்கள் குடும்பத்தை ஆசீர்வதியும். இந்த சிறிய ரெபெக்காவை ஆசீர்வதியும். 18. ஜனங்கள் சிறு குழந்தைகளை உம்மிடமாக கொண்டு வந்து, நீர் தாமே அவர்கள் மேல் உம்முடைய கைகளை வைத்து அவர்களை ஆசீர்வதிக்கும்படியாக உம்மிடம் கொண்டு வந்தார்கள் என்பதை வேதாகமத்திலே நாங்கள் பார்க்கின்றோம். மேலும் இக்காலை வேளையிலே நீர் தாமே காணக்கூடிய ஒரு சரீரத்திலே இங்கே இருந்திருந்தால், இந்த பெற்றோர் இந்த சிறு ரெபெக்காவை உம்மிடம் தான் கொண்டு வந்திருப்பார்கள் என்பது உறுதி. கர்த்தாவே, இந்த மகத்தான ஊழியக் கட்டளைப் பணியில் (mission) எங்கள் கரங்கள் தாமே மிகவும் அற்பமான பதிலீடாக (substitute) இருக்கின்றது என்பதை நாங்கள் உணருகிறோம். ஆனால் இப்படி செய்யும்படியாக எங்களுக்கு கட்டளை கொடுத்திருக்கின்றீர். ஆதலால், கர்த்தாவே, இந்த சிறிய ரெபெக்காவை பிரதிஷ்டைக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உம்மிடமாக நாங்கள் கொடுக்கின்றோம். கர்த்தாவே, நீர் தாமே இக்குழந்தையின் ஜீவியத்தை எடுத்து உம்முடைய மகிமைக்காக உபயோகிப்பீராக. அதற்காக உம்மை யேசுவின் நாமத்தில் நாங்கள் துதிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் ஆமென். 19. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் தாமே இந்தச் சிறு குழந்தையானது, வாழ்ந்து, ஒரு அருமையான பெண்ணாக இருப்பாளாக. மேலும் நாளை ஒன்று இருக்குமானால், கிறிஸ்துவின் மகத்தான ஊழியக்காரியாக இருப்பாளாக. தேவன் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக, மிகவும் அருமையான ஒன்று. 20. ஓ அந்த சிறிய குழந்தைகள் அவர்களுடைய சூழ்ச்சியற்ற இயல்பு (innocence) தான் காரியம் அகும். ஒரு குழந்தை எவ்வளவாக களங்கமில்லாததாக (innocent) உள்ளது என்பதைக் குறித்து நான் அடிக்கடி யோசித்ததுண்டு. ஆனாலும், நாம் இந்த சிறு பிள்ளைகளில் ஒன்றைப் போல களங்கமில்லாதவர்களாக இருப்போமானால். ஆகவே நாம் இப்போது பார்ப்போமானால், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மை கழுவியிருக்கும்போது நாம் அதைக் காட்டிலும் அதிக களங்கமில்லாதவர்களாக இருக்கின்றோம். 21. இப்பொழுது, வேத வசனங்களை நாம் திருப்புவோமாக. வேதாகமத்தை வாசிக்க விரும்புகின்ற உங்களுக்கு, நாம் எபிரெயர் 9வது அதிகாரத்துக்கு சில வார்த்தைகளை பார்க்கும்படிக்கு நாம் திருப்புவோமாக. 9 ஆம் அதிகாரம் 24ஆம் வசனத்திலிருந்து நாம் ஆரம்பிப்போமாக. அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல் பரலோகத்திலே தானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்ச மாகும்படி பிரவேசித்திருக்கிறார். பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறது போல, அவர் அநேகந் தரம் தம்மைப் பலியிடும்படிக்கு பிரவேசிக்கவில்லை. அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசி காலத்தில் ஒரே தரம் வெளிப்பட்டார். அன்றியும் ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும் படிக்கும் ஒரே தரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக் கொண்டிருக்கிற வர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். 22. தேவன் தாமே தம்முடைய ஆசீர்வாதங்களை தம்முடைய வார்த்தையின் வாசிப்பிற்கு கூட்டி வழங்குவாராக. இப்பொழுது ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை நாம் தாழ்த்துவோமாக. 23. எல்லா காரியங்களின் துவக்கமாயிருக்கிறவரே, இயேசு கிறிஸ்துவைக் கொண்டு உலகங்களை உண்டாக்கின சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்முடைய பிரசன்னத்துக்குள்ளாக நாங்கள் வருகின்றோம், இக்காலை வேளையிலே இந்த கட்டடத்தில், உம்முடைய மக்களின் ஒன்று கூடுதலாக வந்துள்ளோம்: முதலாவதாக எங்களை உம்மிடமாக ஊழியத்திற்கென்று ஒப்புவிக்கவும்; உம்முடைய கரத்தினின்று ஏற்கெனவே நாங்கள் பெற்றுள்ளவை களுக்காக நாங்கள் நன்றியை ஏறெடுக்கவும் வந்துள்ளோம். இந்த உம்முடைய வார்த்தையின் வாசித்தலை நீர் தாமே ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கின்றோம். இந்த வார்த்தையின் ஆக்கியோனை நாங்கள் நோக்கிப் பார்க்கையில், பரிசுத்த ஆவியானவர் தாமே இந்த வார்த்தையை எங்களுக்கு தொடர்ந்து தத்ரூபமாகச் செய்துக் காண்பிப்பாராக, இதை நாங்கள் அவருடைய நாமமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கின்றோம். ஆமென். 24. இப்பொழுது, நாம் இக்காலை நான்கு எழுத்துக்கள் கொண்ட ஒரு வார்த்தையை நாம் பார்க்க முயற்சிக்கப்போகிறோம், பார்வை (Look) என்ற அந்த வார்த்தையை நாம் ஒரு பொருளாகத் தெரிந்துகொண்டு, நாம் என்ன செய்யவேண்டும் என்பதை கர்த்தர் தாமே நடத்தும் விதத்திலே சிறிது நேரத்திற்கு இதை நாம் பார்ப்போமாக நான் சில குறிப்புகளை இங்கே எழுதி வைத்துள்ளேன், நாம் இன்னும் தொடர்ந்து இந்த பொருளின் மேல் செல்கையில் இன்னும் சில வேத வசனத்தையும் நான் குறிப்பிற்கென வைத்துள்ளேன். பார்வை. 25. "எல்", இரட்டை "ஓ", "கே", (ஆங்கில எழுத்துக்களை சகோதரன் பிரன்ஹாம் குறிப்பிடுகிறார்), (Look), பார்வை. அந்த வார்த்தை, உண்மையாகவே, ஒரு . . . அது அடிக்கடி உபயோகப்படுத்துகின்ற ஒரு வார்த்தை ஆகும். ஆனால், "பார்," என்ற வார்த்தையை நீங்கள் கேட்பீர்களானால், அது, வழக்கமாக ஒருவர் தான் பார்க்கின்றதை நீங்களும் பார்க்க வேண்டும் என்று முனைந்து இதைக் கூறுவர். அவர்கள் உங்களிடமாக "பார்" என்று கூறுவார்கள். அது நீங்கள் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, ஒருவர் ஒரு குறிப்பட்ட காட்சியைப் பார்க்க நேரிடும், உடனே அவர்கள் "பாருங்கள்" என்று கூறுவார்கள், பிறகு அது என்ன என்று விளக்கமாக கூறுவார்கள். அவர்கள் அந்த மலையையோ, அந்த கள்ளிச் செடியையோ, அல்லது எதையெல்லாம் பார்த்தாலும் சரி. ஆனால், முதல் காரியமாக, உங்கள் கவனத்தை ஈர்க்க "பாருங்கள்" என்ற வார்த்தை தான் வரும். 26. இப்பொழுது, இன்று, ஒவ்வொருவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒன்றிற்காக நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், ஏதோ ஒன்று சம்பவிக்கவேண்டுமென்று நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 27. உலகமானது தொடர்ந்து ஆகாயத்தை கவனித்துக் கொண்டேயி ருக்கின்றது என்பதை நாம் அறிவோம், ராடார் கருவிகளைக் கொண்டும், நம்மிடம் உள்ள திரைகளை, ஸ்கிரீன்களைக் (screen) கொண்டு, உலகம் முழுவதுமாக, ஒவ்வொரு நாடும் தன்னுடைய சொந்த பாதுகாப்புக்காக அப்படியாக தொடர்ந்து கவனித்துக் கொண்டேயிருக்கின்றது, ஒளி மற்றும் கதிர்களின் அசைவை கண்டுபிடிக்கும் விசைமுறை மாற்றமைவுக் கருவி (magic eye) போன்ற ஒன்றைக் கொண்டு இந்த திரையில், ஸ்கிரீனில் (screen) ஏதாவது ஒன்று தோன்றுகின்றதா, அதாவது ஒரு அணுகுண்டு ஏவுகணை அல்லது ஏதாவதொன்று வருகின்றதா என பார்த்துக்கொண்டிருக்கின்றதை நாம் அறிவோம். பிறகு, அந்த ஏவுகணைஅனுப்பிய இடத்திற்கு ஒன்றை அனுப்பவும் இவர்களிடம் ஏதோ ஒன்று உள்ளது. 28. எல்லாகாரியமும் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. ஃபோர்ட் நிறுவனம் இன்னும் சிறந்த ஒரு ஃபோர்ட் கார் உற்பத்தியை செய்ய பார்த்துக்கொண்டேயிருக்கின்றது செவ்ரோலே (Chevrolet) கார் நிறுவனமும். இன்னும் ஒரு சிறந்த செவ்ரோலே காரை உற்பத்தி செய்ய பார்த்துகொண்டே இருக்கின்றது. பீனிக்ஸ் பட்டிணமும் இன்னும் பெரிய சிறந்த பட்டணத்தை உருவாக்க பார்த்துக் கொண்டி ருக்கின்றது. தேசமானது இன்னும் பெருகத்தக்கதாக இன்னும் அதிக இடங்களை கொண்டிருக்க பார்த்துக்கொண்டிருக்கின்றது. சபையும், சபையும் கூட இன்னும் அதிக உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் மணவாட்டியோ தன்னுடைய கர்த்தருடைய வருகைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றாள். 29. நாம் எல்லோருமே நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் (looking). நீங்கள் எதை எதிர்நோக்கிப் பார்க்க வேண்டும் என்று உங்களிடமாக கூற முயற்சித்துக்கொண்டிருக்கின்ற சத்தத்தைப் (voice) பொறுத்து தான் காரியமானது சார்ந்திருக்கின்றது. நம்மில் சிலர் "இதற்கு உங்கள் கவனத்தை செலுத்துங்கள், நோக்கிப்பாருங்கள் (look)" என்று கூறிக்கொண்டிருக்கிறோம். மேலும் அது ஒரு சபையாக இருக்குமென்றால், இந்த வருடம் இன்னும் அதிக உறுப்பினர்கள் நமக்கு தேவை என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். அது சரி தான். 30. ஆனால் இக்காலை வேளையிலே நான் குறிப்பிட்டுக் கூற முயற்சித்துக் கொண்டிருக்கின்ற அந்த சத்தம், இந்த நிருபத்தை எழுதின, இதை எழுதினது பவுல் என்று நாம் விசுவாசிக்கின்றோம், இந்த நிருபமானது, "இரண்டாந்தரம், இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு (looking)" என்று கூறுகின்றது, அவருக்காக எதிர்பாத்துக் காத்துக்கொண்டிருத்தல் (looking). அதைச் செய்ய வேண்டும் என்றால், முதலாவது நீங்கள் தான் காரியத்தை பார்க்கவேண்டியவர்களாக இருக்கின்றீகள், அதன் பிறகு தான், மற்றவர்களிடமாக நீங்கள் எதைப் பார்க்கின்றீர்களோ அதைப் பார்க்கும்படியாக கூற வேண்டிய வர்களாக இருக்கின்றீர்கள். 31. இதைப் பற்றியதான ஒரு அனுபவத்தை நோவா கொண்டிருந்தான். மேலும் அவன், விசுவாசத்தினாலே, ஒரு வெள்ளம் வரப்போகிற தென்றும், பெரிய அளவிலான மழை வந்து பூமியை மூடிப்போட்டு, எல்லாவற்றையும் எடுத்துப்போட்டு பூமியை கழுவப்போகிறது என்பதைக் கண்டான்; பூமியானது தேவனுக்கு மறுபடியுமாக மறுபிரதிஷ்டை செய்யப்பட்டது. பூமியின் அசுத்தம், அந்த மக்கள், தாங்கள் இருந்த அந்த அந்த நாளிலே எல்லோருமாக கதம்பக் கூளமாக, கும்பலாக (conglomeration) அசுத்தத்திற்குள்ளாக சென்றிருந்தனர், ஆகவே மறுபடியுமாக ஆரம்பிக்கப்பட ஏதுவாக, பூமியானது அந்த அசுத்தத்திலிருந்து கழுவி எடுக்கப்பட வேண்டியதாக இருந்தது. 32. நான் இப்பொழுது தான் கடைசி ஏழு முத்திரைகள் என்பதைக் குறித்ததான பிரசங்கத் தொடரை செய்து முடித்துள்ளேன். இந்த ஆறாவது முத்திரையில் நாம் பார்ப்பது என்னவென்றால், இயற்கையின் ஓட்டத்தில் ஒரு மிகப்பெரிய தடையானது ஏற்படுகின்றது. சந்திரன், நட்சத்திரங்கள், பூமி பொங்கி ஏப்பமிடுகிறது போல (belches) மேலெழும்புகிறது. சபையானது சுத்திகரிக்கப் படுகின்றது, இஸ்ரவேல் சுத்திகரிக்கப்படுகின்றது, அந்த ஏழாம் முத்திரையின் கீழாக எல்லா காரியமும் சுத்திகரிக்கப்படுகின்றது, ஏனென்றால் அப்பொழுது ஆயிர வருட அரசாட்சியானது ஆரம்பிக்கும்படியாக அப்படியாக செய்யப்படுகின்றது. ஆகவே முதலாவதாக ஒரு சுத்திகரிப்பானது அவசியமாயுள்ளது. 33. ஆகவே இன்று சபை அவ்விதமாகத் தான் இருக்கின்றது, நான் உங்களுக்கு சுட்டிக் காண்பிக்க விரும்புவது என்னவென்றால், சுத்தமாக்கப்படுதல் நமக்கு தேவையாயிருக்கின்றது. தேவனிடமிருந்து ஏதாவதொன்று துவங்கும் முன்னதாக, கட்டாயமாக நமக்கு ஒரு சுத்திகரித்தல் அவசியமாக உள்ளது. மேலும் நாம் தாமே காரியங்கள் இப்பொழுது எப்படியாக இருக்கின்றன என்றும், இப்பொழுது நிலவுகின்ற சூழ்நிலைகளில் எப்படியாக காரியங்கள் உள்ளன என்றும் நாம் நோக்கிப் பார்ப்போமானால் (look), தேவன் தம்முடைய திட்டத்தை தொடர்ந்து செய்வதற்கு முன்னர் ஏதோ ஒன்று சம்பவித்தாக வேண்டும், ஒரு சுத்திகரித்தல் நடக்க வேண்டியுள்ளது என்று நம்மால் பார்க்க முடியும் (look). நம்மில் அநேகர், நாம் கூறுவது, அவர்கள் திரும்ப பார்த்தலானது.... 34. என்னிடமாக ஒரு ஒலிநாடா, இல்லை, நல்லது, எருசலேமில் எடுக்கப்பட்ட ஒரு படக்காட்சி சுருள் என்னிடமாக உள்ளது, அதில் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர், யூதர்கள் ஈரானிலிருந்தும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்து கொண்டிருந்த போது யூதர்களிடமான அந்த உரையாடல் படச்சுருளில் உள்ளது, அவர்கள் தங்களுக்கு அன்பானவர்களை, நெருங்கினவர்களை தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு, கப்பல்களிலிருந்தும், விமானங்களிலிருந்தும் இறங்கி திரும்ப வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் கேள்வியானது கேட்கப்பட்டது, "மரிப்பதற்காகவா நீங்கள் உங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "மேசியாவைக் காண நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்." என்றனர். 35. அந்த மரமாகிய இஸ்ரவேல் தன் துளிரை விடுவதை நீங்கள் காணும்போது, அது ஒரு மகத்தான அடையாளக் கொடி (ensign) ஆகும். இஸ்ரவேல் தேசமாகும்போது காலம் சமீபமாயிருக்கின்றது, மேலும் அவள் இன்று ஒரு தேசமாக இருக்கின்றாள். 36. உலகத்திற்காகவே தான் காரியங்களானது சம்பவித்துக் கொண்டிருப்பதை நாம் காண்கின்றோம். நோவாவின் நாட்களில் இருந்தது போலவே இப்பொழுதும் அந்த காரியங்களைக் காணாதவாறு குருடராயிருக்கின்றனர். ஆனால் இரண்டாம் முறையாக கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கின்ற நமக்கோ, அவர் சீக்கிரமாக வரப்போகின்றார் என்பதற்கான அடையாளக் கொடியாக அது உள்ளது. ஏதோ ஒன்று சம்பவிக்கப்போகின்றது, மேலும் நீங்கள் எதை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதைச் சார்ந்து தான் காரியமானது இருக்கின்றது என்று நாம் காண்கின்றோம். 37. இப்பொழுது, பெருவெள்ளம் வரப்போகின்றது என்று தேவனுடைய வார்த்தையைக் கொண்டு நோவா அறிந்திருந்தான். விசுவாசத்தினாலே அவன் அதைப் பார்த்தான். அது நிச்சயமாக சம்பவிக்கப் போகின்றது என்று அவன் அறிந்திருந்தான், ஏனென்றால் அது நடக்கும் என்று தேவனுடைய வார்த்தையானது வாக்குத்தத்தம் செய்திருந்தது. இப்பொழுது, நோவா, தானே, அதை விசுவாசத்தினாலே தேவனுடைய வார்த்தை கூறியிருந்ததைக் கண்டான். ஆனால் உலகத்தினாலே அதைக் காண முடியவில்லை, ஏனென்றால் அங்கே மேலே ஆகாயத்தில் தண்ணீர் இருந்தது என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட முடியாததாக இருந்தது. ஆனால் அங்கே தண்ணீர் இருந்தது என்று நோவா அறிந்திருந்தான், ஏனென்றால் தேவன் அவ்விதமாகக் கூறியிருந்தார். 38. கர்த்தருடைய வருகை சமீபமாக உள்ளது என்று இன்றைக்கு வெளியே அழைக்கப்பட்ட, அந்த மணவாட்டி, அந்த சபையானது அறிந்திருக்கின்றது, எவ்வளவாக நாம் முன்னேற்றத்தை சாதித்துக் கொண்டிருந்தாலும், அல்லது இன்னுமாக முன்னேறினாலும் சரி, அணுவை இரண்டாக பிளப்பதில் வெற்றி கண்டாலும் சரி, அல்லது நிலவுக்கு ஒரு ராடார் கருவியைக் கொண்டு செய்தி அனுப்பினாலும் சரி, எப்படியிருந்தாலும் சரி அது ஒரு பொருட்டே அல்ல. அது விசுவாசிக்கு ஒன்றுமே கிடையாது, அது கர்த்தருடைய வருகையானது சமீபமாயுள்ளது என்ற ஒரு அடையாளமாக மாத்திரம் உள்ளது. தேசங்கள் உடைவதையும், மற்றும் தேசங்கள் ஒன்று சேர்வதும், மறுபடியும் உடைந்து போவதும், மற்றும் உலகமானது உடைந்து போவதும், சபையின் அசைவும் உடைந்து போவதையும் நாம் காண்கிறோம். அப்படியானால், "நாம் அசைவில்லாத ஒரு ராஜ்யத்தை பெறுவோம்" என்று நாம் போதிக்கப்பட்டுள்ளோம். ஆகவே இந்த காரியங்கள் எல்லாம் சம்பவிக்க ஆரம்பிக்கையில், சபையானது தன்னை இன்னுமாக பிணைத்துக்கொள்கின்றது, இன்னும் இறுக, இறுக... தேவனுடைய வார்த்தையினால் பிணைத்துக்கொள்கின்றது. ஆகவே நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு மகத்தான நாள் ஆகும். நாம் தாமே. 39. ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றுக்காக எதிர்பார்த்துக் கொண்டி ருக்கின்றனர். நீங்கள் தாமே இன்று வீட்டிற்குச் சென்று உங்கள் இரவு ஆகாரத்தை உண்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் உங்கள் குடும்பத்தை அழைத்துச் செல்லவிருக்கின்ற ஒரு சுற்றுலா இன்று பிற்பகல் இருக்கலாம். இன்னும் வேறொன்று இருக்கலாம், அடுத்த வாரத்தில் உங்கள் சுற்றுப்புறத்தாரோ அல்லது யாரோ ஒரு நண்பர் வர நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். ஆகவே எல்லோருமே ஏதோ ஒன்றிற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 40. ஆகவே இன்று விசுவாசக் குழுவினராக, இங்கே கூடி வந்திருக்கையில், நாம் நம்முடைய எண்ணங்களை, நம்முடைய கொள்கைகளை மற்றும் காரியங்களை கர்த்தருடைய வருகையின் மேல் அமைத்து வைத்திருக்க நாம் விரும்புகிறோம், "கிறிஸ்துவுக்காக நாம் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம் (Look), விசுவாசித்து, அவர் வரும்படியாக, தமக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு (look) இரட்சிப்பை அருளும்படிக்கு இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். தேவன் தாமே, இங்கே, அந்த . . . அந்த எழுத்தாளனைக் கொண்டு, இதை நாம் காண்பதற்கும், மற்றும் அதை நோக்கிப் பார்க்கவும் நமக்கு அழைப்பு விடுகின்றார். நாம்.... அந்த எழுத்தாளன் இங்கே, "இரண்டாம் தடவையாக அவர் இருக்கின்ற வண்ணமாக அவரைக் காணும்படியாக, நாம் கிறிஸ்துவுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம் (Look)." 41. மேலும், வார்த்தை கிறிஸ்துவாக இருக்கின்றார் என்று இப்பொழுது நாம் அறிந்திருக்கின்றோம். "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." மேலும் எபிரெயர் 13:8, "அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவறாயிருக்கிறார்" என்று கூறுகின்றது. ஆகவே, நாம் எதை நோக்கிப் பார்க்கின்றோம் (look) என்றால் வார்த்தையை தான், ஏனென்றால் வார்த்தை தாமே, தேவன் எப்படியாக இருக்கின்றார் என்பதன் வெளிப்படுத்தப்படுதலே (expression) ஆகும். ஆகவே தேவன் கிறிஸ்துவுக்குள்ளாக வந்த போது, தேவன் எப்படியாக இருந்தாரோ அதின் வெளிப்படுத்தபடுதலாகவே அவர் இருந்தார். அவர் எப்படியெல்லாம் இருந்தாரோ, அவர் அப்படியாகவே எப்பொழுதுமே இருக்கின்றார், ஏனென்றால் அவர் நித்தியமானவர் மற்றும் அவரால் மாறவே முடியாது. 42. நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த குழப்பமான நாட்களிலே நமக்கு ஒரு உண்மையான சாட்சியில்லாமல் தேவன் நம்மை விட்டிருக்கவில்லை என்பதானது எப்பேற்பட்ட ஒரு நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றது! ஆமாம், இன்னுமாக நாம் நிச்சயமாகவே சிலாக்கியம் பெற்ற மக்கள் ஆவோம், நாம் தாமே நாம் கொண்டிருக்கின்ற இந்த வார்த்தையாகிய உண்மையான சாட்சியை மாத்திரம் பார்ப்போமானால் (look), பாருங்கள், ஏனென்றால், அது தாமே இயேசு கிறிஸ்துவின் முழு வெளிப்பாடாகும் (revelation). அதனோடு ஒன்றையுமே கூட்ட முடியாது, அதனின்று ஒன்றையுமே எடுத்துப்போட முடியாது, ஏனென்றால் அது இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடாகும். 43. தேவன் தம்முடைய மக்களை ஒரு உண்மையான சாட்சி இல்லாமல் விட்டதேயில்லை. தேவன் உலகத்தை இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நியாயந்தீர்க்கப்போகின்றார். மேலும் இயேசு கிறிஸ்து வார்த்தையாக இருக்கின்றார் என்றால், அப்படியானால் தேவன் சபையை, அல்லது உலகத்தை வார்த்தையைக் கொண்டு தான் நியாந்தீர்க்கின்றார், ஏனென்றால் அவரே வார்த்தை ஆவார். ஒரு நியாயத்தீர்ப்பானது வந்து கொண்டிருக்கின்றது. பாவி அதை அறிந்திருக்கின்றான். 44. நீங்கள் சபையைக் குறித்து பேசும் போது, நிறைய மக்கள் ஒரு விசித்திரமானதொரு கருத்தை உடையவர்களாக இருக்கின்றனர். உலகமானது, சபையை அதாவது, நான் கூற விழைவது கிறிஸ்துவின் சரீரமானது ஒன்று கூடியிருக்கையில், அவர்கள் கடந்து செல்கையில், நீண்ட பெரிய இழையாக காணப்படுகின்ற கூந்தலை வைத்துக்கொண்டும், அடர்நிற ஆடைகளை உடுத்தியிருப்பதைப் பற்றியும் மற்றும் காரியங்களைக் குறித்தும் அவர்கள் நினைக்கின்றனர். மேலும் ஆண்கள் நீண்ட விரல்களை உடையவர்களாக, அடர்ந்த நிறம் கொண்ட ஆடைகளை உடுத்தி, எப்போதுமே அவர்களைக் கடிந்து கொண்டு பேசுவதைக் குறித்து அவர்கள் நினைத்துப் பார்க்கின்றனர். வார்த்தையின் சரியான யோசனையின்படி, அது உண்மைதான். ஏனென்றால், "சபை என்பது அவருக்கு சொந்த ஜனங்கள், வெளியே அழைக்கப்பட்ட மக்கள் ஆவர்." 45. சபையை அந்த விதத்திலே ஒரு மனிதனால் மதிப்பீடு செய்யப்படுவதின் காரணம் என்னவென்றால், அவன் சரி என்று நினைக்கின்ற ஒவ்வொரு காரியத்தையும் நோக்கி சபையானது எப்போதுமே கடிந்துகொள்ளுதலின் விரலைக் காண்பிக்கின்றது. மேலும் அவன் ஒரு பாவியாக இருப்பானானால், பாவம், வாழ்க்கையின் சுகபோகங்கள், உலகத்தில் வாழ்வதானது அருமையானது என்று அவன் நினைக்கின்றான். சபையானது அதற்கு எதிராக எழும்பி நின்று அந்த காரியத்தை கடிந்து கொள்கின்ற போது, அப்போது அது அவனுக்கு ஒரு பயங்கரமான தோற்றமுடைய ஒரு மிருகம் போல காட்சியளிக்கின்றது. ஆனால், அது தேவன் இரட்சிப்புக்கு ஒருவனை கொண்டு வருகின்ற ஒரே வழி என்று அவன் மாத்திரம் அறிவானானால், அது சரியே, தேவனுடைய வார்த்தையானது தம்முடைய ஊழியக்காரர்களின் உதடுகளின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டு சொல்லுருவில் கூறப்படுகிறது (express) என்று அறிவானானால். 46. இப்பொழுது, தேவன் தாமே சுவிசேஷத்தை பிரசங்கிக்க சூரியனை தெரிந்து கொண்டிருக்கலாம், சந்திரனின் மூலம் பிரசங்கிக்க அதை தெரிந்து கொண்டிருக்கலாம், நட்சத்திரங்களைக் கொண்டோ, காற்றைக் கொண்டோ அல்லது இயற்கையைக் கொண்டோ பிரசங்கிக்க அவைகளை தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் சுவிசேஷத்தை பிரசங்கிக்க அவர் மனிதரை தெரிந்து கொண்டார், அதிலிருந்து தான் தேவனுடைய சத்தமானது புறப்பட்டு வரும். அந்த சத்தமானது எந்த வார்த்தையை சொல்லுருவில் வெளிப்படுத்திக் காண்பிக்கின்றதோ அதைக் கொண்டு நீங்கள் அந்த சத்தத்தை மதிப்பீடு செய்யலாம் (judge), அப்போது நீங்கள் எந்த விதமான ஒரு சத்தத்தை நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களால் பார்க்க முடியும். அது வார்த்தைக்குப் புறம்பாக இருக்குமென்றால் அந்த சத்தத்தை நீங்கள் கேட்கவேண்டாம். ஆனால் அது வார்த்தையாக இருக்குமென்றால், அப்போது அந்த வார்த்தைக்கு பின்னணியாக பக்கபலமாக நின்று அதை ஆதரித்து அதை உறுதிப்படுத்தி, அதை சத்தியமாக்க தேவன் கடமைப்பட்டுள்ளார், ஏனென்றால் அவ்விதம் செய்வதாக அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கின்றார். ஆகவே நாம் ஒரு மகத்தான நாளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த கிறிஸ்துவின் வார்த்தைகள் சொல்லுருவில் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன (expressed). 47. அவர் உலகத்திற்கு வந்தபொழுது, அவர் தாமே அந்த வார்த்தையாக இருந்தார். அவர் புஸ்தகங்கள் எழுத வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை அவர் ஒரு புஸ்தகத்தையும் எழுதவில்லை ஏன் தெரியுமா? அவரே வார்த்தையாக இருந்தார். அவர் எந்த ஒரு காரியத்தைக் குறித்தும் எழுத வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் மற்றவர்கள் எதைக் குறித்து எழுதினார்களோ அது அவர் தான். அவர் தான் அந்த வார்த்தையாக இருந்தார். ஆதலால், அவர் தம்முடைய சொந்த கரத்தைக் கொண்டு எதையுமே எழுதவில்லை அவர் அந்த வார்த்தையாகவே இருந்தார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கின்றார், ஆகவே அவர் இன்னுமாக வார்த்தையாக அப்படியே இருக்கின்றார். 48. ஒரு நாளிலே அவர் யூதர்களிடமாக கூறினார், "என்னிடத்தில் பாவம் உண்டென்று யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?" என்று கூறினார். இப்பொழுது, பாவம் என்றால் "அவிசுவாசம்" ஆகும். என்னை நோக்கி தங்கள் விரலை சுட்டிக் காட்டி என்னைக் குறித்து எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் நான் நிறைவேற்றவில்லை என்று யாரால் கூற முடியும்?" 49. என் சகோதரரே சகோதரிகளே, இக்காலையில் ஜீவனுள்ள தேவனுடைய சபையானது "என்னிடத்தில் பாவம் உண்டென்று யாரால் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? வேதாகமத்தில் தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கின்ற ஒவ்வொரு வரமும், மற்றும் அவர் வாக்குத்தத்தம் செய்துள்ள ஒவ்வொன்றும் நிறைவேற்றப்படும், அது நம்மத்தியில் கிரியை செய்து நடப்பிக்கப்பட்டு வருகிறதே" என்று கூறுமானால் அது எப்படிப்பட்ட மகிமையான ஒன்றாக இருக்குமல்லவா. அது அற்புதமான ஒன்றல்லவா? யாரால் முடியும்? அப்படியானால் நாம்....தேவன் தாமே தமக்காக பேசிக் கொண்டிருப்பதை நாம் காண்போமானால் அப்போது ஸ்தாபன எண்ணங்களெல்லாம் அப்படியே வெளியேறி இல்லாமல் போகும். 50. அநேக மக்கள் வித்தியாசமான ஒன்றை எதிர்நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.... மரிக்க எவருமே விரும்ப மாட்டார்கள். இழந்துபோகப்படவேண்டும் என்று எவருமே விரும்பமாட்டார்கள். ஒவ்வொருவரும் தேவனுடைய பிரசன்னத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். எனக்கு விருப்பம், உங்களுக்கும் விருப்பம், ஒவ்வொருவரும் அப்படியே விரும்புவார்கள். ஆனால் அவரிடமாக வரவேண்டும் என்று தேவன் நமக்கு அருளியுள்ள வழியில் வரும்படிக்கு நமக்கு விருப்பமில்லை. பாருங்கள்? அது தான் காரியத்தை மிகவும் வித்தியாசமாக மாற்றுகின்றது. 51. என் மகன், பில்லி, அன்றொரு நாள் ஒரு புகைப்பட கருவி, காமிராவை எனக்கு அளித்தான். ஒரு பொருளை எனக்கு காண்பித்தான். அவன், "அப்பா, அங்கே உள்ள அதை காமிராவில் புகைப்படம் எடுங்கள்" என்று கூறினான். ஆம், அது ஒரு சிறிய 35mm பெட்ரி காமிராவாக இருந்தது. உடனே நான் அந்த சிறிய காமிராவை எடுத்து, அதன் மூலமாக தூரத்தில் இருந்த அந்த இலக்கு பொருளை நோக்கிப் பார்த்தேன். அப்போது அந்த காமிராவின் மூலம் பார்த்த போது மூன்று பொருட்கள் இருந்தன, சாகுவாரோ கள்ளி செடி வகை மூன்று காணப்பட்டது. நான் ஒரு கள்ளிச் செடி கிளை, இரண்டு கிளை, மூன்று கிளைகளை பார்த்தேன். உடனே நான் காமிராவை கிழே வைத்து அந்த செடியைப் பார்த்தேன், ஒரே ஒரு கிளையுள்ள செடி தான் இருந்தது. மறுபடியும் காமிராவின் மூலமாக பார்த்தேன், மூன்று கிளைகள் அங்கு இருந்ததாக எனக்கு காணப்பட்டது. 52. ஆம், அந்த விதமாகத் தான் சில சமயங்களில் நாம் குவிமையத்தை (focus) சரியாக அமைத்துப் பார்ப்பதில்லை. நாம் பார்க்கவிருக்கும் பொருளுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி தூரத்தை அளக்கும் ஒரு கருவியை (range finder) பயன்படுத்த வேண்டும். ஆகவே நாம் தேவனை எங்கோ பின்பாக எங்கோ அல்லது வேறு ஏதோ ஒரு இடத்தில் வைக்க நாம் முயற்சிக்கின்றோம். ஒருக்கால் நாம் அந்த இடைவெளி தூரத்தை அளக்கும் கருவியை உபயோகப்படுத்தாமல் இருக்கலாம். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய கருத்துக்களை நம்மிடமிருந்தும், மற்றும் நம் சபை வேதாகம கல்லூரி கோட்பாட்டை எடுத்துப் போட அனுமதியுங்கள், தூரத்தை அளக்கும் கருவி உள்ளே வர அனுமதித்து, நமக்கு தொடர்பை ஏற்படுத்த விடுங்கள், அப்போது நீங்கள் மூன்று அல்லது நான்காக பார்க்கமாட்டீர்கள். தேவனைக் குறித்ததான ஒரே பொருளை தான் நீங்கள் பார்ப்பீர்கள். பாருங்கள்? 53. அந்த அதே காமிரா கருவியைக் கொண்டு பார்க்கும் போது, மனிதனால் ஒரு காரியத்தைப் பார்க்க முடியும், ஆனால் அவனுடைய சொந்த நுண்ணறிவானது அங்கே ஒரே ஒரு கிளை தான் உள்ளது என்று அவனிடமாக கூறுகின்றது. பாருங்கள் 54. ஆகவே அந்த விதமாகத் தான் பரிசுத்த ஆவியானவர் செய்கின்றார், நாம் தாமே அதை அப்படியே அதனுடைய சொந்த வழியில் நடத்தும்படிக்கு விடுவோமானால் அப்படி ஆகும். அது தாமே வார்த்தையை எடுத்து, அதுவே குவிமையத்தை சரியாக அமைத்து (focus) காட்சியை துல்லியமாக அமைக்கும், அதினாலே நாம் எதைப் பார்க்கின்றோமோ அதை நாம் காணும்படிக்குச் செய்யும். ஆகவே அப்போது நீங்கள் கண்டுகொள்வீர்கள். ஒருக்கால், மக்கள் உங்களுக்கு ஏதோ ஒன்றை காண்பிக்க முயற்சிக்கையில், அது மிகவும் தவறில்லாததாக இருக்கலாம், நீங்கள் பாருங்கள்; அப்போது அந்த வார்த்தையாக இருக்கின்ற, தூரத்தை அளக்கும் அந்த கருவியை (range Finder) செயல்புரிய நீங்கள் விடுவீர்களானால், அந்த வார்த்தையானது அதன் பூரண வெளிப்படுத்தலில் காண்பிக்கத் துவங்கும். ஆமென். அது செயல்படும்படிக்கு நீங்கள் அனுமதித்தீர்களானால், அது தாமே அது தாமே செயலில் இறங்கும். பாருங்கள்? ஆனால் நீங்கள் உங்கள் காட்சியை...... நீங்கள் தூரத்தை அளக்கும் கருவியை உபயோகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள், உங்கள் காட்சியை நீங்கள் காண அது அந்த பூஜ்ஜிய அளவை (zero mark) சரியாக குவியமைத்துக் காண்பிக்குமானால், அது மறுபடியுமாக அப்படியே தான் காண்பிக்கும். 55. குறிகளை (targets) நோக்கிச் சுடுவதில் எனக்கு - எனக்கு மிகவும் விருப்பம். இங்கே சில காலத்திற்கு முன்னர், கென்டக்கியில் என்னிடம் அணில் வேட்டையாடிக்கொண்டிருந்தேன். அங்கே ஒரு சிறிய மாடல் 75 துப்பாக்கி இருந்தது. அது தானே... இதை நான் பிரசங்கத்தில் கூறுவது உங்களுக்கு அவபக்திக்குரியதாக இருக்காது என்று நம்புகிறேன், ஆகவே நான் - நான் உங்களுக்கு கூறுவேன். ஒரு காரியத்தை வலியுறுத்தி புரிய வைக்கும்படிக்கு நான் முயற்சிக்கின்றேன். ஆகவே இந்தச் சிறிய துப்பாக்கியானது, நான் அதைக் கொண்டு துப்பாக்கி சுடுவதற்குப் பயிற்சி செய்தேன். சிறு பையனாயிருக்கும் போதிலிருந்தே நான் துப்பாக்கிகளுடன் எனக்கு எனக்கு அவை இருந்துள்ளேன், விளையாடியுள்ளேன். மிகவும் பிடிக்கும். ஆகவே நான் இந்தச் சிறிய மாடல் 75 துப்பாக்கியை வைத்திருந்தேன், அதைக் கொண்டு, ஒவ்வொரு முறையும் ஐம்பது கஜம் தூரத்திலிருந்து அணிலின் கண்ணை துல்லியமாக சுடுவேன். 56. அங்கே உள்ள துப்பாக்கி சுடும் மைதானத்திலிருந்து கையொப்பமிடப்பட்ட ஒரு காகிதம் என்னிடம் இருந்தது. அதில், "பலத்த காற்றடித்து மழை பெய்கின்ற நாளிலே ஐம்பது கெஜ தூரத்திலிருந்து ஒரு துப்பாக்கியால் சுடப்பட்ட தோட்டா ஏற்படுத்தின ஒரு துளையில் ஒன்பது தோட்டாக்கள் துல்லியமாக சென்றது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே நான் அதை எடுத்து அதிகாரப்பூர்வமாக கையெழுத்து வாங்கி வைத்துக்கொண்டேன். அதைச் செய்வதற்கு எனக்கு செய்தது கர்த்தரே, ஆம் அதைச் செய்ய அவர் எனக்கு உதவினார். அது வழக்கத்துக்கு மாறான ஒன்றாக இருந்தது. 57. அப்பொழுது நான் அணிலை சுட ஆரம்பித்தேன். நான் கிட்டே போய் பார்த்த போது, கண்ணைத் தவிர வேறே பகுதியில் நான் சுட்டிருந்தேன். நான் ஒருவித பதட்டம் கொண்டேன், நான் மறுபடியும் சுட்டேன், கருத்தியல் திட்டத்தை (on paper) பொருத்தவரை அது இலக்கை சரியாக சுடாது. ஐம்பது கெஜ தூரத்தில், ஓ, ஒரு அங்குலத்தில் கால் பாகம் அல்லது அறை பாகத்திற்கு அது இலக்கை அடிக்கும். ஆனால் அதை விட சிறந்த விதத்திலும் சுட முடியும் என்று எனக்குத் தெரியும். எனக்கு தெரிந்த வரைக்குமாக அந்த துப்பாக்கியை எவ்விதமெல்லாம் சீரமைவைச் சரியாக அமைத்து செய்ய முடியுமோ அவை எல்லாவற்றையும் செய்து இயக்கிப் பார்த்தேன், என்னால் அதை சரி செய்ய முடியவில்லை 58. ஆகவே நான் அந்த துப்பாக்கியை எடுத்து பெட்டியில் வைத்து அதை பரிசோதித்துப் பார்க்கவும், அதை மறுபடியும் சரி செய்யவும் விஞ்செஸ்டர் கம்பெனிக்கு அனுப்பினேன். அவர்கள் எனக்கு ஒரு அருமையான கடிதத்தை எழுதினர், அதை நான் என் கோப்பில் வைத்துள்ளேன். அக்கடிதத்தில், "ரெவெரெண்ட் பிரன்ஹாம், அந்த - அந்த துப்பாக்கி இருபத்தைந்து கெஜ தூரத்தில் தான் இயங்கும். அது மாடல் 75 துப்பாக்கி. அது இலக்கு நோக்கி சுடுகின்ற ஒரு துப்பாக்கி அல்ல அது வெறுமனே கேளிக்கைக்காக உபயோகப்படுத்துகிற ஒரு துப்பாக்கி மாத்திரமே. அதற்கு மேலாக அதை உபயோகப்படுத்த முடியாது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்பொழுது, அதைக் கூறினது அந்த துப்பாக்கியை தயாரித்த விஞ்செஸ்டர் கம்பெனி ஆகும். "அது இருபத்தைந்து கெஜ தூரத்தில் ஒரு இமி அளவு" என்று கூறினது, நானோ ஐம்பது கெஜ தூரத்திலிருந்து ஒன்பது தோட்டாக்களை சரியாக ஒரே துளையான இலக்கில் சுட்டேன் 59. இப்பொழுது, இதோ என்னுடைய கருத்து. என் மனைவி என்னிடமாக, "பில், இதோ பாருங்கள்," என்றாள். மேலும் அவள், "அந்த துப்பாக்கியை தயாரித்த அந்த நிறுவனமே அந்த விதமாக கூறும் போது, அதைக் காட்டிலும் சிறந்த முறையில் அது இயங்காது. அப்படியானால் உங்களால் எப்படி இவ்விதமான கருத்தைக் கூற முடியும்" என்று கூறினாள். 60. அதற்கு நான், "தேனே, இதோ, இது தான் காரியம் ஆகும். அந்த கம்பெனி என்ன கூறினாலும் அதைக் குறித்த எனக்கு அக்கறையில்லை. அது அவ்விதமாக செயல்படுவதை நான் கண்டிருக்கிறேன், அது இயங்கும் என்று எனக்குத் தெரியும்" என்று கூறினேன். 61. மற்ற சகோதரர் அணில்களை சுடுகையில், நான் அங்கே கீழே உட்கார்ந்தேன். அவர்கள் எந்த பகுதியில் சுட்டாலும் சரி, நடுப்பகுதியில், பின்பகுதியில், அல்லது எந்த - எந்த பகுதியில் சுட்டாலும் சரி. நான் ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்து அழுதுக்கொண்டிருந்தேன். அப்போது நான், "தேவனே, நான் மிகவும் நரம்புதளர்ச்சி கொண்டவனாக இருக்கின்றேன். சிறிது நேரம் அப்படியே இருக்க என்னால் முடியவில்லையே. நீர் ஏன் என்னை இப்படி நரம்பு தளர்ச்சி கொண்ட சிறிய மனிதனாக உண்டாக்கினீர்?" என்று கேட்டேன். மேலும் நான்... 62. நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன் என்று உணர்கிறேன், வேதாகமம் எனக்கு முன்பாக உள்ளது. மேலும், ஒரு சத்தம், நான் பேசுவதை நீங்கள் எப்படி கேட்கின்றீர்களோ, அதே போன்று தெளிவாக என்னிடம் "ஒரு நோக்கத்துக்காகவே இவ்விதமாக உண்டாக்கப் பட்டிருக்கிறாய்" என்று கூறினது. ஏனென்றால், அது வரைக்குமாக - உங்களுக்குத் தெரியும், அந்த துப்பாக்கியானது மறுபடியுமாக இலக்குக்கு ஏற்றவாறே குறியை அமைத்திருப்பதால் அப்படியே தான் இயங்கும் என்று உங்களுக்கு தெரியும், ஏனென்றால்..... அது ஒரு தடவை இலக்கு குறிக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டால், அது மறுபடியுமாக அப்படியாகவே அந்த துப்பாக்கியானது அமையும். அது அந்த அதே துப்பாக்கியாகும் 63. ஆதலால், நான் அதைக் காண்கிறேன். பாருங்கள்? ஆகவே இந்த வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, இந்த தூரத்தை அளக்கும் கருவியாகிய (range Finder) அதை எடுத்து அதை சரியாக அமைத்து அந்த அப்போஸ்தலர்கள் கண்ட அதே காரியத்தை, அவர்கள் பிரசங்கித்த அதே சுவிசேஷத்தை நான் காணும் வரைக்குமாக அதை அமைக்கும்போது அது அந்த அதே பிரதிபலன்களைப் (results) பிறப்பிக்கும். ஏனென்றால் அது அவர்களுக்கும் அதே பிரதிபலன்களைப் பிறப்பித்தது. அது ஒவ்வொரு தடவையும் இலக்கை நோக்கி சரியாக சென்றடையும். சபைகள் என்ன கூறினாலும் சரி, மக்கள் என்னவெல்லாம் உரிமை கூறிக்கொண்டாலும் சரி, எப்படியும் அது காரியத்தை செய்து நிறைவேற்றும் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால்...ஆகவே அங்கே தான் நான் நோக்கிப் பார்க்க விரும்புகிறேன், அந்த வார்த்தையை, அது தாமே சரியாக குவிமையத்தை சரியாக அமைத்து (focus) அவர்கள் கண்டிருந்த அந்த அதே தரிசனத்தைக் காண விரும்புகிறேன். அவர்களுக்கு கிரியை நடப்பித்து காண்பித்த அந்த அதே காரியமானது அதே கிரியை செய்யும். அது வியாதியஸ்தரை சுகமாக்கும். அது மரித்தோரை உயிரோடெழுப்பும். அது பிசாசுகளை வெளியே துரத்தும். அவ்விதம் செய்யப்படவேண்டும் என்று தேவைப்படுமானால் தங்கள் சொந்த இரத்தத்தைக் கொண்டு தங்கள் சாட்சியை முத்திரிக்க விரும்புகிற ஒரு மகிமையான சபையை அது பிறப்பித்து வெளிக்கொணரும். ஏனென்றால், நீங்கள் எதை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் நடக்கின்றது. 64. அந்த அந்த துப்பாக்கியை தயாரித்திருந்த அந்த நிறுவனம், விஞ்செஸ்டர் கம்பெனி என்ன கூறியிருந்ததோ அதை நான் நோக்கிப்பார்த்திருந்தால், அப்பொழுது நான் அவர்கள் கூறுவதைக் கேட்டிருப்பேன். ஆனால் நானோ வேறே வித்தியாசமான ஒன்றை அறிந்திருந்தேன். 65. இப்பொழுது, நான் சபையை நோக்கிப் பார்த்து, அப்படிப்பட்டதான நாட்கள் கடந்து போய்விட்டது, ஆகையால் அந்த காரியமானது கிடையாது" என்று கூறுவார்களானால், பாருங்கள், நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்று சற்று பாருங்கள்? நீங்கள் இலக்கை விட்டு தூரமாக அகன்றிருப்பீர்கள். பாருங்கள்? 66. ஆகவே அவர் தேவனாக இருப்பாரென்றால், இன்னுமாக அவர் தேவனாக இருக்கின்றார். அவர் எப்போதுமே தேவனாக இருந்தார் மேலும் அவரால் தேவனாக இருப்பதைத் தவிர வேறே எந்த ஒன்றாகவும் அவரால் இருக்க முடியாது. ஆகவே அவர் தேவன், நித்தியமானவர். ஆதலால், நாம் தாமே அந்த இலக்கை மாத்திரமே நோக்கிப் பார்க்க விரும்புகிறோம்; சபையானது சுடும் குறியாக வைத்திருக்கின்ற இலக்கை அல்ல, ஆனால் கிறிஸ்து சுடும் குறியாக எந்த இலக்கை வைத்து சுடுகின்றாரோ அந்த இலக்கு தான் நமக்கு அவசியம். 67. "அந்த அதே இயேசுவாகிய கிறிஸ்து தாமே பிரசன்னமாகும்படிக்கு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம். அவர் தாமே பூமியில் இருந்த போது, அவர், "இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், உலகம் முடிவு பரியந்தம் உங்களுடனே கூட இருப்பேன்" என்று கூறினார். வார்த்தையானது இலக்கை அடிக்கும்படிக்கு செலுத்துகின்ற அந்த அவர் தாமே, வார்த்தையாக இருந்து, வார்த்தையை சரியாக இலக்கை நோக்கி நேர்ப்படுத்தி அடிக்கச் செய்கின்றவராக அவர் தாமே, அந்த அதே கர்த்தராகிய இயேசு இங்கே இந்த காலை வேளையிலே பரிசுத்த ஆவியாக இருந்து, நம்முடைய எண்ணங்களை நேராக செலுத்தவும், சரியாக, குவிமையத்தை சரியாக அமைத்து பார்ப்பதுபோல நம் காரியங்கள் சரியாக தம்முடைய வார்த்தையை நோக்கிப் பார்க்கவும், நம் பார்வையானது ஒரே ஒரு உண்மையான ஜீவிக்கின்ற தேவனை நோக்கி அமைக்கப்படவும், ஒரே நோக்கத்துக்காகவும், ஒரே குறிக்கோளுக்காகவும் இருக்கும்படிக்கு செய்திருக்கின்றார். ஆகவே அதை அவர் செய்யும்படிக்கு நாம் தாமே விடுவோமானால், அவர் தாமே வார்த்தையை குவிமையத்தை அமைத்து சரியாக காரியத்தை நோக்கி செலுத்தப்படும்படிக்கு அமைத்து அவர் தாமே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கின்றார் என்று நிருபணமாகும் படியாக அப்படியாக குறியை சரியான இடத்தை நோக்கி செலுத்துவார். நீங்கள் எதை நோக்கிப் பார்க்க விரும்புகிறீர்களோ அதைப் பொறுத்து தான் காரியமானது சார்ந்திருக்கின்றது. 68. நாம் தாமே நம்முடைய ஜீவியங்களை சரியான குவிமையத்தைக் கொண்டு செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். யாரோ ஒருவர் கூறுவதை வைத்துக்கொண்டு அல்ல, ஆனால் நம்முடைய ஜீவியங்களை அவரை நோக்கிப் பார்க்கும்படிக்கு சரியாக குவிமையத்தை அமைத்து நோக்கிப் பார்க்க வேண்டும். பாருங்கள்? நாம் தாமே நம்முடைய ஜீவியங்களை வார்த்தையுடன் நேர் வரிசைப்படுத்தி வைப்போமானால், அப்பொழுது அந்த வார்த்தையும் மற்றும் நம்முடைய ஜீவியமும் அதே வகையான ஒன்றாக ஆகிவிடும். "நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு அளிக்கப்படும். நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால் இந்த மலையைப் பார்த்து, 'இடம்பெயர்ந்து செல்' என்று நீங்கள் சொன்னதைக் குறித்து உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல், நீங்கள் சொன்னது நடந்து நிறைவேறும் என்று விசுவாசிக்க மாத்திரம் செய்வீர்களானால், நீங்கள் சொன்னது நிறைவேறும்படிக்கு பெற்றுக்கொள்வீர்கள்" என்று அவர் கூறினார். ஓ, என்னே! "நான் சொன்னது என்றல்ல; நீங்கள் என்ன கூறினீர்களோ அதை நீங்கள் செய்யப்படும்படி பெற்றுக்கொள்வீர்கள்," ஏனென்றால் நீங்களும் அவரும் ஒரே வகையாக ஆகிவிடுகிறீர்கள். ஏனென்றால், கிறிஸ்துவின் சிந்தை உங்களுக்குள் இருக்கின்றது. கிறிஸ்துவுக்குள் இருந்த அந்த சிந்தை பிதாவின் வார்த்தையை நிறைவேற்றும்படிக்கு இருந்தது. அவரே அந்த வார்த்தையாக இருந்தார். உங்களுக்கு புரிகின்றதா. அப்போது நீங்களும் மற்றும் வார்த்தையும் ஒன்று சேர்ந்து குவிமையத்தை அமைத்து வைத்துள்ளீர்கள். நீங்கள் தேவனின் ஜீவிக்கின்ற தனியொரு பொருளாக, அலகாக (unit) ஆகிவிடுகிறீர்கள். எவ்வளவு மகத்துவமான ஒன்று! 69. ஒரு காலம் இருந்தது, மனிதனின் பாவங்கள்..... தேவன் முன்பாக மனிதன் பாவம் செய்த போது, அவன் அந்த பெரிய பிளவைக் கடந்தான். ஒரு எழுத்தாளன் இங்கே கூறியுள்ளபடி, "அவர் கடைசி நாட்களில் இரட்சிப்புக்காக, அதை நோக்கிப் பார்த்தவர்களுக்காக அவர் தோன்றினார்' என்று எழுதினது போல இப்பொழுது, இந்தப் பெரிய பிளவை மனிதன் கடந்தான், திரும்ப செல்வதற்கான எந்த ஒரு வழியையும் அவனுக்கு இல்லாதபடிக்குச் செய்துவிட்டான். அவனால் மறுபடியுமாக திரும்பிச் செல்ல முடியவில்லை, ஏனென்றால் அவனுக்கும் தேவனுக்கும் இடையில் இருந்த அந்த பிளவை அவன் கடந்திருந்தான். 70. தேவன், இரக்கமும் கிருபையும் நிறைந்தவராக, ஒரு பதிலீடை (substitute) எடுத்தார், அது ஒரு ஆட்டுக்குட்டி அல்லது ஒரு மிருகம் ஒரு பதிலீடான மரணமாக செலுத்தப்படுதல் என்பதே. "காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தம்" என்று இங்கே எபிரெயர் கூறுவது போல, இதற்கு முன்னர் நான் வாசித்தபடியே, "அவைகளினால் பாவத்தை எடுத்துப்போட முடியாது." அது பாவத்தை மூட மாத்திரம் செய்தது. அது கிருபாதாரபலியாக இருந்தது, அது உண்மை, ஆனால் அது பாவத்தை மூடினது, அவ்வளவுதான், ஏனென்றால் அது சுத்த மனசாட்சியுடனே பேசினது, பாவத்தை சுத்தம் செய்து அதை பிரித்து தள்ளிப்போட்டு என்றென்றுமாக அப்புறப்படுத்துகின்ற அந்த இரத்தமானது எப்போது வரும் என்று அது எதிர்நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தது. 71. இப்பொழுது, இயேசு வந்த போது, அவர் ஒரு மனிதனாக மாத்திரம் இருக்கவில்லை. திரித்துவத்தின் மூன்றாவது நபராக மாத்திரம் அவர் இல்லை. அவர், அவர் தேவனாக இருந்தார். அவர் தாமே தேவனாக இருந்தார். அவர், இம்மானுவேல் ஆவார். தேவனுடைய இரத்தத்தால் நாம் இரட்சிக்கப்பட்டோம்" என்று வேதாகமத்தில் நமக்கு போதிக்கப்பட்டுள்ளது. தேவன் தாமே நம்மில் ஒருவராக ஆனபோது, அவர் அவர் தாமே தம்முடைய - தம்முடைய தம்முடைய - தம்முடைய தாம் என்னவாக இருந்தாரோ அதிலிருந்து தம்முடைய கூடாரத்தை அவர் மாற்றிக்கொண்டார். அவர் கீழே இறங்கி வந்தார், மகிமையிலிருந்து தம்மை தாழ்த்திக்கொண்டார், ஒரு மனிதனானார். இனச்சேர்க்கையின்றி பிறந்தார், தாம் ஜீவிக்கும்படியாக தமக்கென்று ஒரு சரீரத்தை சிருஷ்டித்துக்கொண்டார். இம்மானுவேல், தேவன் நம் மத்தியில் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டார், வார்த்தை நம் மத்தியில் மாம்சமானது, நம்முடனே வாசம் செய்தது, இந்த இரத்தத்தை சிந்துதலின் மூலமாக குமாரர்களை மீட்டு தேவனிடமாக திரும்பும்படியாக அப்படிச் செய்தார். 72. அந்த சரீரமானது, நிச்சயமாக, கிறிஸ்துவாக இருந்தது. அது அபிஷேகிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆகவே கிறிஸ்து என்றால், "அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர்" என்றிருந்து, அவர் தாமே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருந்து, அவர் அந்த வார்த்தையாக இருப்பாரானால், அப்படியானால் வார்த்தை தாமே அந்த அபிஷேகம் ஆகும். "நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் இருக்குமானால், அப்பொழுது நீங்கள் கூறுவதெதுவோ." அது தாமே தேவனுடைய வார்த்தை ஆகும், அந்த அபிஷேகிக்கப்பட்ட வார்த்தை, அது தானே காரியத்தை நடப்பிக்கிறது. 73. இப்பொழுது, நான் ஏற்கெனவே கூறின விதமாக, ஒரு காலத்திலே ஒரு பெண், தன்னுடைய வெள்ளை நிற பொருளின் மேல் ஒரு கறை இருக்கக்கண்ட போது, அவள்... அந்த கறையைப் போக்க எந்த ஒரு வழியும் இல்லாதிருந்தது. எண்ணைப் பசை, கிரீஸ் மீது என் தாயார் பால் சேர்க்காத காபியை அதன் மீது ஊற்றி, ஏதோ ஒரு பொருளின் மீது படிந்திருந்த கறையை போக்க முயற்சி செய்ததை நான் நினைவு கூறுகிறேன். ஒரு காலத்தில் என் தாய் அந்த பழைய டர்பண்டைன் பாட்டில் மூலம் அந்த கறையை அகற்ற முயற்சி செய்வார், நிலக்கரி எண்ணெய் மேலும் இன்னும் பலவற்றை, எடுத்து துணியில் உள்ள கறையைப் போக்க, அந்தக் கறையை துவைத்து அகற்ற முயற்சி செய்த ஒரு சமயத்தை நான் நினைவுகூறுகிறேன். ஆம், அந்த கறையை முற்றிலுமாக அகற்றவே முடியாது. அதன் சுவடானது இன்னும் அப்படியே இருக்கும். அதை ஒரு அடையாளமாக, வெள்ளாடுகள் மற்றும் ஆட்டுக்குட்டியின் இரத்தத்துக்கு அடையாளமாக நான் எடுக்க விரும்புகிறேன். 74. இப்பொழுது, அவர்கள் வெண்மையாக்கும் திரவம் (bleach) என்னும் ஒரு பொருளை தயாரித்துள்ளனர். அந்த வெளிறச் செய்யும், அந்த வெண்மையாக்கும் திரவம், க்ளோராக்ஸ் அல்லது வேறே எந்த ஒன்றாக இருந்தாலும் சரி, அந்த வெளிறச் செய்கின்ற திரவமானது தயாரிக்கப்பட்டுள்ளது. அது தாமே, இந்த காலையிலே, இங்கே ஒரு தொட்டி நிறைய வெண்மையாக்கும் திரவத்தை நான் அங்கே வைத்து அதில் ஒரு சிறு துளி கறுப்பு மையை அதில் போடுவேனானால் எப்படி இருக்கும்? அதை ஒரு நிமிடத்திற்கு சற்று ஆராய்வோம். அந்த கறுப்பு மை என்ன? அதில் பெரும்பான்மையானது தண்ணீர் ஆகும். ஆனால், அந்த நிறம், அந்த நிறம் எங்கிருந்து வந்தது? அந்த நிறத்திற்கு ஒரு ஆரம்பம் இருக்க வேண்டும். அது ஒரு சிருஷ்டிப்பு என்று நமக்கு தெரியும். ஆகவே ஒரு சிருஷ்டிப்பைக் கொண்டு அது ஆரம்பித்தது என்றால், அது ஒரு சிருஷ்டிப்பு ஆகும் முன்னர் ஒரு சிருஷ்டிகரிடமிருந்து அது வந்திருக்க வேண்டும். 75. இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் அதன் அர்த்தத்தை என்னால் தெளிவாக உங்கள் முன் கொண்டுவர முடியவில்லை. ஆனால் நான் உபயோகிக்கப்போகும் வார்த்தைகளை சற்று பொறுத்துக் கொள்ளுங்கள், ஆனால் ஒரு காரியத்தை தெளிவாக உங்களுக்கு கொண்டு வரவே நான் விழைகிறேன். ஆம், இப்படியாகக் கூறுவோம், ஆம், அது கீழே துளியாக விழும்போது... 76. இந்த துளி மை, இது ஒரு நோக்கத்திற்காக உள்ளது. அந்த நிறமானது ஒரு நோக்கத்துக்காகவே அந்த நிறமாக ஆனது. அந்த ஒரு துளி மையினாலே உங்கள் மரண சாசனத்தில் கையொப்பமிடலாம். உங்களை மரண தண்டனைக்கென்று மின்சார நாற்காலிக்கு (அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் முறை - தமிழாக்கியோன்) அனுப்பலாம். அல்லது அந்த ஒரு துளி மையைக் கொண்டு உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பு வழங்கலாம். அது இங்கே ஒரு நோக்கத்திற்காகவே வைக்கப் பட்டுள்ளது. நாம் சரியான ஒரு காரியத்திற்காக நாம் அதை உபயோகப்படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். 77. ஆனால், எடுத்துக்காட்டிற்காக, அது முடிவு பெறுகின்றது. நாம் ஒரு துளி மையை எடுத்து தொட்டி நிரம்ப உள்ள வெண்மையாக்கும் திரவத்தில் போடுவோமானால் அந்த மையிற்கு என்ன ஆகின்றது? அங்கு ஒன்றுமே நடைபெறுவதை உங்களால் காண முடியாது, ஆனால் அங்கே நிறமானது இல்லை அந்த நிறமானது சிதறுகின்றது. அது எங்கு சென்றது என்று உங்களுக்கு தெரியாது. ஆம், அது அமிலங்களுக்கு திரும்பினது. ஆம், தண்ணீரானது ஒரு உருவைக் கொண்டதாக இருக்கின்றது, அது H2O என்னும் வேதியியல் குறியுடன், அது திரும்பச் செல்கின்றது, அந்த தண்ணீர், வெண்மையாக்கும் திரவத்தில் உள்ள தண்ணீருக்கு மறுபடியுமாக திரும்பச் செல்கின்றது. ஆனால் இந்த வெண்மையாக்கும் திரவத்தில் உள்ள வேதியியல் கூறானது அதை முற்றிலுமாக சிதறி, அதன் ஒரு சுவடு கூட உங்களால் காணக்கூடாதவாறு அதை மறைத்து விடுகின்றது. அது மறைந்து விட்டது. அது சிதறுகிறது, இப்படியாகக் கூறுவோமானால், அது திரும்பவுமாக அமிலங்களுக்குள் சென்று விட்டது. அந்த அமிலங்கள் எங்கிருந்து வந்தன? அதன் மூலக்கூறைப் பார்த்தால், அது முன் சென்று முன் சென்று அணுக்களிலிருந்து வந்திருக்கும், என்ன? அல்லது, மூலக்கூறிலிருந்து வந்திருக்கும். எந்த மூலக்கூறிலிருந்து? அணுவிலிருந்து வந்த மூலக்கூறிலிருந்து எலெக்ட்ரான் ஆக மாறி, அதிலிருந்து, தொடர்ந்து, தொடர்ந்து வந்துகொண்டிருந்திருக்கும். 78. இதைக் குறித்து சற்று சிந்திப்போமாக. அது அங்கே துவங்கினபோது, அது ஒரு அணுவிலிருந்து அல்லது மூலக்கூறிலிருந்து வந்தது என்று கூறுகிறோம், ஒன்றிலிருந்து நான்கு முறையிலான மூலக்கூறும், மற்றும் ஆறு - ஒன்பது மூலக்கூறும், மூலக்கூறு IH ஆக மாறினது. ஆறு - ஒன்பது என்பதற்கு பதிலாக ஆறு எட்டு என்றிருக்குமானால் எப்படியாக இருந்திருக்கும்? கறுப்பு நிறத்திற்கு பதிலாக இளஞ்சிவப்பு (pink) நிறமாக வந்திருக்கும். அந்த நிறத்தை நிர்ணயிக்க ஏதோ ஒன்று காரியத்தை நிகழ்த்த வேண்டியுள்ளது. அது அணு நான்கு, ஆறு, பதினொன்று இலக்கமாக இருந்தால் எப்படி இருந்திருக்கும்? அது தானே... அது பதினொன்றிற்கு பதிலாக ஆறாக வந்திருக்குமானால் எப்படி இருக்கும், அது பழுப்பு நிறமாக வந்திருக்கும். பாருங்கள்? அது எப்படியாக இருக்கவேண்டும் என்று நிர்ணயித்த ஒன்றிலிருந்து தான் அது வந்தாக வேண்டும். 79. ஜன்னலிற்கு வெளியில் அங்கே உள்ள அந்த பனை மரத்தை சற்று பாருங்கள். அது என்னவாக இருக்கின்றது? அது தாமே அதற்குள்ளாக ஒரு ஜீவனைப் பெற்ற எரிமலை சாம்பல் ஆகும். (எரிமலை வெடித்து சாம்பலாக வெளி வரும் இந்த சாம்பல் பத்தாயிரத்திற்கும் அதிக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திற்கு காற்றினால் எடுத்துச் செல்லப்படும், அதில் நிறைய தாது சத்து பொருட்கள் உள்ளன - தமிழாக்கியோன்) அங்கே அந்த தெருவிற்கு எதிரே பாருங்கள், அங்கே ஒரு யூக்கலிப்டஸ் மரத்தை உங்களால் காண முடிகின்றது. அது என்னவாக இருக்கின்றது? அது ஜீவனைக் கொண்ட எரிமலை சாம்பல் ஆகும். ஆனால் வித்தியாசமான மரமாக உள்ளது. நீங்கள் ஒரு ரோஜா பூச் செடியைப் பார்க்கிறீர்கள். அது என்னவாக இருக்கின்றது? அது ஜீவனைக் கொண்ட எரிமலை சாம்பல் ஆகும். அந்த பூவின் நிறமானது எங்கிருந்து வந்தது? அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆம், அந்த பூவிற்கு வர்ணத்தை அளித்தவர் யார்? இரண்டு மலர்கள் உள்ளன, ஒரு விதமான செடி வகையிலிருந்து வருகின்றன, ஒன்று மஞ்சள் நிறத்தில் உள்ளது, மற்றொன்று சிகப்பு நிறத்தில் இருக்கின்றது. இரண்டுமே அந்த சிறு விதையிலிருந்து வருகின்றன. ஆகவே, அந்த நிறமானது எங்கிருந்து வருகின்றது? அதில் ஒரு பாகம் பச்சையாகவும், ஒரு பாகம் வெள்ளையாகவும், ஒரு பாகம் சிகப்பாகவும், ஒரு பாகம் மஞ்சளாகவும் உள்ளது, அந்த நிறமானது எங்கிருந்து வந்தது? அந்த அதே இடத்தில் அதே சூரியன் தான் பிரகாசித்தது. ஆகவே நிறத்தை நிர்ணயம் செய்கின்ற ஒன்றானது இருக்க வேண்டும். அது இயற்கையான ஒரு பொருளாகும். ஆகவே எங்கோ ஓரிடத்தில் சிருஷ்டிப்பிலிருந்து வந்திருக்கவேண்டும். இப்பொழுது கவனியுங்கள், அதைச் செய்வது எது? அதை பார்ப்போமானால் நேராக ஆரம்பத்திற்கு செல்கின்றது, ஒரு சிருஷ்டிகரிடமிருந்து ஆரம்பிக்கின்றது. 80. அப்படியானால் பாவமானது ஒரு மானிடப் பிறவியின் மீது ஒரு கறையை வைக்குமானால், மோசே, ஒரு ஆட்டுக்குட்டியை பலியாக செலுத்தி, தேவனுடைய சத்தத்தை - எடுத்து..... "நான் என் வார்த்தைகளை உன் வாயில் அருளுவேன்" 81. ஆகவே அவன் அங்கே தேவனுடைய வார்த்தையுடன் புறப்பட்டுச் சென்று "வண்டுகள் உண்டாகக்கடவது" என்று கூறினான். அப்போது எங்கேயும் ஒரு வண்டு கூட இல்லாதிருந்தது. ஆனால் ஐந்து நிமிடங்களுக்குள், ஒருக்கால் ஒரு பழைய பச்சை நிற வண்டு புஸ்ஸ் என்று ரீங்காரமிட்டு பறக்க ஆரம்பித்திருக்கும். அடுத்த பத்து நிமிடங்களில், ஒருக்கால் அவைகள் ஒரு கஜ சதுர அளவான இடத்திற்கு இரண்டு பவுண்டு வீதம் இருந்திருக்கும். அது என்னவாக இருந்தது? அவருடைய தீர்க்கதரிசியின் வாயினில் தேவனுடைய வார்த்தையாக இருந்தது. தேவனுடைய வார்த்தையானது சிருஷ்டித்துக் கொண்டிருந்தது, ஆனால் அது தாமே சரியானதொரு வகைமுறையிலிருந்து வர வேண்டியதாக இருக்கின்றது. 82. ஆகவே அப்படியானால் தேவனால் ஒரு மனிதனை எடுத்து, ஆட்டுகுட்டிகள் மற்றும் வெள்ளாட்டின் இரத்தத்தைக் கொண்டு, அங்கே ஒரு இணைப்பை ஏற்படுத்தி இணைத்து, ஒரு மனிதனின் வாயைக் கொண்டு தேவனுடைய வார்த்தையானது சிருஷ்டிக்கும் திறனுள்ளதாகச் செய்யும் போது, எவ்வளவாக அவர் தாமே சிருஷ்டிக்கின்றதாக மாத்திரமல்ல. ஒரு காளை அல்லது ஒரு வெள்ளாட்டின் பலியின் வல்லமையைக் கொண்டு செய்தார். ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது, அந்த பாவமானது அறிக்கையிடப்பட்டு தேவனுடைய வெண்மையாக்கும் திரவத்தில் விழுமானால், அந்த சொந்த அது தாமே அந்த கறையை எடுத்துப் போட, அவ்வளவு தூரமாக எடுத்து, மறதிக் கடலிலே போட்டு, அதை இனிமேலும் நினைவில் கொள்ளாதவாறு செய்யத்தக்கதாக தேவனுடைய சொந்த புதிதாக்கும் ஆற்றல் திறன் ஆகும் (creative). 83. ஒரு மனிதன் தன்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு, தேவனுடன் சரியாக ஆகுகையில், அப்போது தேவன் இந்த அறிக்கையின் பாவத்தை தம்முடைய சொந்த இரத்தமாகிய இந்த இரத்தத்தில் போட்டு, அந்த பாவத்தை மன்னிக்கின்றார். பிறகு - பிறகு அந்த மனிதனுக்குள் இருக்க வேண்டியிருந்த அந்த மூல அசலான ஆவியை, தம்முடைய சொந்த ஆவியை அந்த மனிதனுக்குள் மறுபடியும் பழைய இடத்திலே வைத்து (replace), அவனை தேவனுடைய குமாரனாக ஆக்குகின்றார், அப்படியானால் சபைக்குள் எப்படியாக அந்த சிருஷ்டிக்கும் வல்லமையானது எவ்வளவாக இருக்க வேண்டியதாயுள்ளது! பாருங்கள்? அது பாவத்தின் சுவர் ஒவ்வொன்றையும் உடைத்தெறிகிறது. அது உடைத்துப் போடுகிறது. பாருங்கள்? 84. "அந்த வார்த்தைகள் முன்பு வேறொரு காலத்திற்குரியது" என்று இன்றைக்கு மக்கள் கூற முயற்சிக்கின்றனர். ஆம் அப்படி தான், நீங்கள் இன்னுமாக அந்த இரத்தத்தின் கீழாக இல்லாமல் அதற்கு வெளியே இருப்பீர்களானால் அப்படி தான். 85. ஆனால் நீங்கள் அந்த இரத்தத்தின் கீழே இருக்கும் போது, அவருடைய வார்த்தையினால் இருக்கும் தேவனுடைய வல்லமையானது அப்படியே மாறாததாக இருக்கின்றது. அது அதே விதமாகத் தான் இருந்தாக வேண்டும். ஆட்டுக்குட்டி மற்றும் மிருகங்களின் இரத்தத்தின் மூலமாக அதை அவரால் செய்ய முடியுமானால், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைக் குறித்தென்ன? 86. என்னால் அதைச் செய்ய இயலும். நாம் நம்முடைய ஜீவியங்களை சரிசமமான நிலையில் ஒருங்கிணைத்து, தேவனுடைய வார்த்தையை நோக்கி குவிமையத்தை அமைத்துப் பார்ப்பது போல நாம் நம் பார்வையை தேவனுடைய வார்த்தைக்குள்ளாக செலுத்த வேண்டும். ஒரு புகைப்படக் கருவியை எடுத்து சரியாக குவிமையத்தை அமைத்துப் பார்த்து சரியாக படத்தை எடுக்க முடியுமா என்று பார்த்து புகைப்படக் கருவியால் படம் பிடிக்கின்றோம், அப்பொழுது ஒரு உண்மையான தத்ரூபமாக புகைப்படம் நமக்கு கிடைக்கின்றது. அதைத் தான் நாம் செய்ய வேண்டும், நம்முடைய ஜீவியங்களை நேராக குவிமையத்தை அமைத்து இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக செலுத்த நாம் விரும்புகிறோம், அதினாலே கிறிஸ்துவும் நீங்களும் அந்த அதே நபராக ஆகி விடுகிறீர்கள். நீங்கள் நீதியுள்ள இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே தேவனுக்கென்று சுவீகார புத்திரனாக இருக்கின்றீர்கள். 87. அப்பொழுது சபையானது எந்த ஒரு முரண்பாடும் இல்லாமல், எந்த ஒரு சேதமும் இல்லாமல், எந்த ஒரு தீங்கும் இல்லாமல், சந்தேகங்கள் இல்லாமல் - இல்லாமல், நுணுக்கமான ஐயப்பாடும் கூட இல்லாமல், முரண்பாடு இல்லாமல் தொடர்ந்து அசைந்து முன் சென்று கொண்டிருக்கும். அது தேவனுடைய வார்த்தையின் வல்லமையில் முன் சென்று, அதற்கு தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கின்ற ஒவ்வொரு தெய்வீக ஆசீர்வாதத்தையும் வெளிக்கொணர்ந்து காண்பித்துக்கொண்டிருக்கும், அது அதை மாத்திரம் செய்தால் போதும். 88. நாம் நம்முடைய ஜீவியங்களை நிலை அமைத்து பிறகு அவரைப் பார்த்து, அவரை மாத்திரமே பார்த்து, யாரோ ஒரு பிஷப்பையோ, யாரோ ஒரு பெரிய மனிதனையோ அல்லது நாம் ஒரு மாதிரியாக ஏதோ ஒன்றை எடுத்து கொள்வதோ அல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவையே பார்ப்போமானால். ஏதோ ஒரு ஸ்தாபனத்தையோ, யாரோ ஒரு போப்பாண்டவரையோ, அல்லது - அல்லது காண்டர்பரியின் பிரதான அத்யட்சகரையோ அல்லது யாரோ ஒரு "தெய்வீக மனிதன்" என்று பூமியில் நாம் அழைக்கின்ற ஒருவரைப் பார்ப்பது அல்ல. ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவை மாத்திரமே நோக்கிப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அவரே அந்த வார்த்தையாக இருக்கின்றார். மேலும் அந்த..... 89. ஆபிரகாம், அவன் ஒரு அந்நிய தேசத்திலே பரதேசியாக திரிந்து அந்த வாக்குத்தத்திற்காக நோக்கிப் பார்க்கும்படிக்கு அவனிடமாகக் கூறப்பட்ட போது, அவன் அந்த வாக்குத்தத்தத்தை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. கிறிஸ்தவர்கள் காணக்கூடாததை நோக்கிப் பார்க்கின்றனர். 90. நினைவில் கொள்ளுங்கள், உங்களுக்கு ஐந்து புலன்கள் அளிக்கப் பட்டுள்ளது. பார்வை என்பது அந்த புலன்களில் ஒன்றாகும். உங்கள் பார்வை எல்லா காரியத்தையும் பார்க்காது என்று உங்களுக்கு நான் நிரூபித்துக் காண்பிப்பேன். இங்கே, இக்காலையில், சரியாக இப்பொழுது இந்த அறையில், உயிரினங்களின் உருவமைப்பானது இருக்கின்றது. இந்த அறையில் பிரத்யேகமான ஜீவிக்கின்ற குரலொலிகள் இருக்கின்றன. உங்களால் அதை நம்பமுடியவில்லை என்றால், நீங்கள் சென்று தொலைக்காட்சி பெட்டியை போட்டு நாடெங்கிலும் உள்ள மக்கள் சரியாக இங்கே இக்காலையில் உருவமைப்பாக இந்த அறையில் காண்பிக்கப்படுவதைப் பாருங்கள். அவர்களுடைய உருவமைப்பும் அவர்களுடைய உயிருருவும் இந்த அறையில் கடந்து செல்கின்றன. அது உண்மையல்லவா? ஏன்? அதை அறிந்து கொள்ள இருக்கின்ற ஒரே வழியானது, ஒரு ஒலிப்பரப்பு கருவி ஆகும், அந்த காரியங்களை எடுத்து, தத்ரூபமாக காண்பிக்கின்ற ஒரு கருவியாகும். 91. ஆகவே இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று சபையானது அறிந்து கொள்ள இருக்கின்ற ஒரே வழியானது, அந்த ஒலிபரப்புக் கருவியான இரத்தத்திற்குள்ளாக செல்வதே ஆகும், அந்த பரப்பனுப்பீட்டுக் கருவியாகிய (transmitter) இரத்தம் தாமே நம்முடைய பாவங்களை எடுத்து அப்பாலே நோக்கி செலுத்தி அனுப்பிவிடுகிறது, நம்மை பிளவை கடந்து கொண்டு வந்து, தேவனுடைய பிரசன்னத்துக்குள்ளாகச் சேர்க்கின்றது, அப்போது நாம் தேவனுடைய குமாரர்களாக இருக்கின்றபடியால் அவர் நமக்குள்ளாக தம்மைத் தாமே பிரதிநிதித்துவப்படுத்துக்கின்றார். ஓ என்னே ஒரு மகத்தான காரியம் அது! இக்காலையிலே நாம் தாமே அதை நோக்கிப் பார்ப்போமானால், இன்று உலகில் உள்ள காரியங்களின் வித்தியாசங்களை நாம் மறப்போம், மற்றும் ஏனைய மக்கள் எதிர்பார்த்து நோக்கிப் பார்க்கின்ற காரியங்கள், மற்றும் பெரிய எண்ணிக்கைகள் மற்றும் இன்னவைகளை நாம் மறப்போம். "விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி நாம் பார்க்கின்றோம்." 92. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், முழு கிறிஸ்தவ சர்வாயுதவர்க்கமானது இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றாகும், நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருந்தால் அப்படி தான். 93. "காண்பது தான் விசுவாசித்தல்" என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால் நீங்கள் ஒருபோதும் ஒரு கிறிஸ்தவனாக இருக்க முடியாது. 94. "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப் படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." நீங்கள் கிறிஸ்தவராக இருந்து காரியத்தை காணவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒருவராக இருக்க முடியாது. தேவனுடைய முழு சர்வாயுதவர்க்கம் இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றாகும். அன்பு, சந்தோஷம், சமாதானம், விசுவாசம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம், தயவு மற்றும் பரிசுத்த ஆவி, இவை எல்லாமே காணப்படக்கூடாதவைகளாகும். ஆகவே ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய கண்களைக் கொண்டு காண்பதை ஒருபோதும் நோக்கிப் பார்ப்பதில்லை. தன்னுடைய விசுவாசத்தைக் கொண்டு எதைக் காண்கிறானோ அதையே அவன் நோக்கிப் பார்க்கின்றான். 95. அவனுடைய விசுவாசம் ஒரே ஒரு காரியத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்க முடியும், அது தான் வார்த்தை ஆகும். ஆமென். இப்பொழுது சத்தமிடுகின்ற பாப்டிஸ்ட் போல உணருகிறேன். ஆம், ஐயா. பாருங்கள்? நீங்கள் அந்த வார்த்தைக்கு செல்லும்போது, அது ஜீவிக்கின்ற ஒன்றாகும். அது தான் வார்த்தை ஆகும். உங்கள் சிந்தையும் மற்றும் கண்களும் அந்த வார்த்தைக்கு பார்வையை சரியாக குவியமைத்து வைத்து (focus) ஒரு சேர ஒன்றாக்கி நோக்கிப் பார்த்து, தேவன் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்பதை திட்டமாக நீங்கள் காணும் வரைக்குமாக சரியாக அமைத்துப் பார்ப்பீர்களானால், என்ன ஒரு அற்புதமான காரியமாக அது இருக்கும். 96. ஆபிரகாம் அதைக் கண்டான். பாருங்கள்? அந்த வாக்குத்தத்தின் பேரில் இருக்கின்ற எந்த ஒரு தவறான புரிந்து கொள்ளுதல் ஒன்றையும் அவன் நோக்கிப் பார்க்கவில்லை. அவன் நோக்கிப் பார்த்து "இதோ பார், எனக்கு எழுபத்தைந்து வயதாகிவிட்டது. இந்த - இந்த விதமான ஒரு சத்தம் என்னிடமாக பேசினது, என் மனைவியின் மூலமாக நான் ஒரு குழந்தையைப் பெறப்போகிறேன் என்று கூறினது. இதோ அவளுக்கு அறுபத்தைந்து வயதாகிவிட்டது, அவளுடைய ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு நின்று பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதே?' என்று கூறியிருப்பானால் எப்படியாக இருந்திருக்கும். அவன் என்ன செய்திருப்பான். ஆனால் அவன் என்ன செய்தான்? இயற்கைக்குரிய காரியங்கள் எப்படியாக இருந்ததைக் குறித்து ஒருபோதும் அவன் தனது கவனத்தை செலுத்தவில்லை. தேவன் என்ன கூறினாரோ அதையே தான் அவன் நோக்கிப் பார்த்தான். தேவன் கூறினது அவனுக்கு அவ்வளவு தத்ரூபமாக ஆகி, அதனாலே தேவன் கூறினதை மாத்திரமே அவனால் பார்க்க முடிந்தது, வேறே எந்த ஒன்றையும் அவனால் பார்க்க முடியவில்லை. அவன் தன் வீட்டை விட்டான். எல்லா அவிசுவாசத்தினின்றும் அவன் தன்னை வேறு பிரித்துக்கொண்டான், அவனை இழுக்கும் எதினின்றும் அவன் தன்னை வேறு பிரித்துக்கொண்டான். தான் தனியாக நடக்கவேண்டும் என்பதற்காக அவன் தன்னையே வேறு பிரித்துக்கொண்டான். 97. ஒவ்வொரு அசலான உண்மையான விசுவாசியும் அதைத் தான் செய்யவேண்டியவர்களாக உள்ளனர். இந்த சந்தேகப்பேர்வழிகள் மற்றும் அவிசுவாசிகளிடமிருந்து உங்களை வேறு பிரித்துக்கொண்டு கிறிஸ்துவுடனே நடவுங்கள். அது, அது தாமே உங்களுக்கு ஜீவன் ஆகும். 98. ஆகவே ஆபிரகாம் அப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்தான். இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னர், அவன் இன்னுமாக அந்த அதே வாக்குத்தத்தத்தை விசுவாசித்துக்கொண்டிருந்ததை நாம் காண்கிறோம். ஏன்? அவன் தன்னுடைய குவியமைப்பை - சிந்தையை தேவனுடைய வார்த்தையைக் கொண்டு நேராக தேவனுடைய சித்தத்திற்கு குவியமைத்து, அதை விசுவாசித்தான். 99. நாம் தாமே, தேவனுடைய திட்டத்துக்கும், நமக்கென தேவன் வைத்திருக்கும் காரியத்திற்கும், மற்றும் தேவன் நமக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறவைகளுக்கும் நம்மை சரியாக குவியமைத்து நேர்ப்படுத்தி வைத்து மற்ற எல்லாவற்றையும் அப்படியே தனியே விட்டுவிடும்படிக்குச் செய்வோமானால் எவ்வளவு நீண்ட காலமாக இருந்தாலும் சரி, அப்படியே விசுவாசித்துக் கொண்டிருங்கள். 100. இங்கே ரோமர் 4-ல், ரோமர் 4:14-ல் நாம் பார்க்கின்றோம். "தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல்" என்று அது கூறுகின்றது. அவிசுவாசம் அவனை மாசுப்படுத்த அவன் அனுமதிக்கவில்லை, அதை ஒருபோதும் அனுமதிக்கவே இல்லை அவன் ஒரே ஒரு காரியத்தை மாத்திரம் தான் நோக்கிப்பார்த்தவனாக இருந்தான். அது என்னவென்றால், அவனிடம் பேசின அந்த சத்தம். 101. சபையும் கூட இன்றைக்கு அதைத் தான் செய்யவேண்டியதாக ருக்கின்றது. ஒரே ஒரு காரியத்தை மாத்திரமே நோக்கிப்பார்க்க வேண்டும், அந்த சத்தத்தை, நம்மிடம் பேசிக்கொண்டிருக்கின்ற அந்த தேவனுடைய வார்த்தையை நோக்கிப்பார்க்க வேண்டும். சபைகளும் மற்றும் மக்களும் எந்த விதத்திலும் பேசலாம். ஆனால், அந்த சத்தத்தை நோக்கிப் பாருங்கள். நாம் எதை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்? 102. அவனிடம் பேசின அந்த சத்தத்தை அவன் நோக்கிப் பார்த்தான். "அந்த சத்தத்திற்கு முரண்பாடாக இருந்த எல்லாவற்றையும் அவன் இல்லாதவைகளாகவே பாவித்தான்.' ஆனாலும் இன்னுமாக பார்க்கபோனால், நோவாவின் காலத்தில் இருந்தது போல அது உலகத்தோடு நேர்ப்பட இல்லாமல் மழுங்கியதாக தெளிவான ருத்தோற்றதிற்கு மிகவும் அப்பாலே இருந்தது. அது காட்சிக்கு அப்பாலே இருந்தது. 103. ஏன் அப்படி இருந்தது? நோவாவின் காலத்தில் அங்கே மேலே மழை என்பது இருக்கின்றது என்று அவர்களால் நிரூபிக்க முடியவில்லை ஆனால் நோவா அதை அறிந்திருந்தான், தேவன் அதைக் கூறியிருந்தால், அவராலே அங்கே மேலே மழையை வைக்க முடியும். 104. தன் சரீரம் ஏறக்குறைய செத்துப்போன நிலையில் இருந்தது என்று ஆபிரகாம் அறிந்திருந்தான், ஆனால் அவன் தன் சரீரத்தைக் குறித்து ஒன்றுமே எண்ணாதிருந்தான். சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதை எண்ணாதிருந்தான். ஒரு வாலிபப் பெண்ணாக சகோதரி முறையில் இருந்த அவளை அவன் விவாகம் செய்திருந்தான், இவ்வளவு வருடங்களாக அவளுடனே வாழ்ந்திருந்தான். மேலும் இப்பொழுது அவளுக்கு தொண்ணூறு வயதாகியிருந்தது, அவனுக்கு நூறு வயதாயிருந்தது. ஆனால் அவன் அதைக் குறித்து சிந்தித்துக் கூட பார்க்கவில்லை. இந்த காரியமானது அவனுடைய சிந்தையில் கூட வரவில்லை ஏன்? அவன் எல்லா அவிசுவாசத்தை பார்வை வரிசையிலிருந்து அகற்றி விட்டிருந்தான். ஓ, மகிமை! 105. அதைத் தான் சபையும் செய்யவேண்டியதாக இருக்கின்றது. சபையின் ஒவ்வொரு அங்கத்தினரும் அதைத் தான் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றனர், எல்லா சந்தேகத்தையும் பார்வையின் வரிசையிலிருந்து அகற்ற வேண்டும். அந்த வார்த்தையை மாத்திரமே நோக்கிப் பார்க்க வேண்டும். அது வாக்குத்தத்தம் செய்துள்ளது. தேவன் அவ்விதம் கூறியுள்ளார். அந்த விதமாகத் தான் அது இருக்கவேண்டியுள்ளது. 106. "நம்புவதற்கு ஏதுவில்லாதிருந்தும் அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தை குறித்து அவன் அவிசுவாசமாய் தடுமாறாமல் (staggered) விசுவாசத்தில் வல்லவனானான்" என்று வேதாகமம் கூறுகின்றது. அந்த அற்புதமானது இன்னும் மகத்தான ஒன்றாக இருக்கப்போகிறதினால் நாளுக்கு நாள் அவன் விசுவாசத்தில் வல்லவனாகிக் கொண்டேயிருந்தான். 107. சிலசமயங்களில் நம்மால் ஒரு இரவிலிருந்து மற்றொரு இரவு வரைக்கும் காத்திருக்க முடியவில்லை சில நேரங்களில் ஒரு எழுப்புதலிலிருந்து மற்றொரு எழுப்புதல் வரைக்கும் நம்மால் காத்திருக்க முடியவில்லை. நாம் வெளியே சென்று உலகத்தின் காரியங்களிலே சிக்கிக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். நம்மைக் குறித்து எவ்வளவாக நாம் வெட்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். 108. இங்கே நாம் வந்து அறிக்கையிட்டு எல்லா பாவங்களிலிருந்து நம்மை சுத்திகரிக்கும் இயேசுவின் இரத்தத்திற்குள்ளாக நாம் செல்வதற்கு முன்னால், நாம் நம் பார்வையை சரியாக குவிமையப்படுத்தி அமைத்து, "வானங்களும் பூமியும் ஒழிந்து போம் ஆனால் அவருடைய வார்த்தையோ ஒழிந்துபோவதில்லை" என்று வாக்குத்தத்தம் செய்திருக்கின்ற அந்த ஒரே உண்மையான ஜீவனுள்ள தேவன் தாமே அங்கே நின்று கொண்டிருக்கின்றார் என்று காணும்படியாக பார்வையை அமைத்துப் பார்க்கவேண்டும். அதின் மேலே அப்படியே தரித்து நில்லுங்கள், அப்பொழுது நீங்கள் உபதேசத்தின் காற்றுகளினாலே மேலும் கீழுமாக போடப்பட்டு அல்லல்பட்டுக்கொண்டிருக்க மாட்டீர்கள், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கும், ஒரு ஸ்தலத்திலிருந்து இன்னொரு நிலைக்கும் தூக்கிச் செல்லப்பட மாட்டீர்கள். 109. ஆனால், நீங்கள் எங்கே நிற்கின்றீர்கள் என்று அறிவீர்கள், ஏனென்றால் தேவனுக்கு நேராக உங்கள் பார்வை சரியாக குவியமைத்து செலுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அப்போஸ்தலர் செய்ததைப் போல, உங்கள் சொந்த ஜீவனானது அந்த குறியை நோக்கி செலுத்தப்பட்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அவர்கள் வாழ்ந்தது போலவே நீங்கள் வாழ்வீர்கள். அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட விதமாகவே உங்களுக்கும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்ட அந்த அதே விளைபயன்களை (result) நீங்களும் காண்கிறீர்கள். அது உங்களுக்குள் கிரியை நடப்பிப்பதை நீங்கள் காண்கிறீர்கள். உங்கள் பார்வையானது குவியமைப்படுத்தி செலுத்தப்பட்டுள்ளது. அந்த நிறுவனமானது என்ன கூறினாலும் மற்றும் ஸ்தாபனங்கள் என்ன கூறினாலும் அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. உங்கள் பார்வையானது குவியமைத்து வைக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் நீங்கள் இலக்கை சரியாக பார்க்கிறீர்கள் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆமென். அப்போது நீங்கள் எங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்று உங்களால் அறிந்து கொள்ள முடிகின்றது. நீங்கள் எதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களோ அதைப் பொறுத்து தான் காரியமானது சார்ந்திருக்கின்றது. நீங்கள் யாரோ ஒருவரை நோக்கிப் பார்ப்பீர்களானால், எந்த வழியிலும் நீங்கள் சென்றுவிடுவீர்கள். ஒரு சிறு காற்று வீசுமானால் உடனே நீங்கள் இலக்கிலிருந்து தூக்கி வீசப்படுவீர்கள். ஆனால், ஓ நீங்கள் உங்கள் குவிமையமானது அந்த சரியான இலக்கை நோக்கி அமைக்கப்பட்டிருக்குமானால் எந்த ஒரு காற்றாலும் உங்களை இலக்கிலிருந்து அடித்து தூக்கிச் செல்ல முடியாது. அவ்வளவு தான். எதுவுமே அதை நிறுத்தப்போவதில்லை. தேவன் தாமே அதை தூக்கிச் சென்று... 110. தாவீதின் கவணில் இருந்த சிறு கல்லைப் போல, அது நேராக தான் சேரவேண்டிய இடத்தைச் சென்றடைந்தது. 111. அதே போலத் தான் உங்கள் ஜெபங்களும் சேரவேண்டிய இடத்தை நோக்கி நேராகச் சென்றடையும், ஏனென்றால் அது உங்களை சுத்திகரிக்கின்ற இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் ஏறெடுக்கப் பட்டுள்ள ஜெபம் ஆகும். எந்த ஒரு பாவமும் அல்லது எந்த ஒரு கறையும் உங்கள் மீது எங்குமே இல்லை. அது சரியே. உங்கள் மீது ஒன்றுமே இருக்க முடியாது. அந்த வெண்மையாக்கும் திரவமானது (chlorox) எனக்கும் தேவனுக்கும் நடுவில் இருக்கும் வரைக்குமாக, அவர் எப்படி என் பாவத்தை காணப்போகின்றார்? எப்படி அவரால் பார்க்க முடியும்? 112. நான் ஒரு பாவம் செய்திருந்து, அதை மனப்பூர்வமாக செய்யாதிருப்பேனானால் "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு ஒருவன் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவனாயிருந்தால்" ஆகவே மனப்பூர்வமான பாவம் இல்லை, ஆனாலும் நீங்கள் பாவம் செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் அதை மனப்பூர்வமாக செய்வதில்லை, ஏனென்றால், உங்களுடைய இருதயத்தில், நீங்கள் - நீங்கள் அந்த காரியங்களைச் செய்ய வேண்டும் என்று விழைவதில்லை. 113. ஆனால் நீங்கள் மனப்பூர்வமாக அதைச் செய்வீர்களானால், அது வேறு, அப்படியானால் முதற்காரியமாக நீங்கள் அந்த இடத்திலேயே இருக்கவில்லை என்றே நான் நினைக்கின்றேன். 114. இப்பொழுது, காரியமானது என்னவென்றால், எல்லா பாவக் கறையும் கழுவப்பட்டு விட்டது என்கின்ற நிலைக்கு வந்து விடுகின்றது. அப்பொழுது நீங்கள் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலே மீட்கப்பட்டவர்களாக நிற்கின்றீர்கள். நீங்கள் ஒரு ஆதாமாக இருக்கின்றீர்கள், அவன் விழுவதற்கு முன்னால் எப்படியிருந்தானோ அந்த விதமாக இருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய குமாரனாக இருக்கிறீர்கள், தேவனுடைய சொந்த இரத்தத்தினாலே நீங்கள் கழுவப்பட்டுள்ளீர்கள். 115. ஒரு குழந்தையை பிறப்பிப்பது இரத்தமாகும். இரத்தம் மாத்திரமே அதைச் செய்கிறது. ஆண் இனத்திலிருந்து இரத்தமானது வருகின்றது. இரத்தமானது மனிதனிடத்தினின்று வருகின்றது. பெண், அவள் அதை நிரப்புகின்ற முட்டையை பிறப்பிக்கின்றான். ஆனால் மனிதன் தான் இரத்தப் புரதமணி (hemoglobin), அதிலிருந்து தான் மரபணுவானது வருகின்றது. அந்த மரபணுவில் தான் ஜீவன் இருக்கின்றது. 116. ஆகவே ஏதோ ஒரு சபையிலே பாவ அறிக்கை செய்வதினாலோ அல்லது ஏதோ ஒரு கோட்பாட்டினாலோ அல்லது ஏதோ ஒரு சபை பிரமாணத்தினாலே ஜீவன் வருவதில்லை. ஆனால் நீங்கள் அந்த அந்த மரபணுவாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மறுபடியும் பிறக்கையில் ஜீவனானது வருகின்றது. "நான் செய்கிற கிரியைகளை நீங்கள் செய்வீர்கள். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்.''அதோ அது தான் தேவனின் ஜீவனாகும், தேவனுடைய குமாரனாக, தேவனுடைய இரத்தத்தினாலே பிறந்த ஒன்றாகும். ஆகவே நீங்கள்... இந்த வேதாகமத்தை எழுதின அந்த அதே பரிசுத்த ஆவி தாமே உங்களை மறுபடியுமாக சரியாக சீராக அதை நோக்கி குவியமைத்து காண்பித்து கொண்டு வரும். அவ்விதமாக செய்ய முடிகின்ற ஒரு கோட்பாடோ அல்லது ஒரு ஸ்தாபனமோ இல்லை. தேவன் தாமே உங்கள் கண்களின் காமிரா, புகைப்படக்கருவியை எடுத்து அதை தம் கட்டுக்குள் கொண்டு தேவன் என்னவாக இருக்கின்றார் என்றும், மற்றும் அவருடைய நோக்கம் என்னவென்றும் உங்களைக் காணச் செய்ய முடியும். ஆம், ஐயா. நிச்சயமாக 117. இப்பொழுது, மோசேயைக் குறித்துப் பார்த்தோம். நாம் பார்த்தோம், பின்னர், அவன் அவன் கட்டினான் அவன் இஸ்ரவேலைப் பார்த்தான். அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய மோசே, அவன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். அவன் பார்வோனின் அரசவைகளில் வளர்க்கப்பட்ட ஒருவன் ஆவான். அப்போது அவன் மண் பிசைந்து கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தைப் பார்த்தான். அவர்கள் சிறிதளவான ஆடை டுத்தியிருந்தனர், அவர்கள் முதுகில் சாட்டை அடிகளின் தழும்புகள் இருந்தன, அவர்கள் விடுவிக்கப்பட எந்த ஒரு வழியும் இல்லாதவர்களாக இருந்தனர். ஆனால் மோசே தேவனுடைய வார்த்தையை அறிந்திருந்தான், ஆகவே ஒரு வாக்குத்தத்தத்தைக் கொண்டிருந்த மக்களாக அவன் அந்த மக்களைப் பார்த்தான். அந்த நாளில் இருந்த உலகமானது எப்படியாக அவர்களை கேவலமாக பார்த்தாலும் சரி, மண் பிசைகின்ற கூட்டமாக அல்லது அடிமைகளாக பார்த்தாலும் சரி, ஆனால் மோசே அந்த மக்களை ஒரு வாக்குத்தத்தத்தைக் கொண்டிருக்கின்ற மக்களாகவே அவன் பார்த்தான். 118. அதே ஜன்னலிலிருந்து பார்வோனும் வெளியே பார்த்தான், ஆனால் அவன் அடிமைகளைத் தான் பார்த்தான். 119. மோசே வெற்றியைப் பார்த்தான். ஏன்? அவன் தன் பார்வையை சரியாக குவியமைத்து நோக்கிப் பார்த்தான். அவன் ஒரு இளவரசனாக இருந்தபோதிலும், எகிப்தின் சிங்காசனத்திற்கு வாரிசாக இருந்தபோதிலும், அவன் உலகத்தின் இச்சையிலிருந்து தன் பார்வையை அப்புறப்படுத்தி வைத்திருந்தான். அவன் தான் கொண்டிருந்த ஆற்றலினாலே காரியங்களையும், அழகு மற்றும் அதிகாரம் ஆகியவற்றை பெறவேண்டியவனாக இருந்த போதிலும் அவன் அதின் மேல் தன் பார்வையை நோக்கி அமைக்காமல் அதிலிருந்து தன் பார்வையை அப்புறப்படுத்தி அமைத்திருந்தான். அவன் தன் பார்வையை அதிலிருந்து மாற்றி, குவியமைத்து பார்த்தான், தூரத்திலே தேவனுடைய வாக்குத்தத்தினாலே ஆசீர்வதிக்கப்பட்ட மக்களை பார்க்கும் வரைக்குமாக தன் பார்வையை சரியாக அமைத்தான். அவன் குவியமைத்து பார்த்தான், ஏனென்றால் தேவன் தம்முடைய ஜனங்களை சந்திப்பார் என்று ஆபிரகாமுக்கு அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கின்றார் என்பதை அவன் அறிந்திருந்தான். தான் அந்த நோக்கத்துக்காகவே எழுப்பப்பட்டுள்ளான் என்று அவன் அறிந்திருந்தான், ஆதலால் அவன் தன் பார்வையை குவியமைத்து சரியாக நோக்கிப் பார்த்தான். 120. பார்வோனுக்கு இந்த விதமான ஆற்றல் இல்லாதிருந்தது. அவனுக்கு அது அளிக்கப்பட்டிருந்தது, ஆனால் அவனோ அதை புறக்கணித்தான். அவன் அதை புறக்கணித்த போது, அவனால் தன் பார்வையை சரியாக குவியமைத்து சரியாகப் பார்க்க முடியவில்லை. 121. எந்த ஒரு மனிதனும், தேவனுடைய வார்த்தையை அவன் வேண்டாம் என்று தள்ளின பிறகு, ஒருபோதும் அவனால் திரும்பவுமாக தன் பார்வையை அதன் மேலாக சரியாக செலுத்த முடியாது, ஏனென்றால் உங்களை கிறிஸ்துவுடனே ஒரு தொடர்பில் கொண்டு வருகின்ற வார்த்தையை நீங்கள் வேண்டாமென்று மறுப்பதால் அப்படி ஆகின்றது. அது சரி. ஆகவே. 122. ஆனால், மோசே இந்த ஜன்னலிருந்து எட்டிப் பார்த்தான், அவன் அதை விசுவாசித்தான். ஏன்? மோசே விசுவாசத்தினாலே அதைப் பார்த்தான். அந்த விதமாகத் தான் மோசே பார்த்தான். 123. இப்பொழுது இந்த குறிப்பை சற்று கூர்ந்து கவனியுங்கள். விசுவாசம்! இப்பொழுது இந்த காரியத்தை கிரகித்துக் கொள்ள தவறாதீர்கள். தேவனுடைய சித்தங்களையும் மற்றும் விருப்பங் களையும் பார்க்கும்படியாகவே விசுவாசமானது வடிவமைக்கப் பட்டுள்ளது. அதைச் செய்யத்தக்கதான எந்த ஒரு சிறப்பறிவுத்திறமும் (knowledge) இல்லை விசுவாசம் மாத்திரமே தேவனுடைய சித்தம் என்னவென்பதை கண்டு கொள்ளும்படியாக வடிவமைக்கபட்டு மானிட வர்க்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. 124. ஆகவே நீங்கள் கொண்டிருக்கின்ற உங்கள் விசுவாசத்தை எடுத்து, வார்த்தையுடன் சரியாக அது குவியமைத்து பொருந்தவில்லை என்றால், அப்பொழுது அதை அப்படியே விட்டு விடுங்கள். நீங்கள் தவறான விசுவாசத்தைக் கொண்டிருக்கிறீர்கள். 125. ஆனால் தேவனால் அளிக்கப்பட்ட உங்கள் விசுவாசமானது உங்களை தேவனுடைய வார்த்தையோடு குவியமைத்து சரியாக வைக்குமானால், அப்போது நீங்கள் நேரிடையாக வரிசையில் சரியாக இலக்கை நோக்கி பார்க்கும்படியாக வைக்கப்பட்டுள்ளீர்கள். என்னே! நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மகத்தான மணி நேரம், இந்த மணி நேரத்தில் தேவன் நமக்கு உதவி செய்வாராக. தேவனுக்கு தேவைப்படுகின்றதை காணும்படியாகவே விசுவாசம், வடிவமைக்கப்பட்டுள்ளது! உங்களால் எவ்வாறு அதைக் காண முடிகிறது? அவருடைய வார்த்தையாகிய, அவருடைய வாக்குத்தத் தமாகிய காமிரா, புகைப்படக்கருவியின் மூலமாகவே. இது தாமே இயேசு கிறிஸ்துவின் முழு வெளிப்பாடாகும். 126. அப்பொழுது, உங்களில் இருக்கின்ற அந்த விசுவாசம் இந்த வார்த்தையை நோக்கி உங்கள் பார்வையை குவியமைத்து வைக்கின்ற பொழுது, உங்கள் குவியமைக்கப்பட்ட பார்வையானது எல்லா ஸ்தாபனங்கள், போதகங்கள் மற்றும் எல்லா காரியத்தினின்றும் அப்பாலே புறம்பே தள்ளிப்போடப்படுகின்றது. உங்கள் பார்வையானது நேரடியாக தேவனுடைய வார்த்தையின் மேல் குவியமைக்கப்பட்டு செலுத்தப்படுகின்றது. நீங்கள் நேரடியாக பார்க்கும்படியாக குவியமைக்கப்பட்டு பார்வை செலுத்தப்படுகின்றது. சிறிது சரி செய்தல் மாத்திரம் அவசியமாயுள்ளது. ஆமென். அந்த ஜெபமானது நேராக தேவனுடைய சந்நிதானத்திற்கு பறந்து செல்கின்றது, ஏனென்றால் அதை நிறுத்த எதுவுமே இல்லை. ஆம். அது தான் காரியத்தை நடப்பிக்கிறது, தேவனை நோக்கி நேராக உங்கள் பார்வை அமைக்கப்பட்டு இருக்கும்போது, உங்கள் பார்வைக் குறி குவியமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கையில், அப்போது இலக்கை நோக்கி உங்கள் பார்வையானது செலுத்தப்பட்டு அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். 127. "இது நடக்கக்கூடாத ஒரு காரியம், மற்றும் இது நடக்கவே நடக்க்காது" என்று யாரோ ஒருவர் கூறுவதை நீங்கள் நோக்கிப் பார்ப்பதில்லை. 128. அது நடந்து முடிந்தது என்று அறிந்திருக்கின்ற ஒன்றை நோக்கி தான் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் இலக்கை நோக்கிப் பாருங்கள். அது சரியாக எங்கே அடிக்கின்றது என்று நீங்கள் பாருங்கள். அவைகள் அந்த நாளில் அடிக்குமென்றால், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். உங்களை குழப்பியிருக்கின்ற காரியங்கள் மற்றும் இந்த கோட்பாடுகளிலிருந்து உங்கள் பார்வையை அப்புறப்படுத்துங்கள். வார்த்தைக்கு சரியாக திரும்ப வாருங்கள், பிறகு உங்கள் அவிசுவாசத்தையெல்லாம் அறிக்கை செய்யுங்கள், பிறகு தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியை எடுத்து உங்கள் பார்வைகளை சீராக நேர் பார்வையாக இயேசு கிறிஸ்துவின் மீது செலுத்தும்படிக்காக விடுங்கள். அப்பொழுது நாம் அவரை நோக்கித் தான் பார்க்கின்றோம், யாரோ ஒருவர் கூறுவதை நோக்கிப் பார்ப்பதில்லை. 129. மருத்துவர் என்ன கூறுகின்றாரோ அது கூட இல்லை, அவர் கூறுவது அருமையாக தோன்றலாம். அவர் தன்னுடைய இடத்தில் இருக்கின்றார். சபையானது, அது தாமே.... அது தன்னுடைய இடத்தைக் கொண்டிருக்கின்றது. நாம் அதை மறுக்கவில்லை. ஆனால், அது தாமே, எல்லாமே அதன் இடத்தைக் கொண்டுள்ளது. ஆனால் அந்த துப்பாக்கி சுடும், ஆனால் அது ஒரு போதும் இலக்கை சென்று அடையாது. 130. "இரண்டாவது முறைக்காக கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கின்றவர்கள் மாத்திரமே." அது தாமே இலக்கை அடிக்கின்ற குறியாகும். நீங்கள் எதை நோக்கிப் பார்க்கின்றீர்களோ அதைப் பொறுத்து தான் காரியம் ஆகும். ஆம். 131. இப்பொழுது, இன்றைக்கு, சற்று பாருங்கள், இதைச் செய்வதற்கு தான் விசுவாசமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கான அதே மாறாத விசுவாசமானது அந்த அதே காரியத்தை தான் பார்க்கின்றது. இன்றைய சபையின் விசுவாசமானது தேவனுடைய மாறாத அதே திட்டத்தைக் காணவேண்டியதாக இருக்கின்றது. இப்பொழுது நீங்கள் இதை காணாமல் தவறக்கூடாது என்று நான் விரும்புகிறேன். தேவனால் அழைக்கப்பட்ட ன்றைக்கான சபை நிச்சயமாக தேவனுடைய திட்டத்தைக் காணும், ஏனென்றால் தேவனுடைய திட்டமானது திட்டவரைப்படமான (Blueprint) இதிலே எழுதப்பட்டுள்ளது. ஆகவே பரிசுத்த ஆவியானவர் தாமே, விசுவாசத்தினாலே, அவர் தாமே இதை வாசித்து இதை ஒன்று சேர்த்து அளிக்கின்றார். 132. அப்படியானால் ஒரு மனிதன் தான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டுள்ளான் என்று கூறி, ஒரு காரியத்தை இந்த குறிப்பிடப்பட்ட விதமாக செய்யவேண்டும் என்று வேதாகமத்தில் பரிசுத்த ஆவியானவர் கூறியிருக்க, ஆனால் இந்த மனிதனோ வந்து, "ஓ அதுவா, அது அதி தீவிர மூடபக்தியான ஒரு காரியமாகும்" என்று கூறுகிறான். பரிசுத்த ஆவியானவர் தாமே, உண்மையான அசலான பரிசுத்த ஆவியாக இருக்க, தம்முடைய சொந்த வார்த்தையை மறுதலிப்பாரா? [சபையார் "இல்லை" என்று கூறுகின்றனர்] இல்லை. அது தாமே வார்த்தையுடனே தரித்திருக்கவேண்டும். ஏனென்றால் அது தேவன் ஆகும். பாருங்கள்? 133. நீங்கள் எதை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் எதைக் காண்கிறீர்கள்? நாம் இயேசுவைக் காண வேண்டும். நாம் இயேசு காணும்படியாக இருக்கின்ற ஒரே வழி, வார்த்தையைப் பார்த்தல் ஆகும். இது தான் ஆவியானவருடைய அந்த - அந்த இயற்கையான அடையாளம் ஆகும். நான் என்ன கூற விழைகிறேன் என்று உங்களுக்கு புரிகின்றதா? ஆவி அந்த எழுத்தைத் தான் உயிர்ப்பிக்கின்றது. பாருங்கள்? அது தான் அந்த எழுத்து தான், ஆவி தாமே இந்த எழுத்தை உயிர்ப்பித்து அதை மெய்ப்பித்து தத்ரூபமான நிலைக்கு ஆக்குகின்றது. ஆமாம். 134. விசுவாசத்தினாலே மோசே பார்த்தான். ஆகவே இன்றைக்கு தேவனுடைய திட்டத்தை, காண்கின்ற ஒரு மனிதன், அதே காரியத்தை தான் செய்கிறான், விசுவாசத்தினாலே பார்க்கின்றான். 135. மோசே, பின்னர், இந்த மகத்தான காரியத்தைக் கண்டான். மக்கள் தொல்லையில் அகப்பட்டுக்கொண்ட போது அவன் என்ன செய்தான்? அவன் வெண்கலத்தால் ஒரு சர்ப்பத்தை செய்து, அதை ஒரு கம்பத்தின் மீது தூக்கி வைத்தான். அந்த மக்கள் தங்கள் அவிசுவாசத்தினாலே சர்ப்பங்களால் கடிக்கப்பட்ட போது, அதாவது "இந்த சர்ப்பத்தை நோக்கிப் பார்க்கின்ற எவனும் பிழைப்பான்" என்று கூறினான். கவனியுங்கள். வந்து அதைப் பார்க்க மாத்திரமே செய்த அந்த மனிதன்.... 136. இப்பொழுது, அந்த கம்பு, அது வைக்கப்பட்டிருந்த அந்த கம்பம், அந்த கம்பமானது அங்கே வனாந்தரத்தில் இருந்த மரத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒரு மரத்துண்டாக இருந்தது, ஒருக்கால் அது ஒரு புதர் செடி வகையாக கூட இருக்கலாம், அல்லது இங்கே உங்கள் மத்தியில் இருக்கின்ற ஒரு வகை ஐயர்ன்வுட் (ironwood) மரமாக இருக்கலாம் அல்லது எந்த ஒரு மரமாகவும் இருந்திருக்கலாம். அந்த கம்பம் தானே அதனுடைய இயற்கைப்பிரகாரமான வளர்ச்சியிலிருந்து வேறு பிரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. அந்த கம்பமானது அதன் உள்ளாக மரித்திருந்தது. வெண்கலமானது ஒருக்கால் ரோமர்களின் தலைச்சீராவிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியாக இருந்திருக்கலாம், அல்லது அல்லது அவர்கள் கைப்பற்றின ஒரு பொருளிலிருந்து எடுக்கப்பட்ட ஒன்றாக இருந்திருக்கலாம். அது உருக்கப்பட்டு ஒன்று சேர்த்து ஒரு சர்ப்பமாக செய்யப்பட்டது. 137. மனிதர்கள் அங்கே வந்து அதை ஒரு விக்கிரகமாக, அந்த சர்ப்பத்தை நோக்கிப் பார்க்க வந்திருப்பார்களானால், அவர்கள் ஒன்றையுமே பெற்றுக்கொள்ளவில்லை. 138. ஆனால் உண்மையான விசுவாசி அங்கே வந்து அந்த சர்ப்பத்தை, ஆவிக்குரிய வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தைக் கொண்டு நோக்கிப் பார்த்த போது.... அந்த சர்ப்பம் தானே, அது சர்ப்பத்தின் உருவில் செய்யப்பட்டிருந்தது, பாவமானது ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டது என்பதற்காக பிரதிநிதித்துவமாக அது இருந்தது. அவர்கள் தங்கள் பாவம், தங்கள் அவிசுவாசம், ஏதேன் தோட்டத்தில் இருந்த சர்ப்பத்திலிருந்து ஏற்கெனவே நியாயத்தீர்ப்பின் கீழ் இருந்ததை அவர்கள் கண்டார்கள். அந்த சர்ப்பமானது வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது, அதன் அர்த்தம் தெய்வீக நியாயந்தீர்ப்பு என்பதாகும். பாருங்கள்? 139. அந்த பலிப்பீடம் வெண்கலத்தால் உண்டாக்கப்பட்டிருந்தது, வெண்கலப் பலிப்பீடம், அதன் மேல் தான் பலியானது செலுத்தப்பட்டது; வெண்கலம், தெய்வீக நியாயத்தீர்ப்பு. 140. அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய எலியா, அவன் வானத்தை நோக்கிப் பார்த்த போது, அவனுடைய ஊழியத்தின் நாட்களிலே, மூன்றரை வருடங்கள், அங்கே தண்ணீரே இல்லை - இல்லை அவன், "வானம் வெண்கலம் போல காணப்படுகிறது" என்று கூறினான். அது என்னவாயிருந்தது? தேவனுடைய செய்தியை அவிசுவாசித்த ஒரு தேசத்தின் மீது தெய்வீக நியாயத்தீர்ப்பு, ஏனென்றால் அவர்களுடைய விசுவாசம் மிகவும் மங்கின நிலையில் இருந்ததால், அந்த நாளிலே அவர்களால் அதைக் காண முடியாதிருந்தது. 141. நான் ஆச்சரியமுறுவது என்னவென்றால், நாம் இன்று செய்து வைத்துள்ள இந்த எல்லா ஹைட்ரோஜென்களையும் (hydrogens) ஆக்சிஜென்களையும் (oxygens) மற்றும் வெடிகுண்டுகளையும், மற்றும் காரியங்களையும் பார்ப்போமானால், இவைகளையெல்லாம் பார்த்து இன்னுமாக ஒரு தேசமும், காலமும் வெண்கலம் போல் உள்ளதைக் காணாமல் இருப்பதைக் குறித்து நான் வியப்புறுகிறேன். அது தெய்வீக நியாயத்தீர்ப்பாகும். 142. நாம் நம்முடைய நம்முடைய மூளைத்திறனால் மிகவுமாக ஆழ்ந்து ஊறிப்போயுள்ளோம். நாம் நம் பிள்ளைகளுக்கு கல்வியை அளித்து ஒரு கூட்டம் ரிக்கிக்களை நாம் பெற்றுக்கொள்ளும் நிலைக்கு அவர்களை ஆக்கியுள்ளோம். மேலும் நம்முடைய சபைகளும் மற்றும் காரியங்களும் அப்படியிருக்க பெற்றுள்ளோம். நம்முடைய பையன்கள் வேதாகம கல்லூரிகளுக்கு செல்கின்றனர், வெளி வருகின்றனர், அங்கே செல்கின்றனர், ஏதோ ஒரு பி.எச்டி (Ph.D) மற்றும் எல்.எல்.டி (LLD) கற்றுக்கொள்கின்றனர். நான் உங்களுக்கு ஒன்றைக் கூறட்டும். ஒவ்வொரு முறையும் அவன் ஒரு பட்டத்தை பெறும் போது தேவனிடமிருந்து இன்னும் இன்னுமாக தொலைவில் சென்று விடுகின்றான். 143. தேவன் மிகவும் எளிமையாக இருக்கின்றார். மனிதன் தேவனைக் காண முடியவில்லை என்றால் அதற்கான காரணம், அவன் எளிமையாக ஆகவில்லை என்பது தான் காரியம். யாரோ ஒருவர் "சகோதரன் பிரன்ஹாம், எப்படி நீங்கள் தரிசனங்களை பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார். 144. அது நான் அல்ல. பாருங்கள்? நீங்கள் - நீங்கள் தான் உங்களை காட்சியிலிருந்து வெளியே எடுத்துவிட வேண்டும். தேவன் ஒரு வாக்குத்தத்தத்தை செய்திருக்கின்றார். அந்த வாக்குத்தத்தத்துடனே தேவன் அந்த வாக்குத்தத்தத்தில் அப்படியே தரித்திருக்க வேண்டியவராக இருக்கின்றார். ஆகவே நீங்கள் உங்கள் சொந்த வழியிலிருந்து உங்களை எடுத்து விடுவதற்கு போதிய அளவு எளிமையுள்ளவர்களாக, (simple) இருக்கவேண்டும். 145. "இந்த மனிதன் எங்கள் கல்லூரியிலிருந்து எல்.எல்.டி (L.L.D) பட்டம் பெற்றிருப்பாரானால் மிகப் பெரிய மனிதனாக இருப்பார்" என்று ஒருவர் கூறினார். அப்படி அவர் செய்திருப்பாரானால், அவர் தேவனிடமிருந்து இன்னும் ஒரு படி அகன்று சென்றிருப்பார். 146. "மனிதர்களால் இன்று ஒரு செய்தியை நிலவுக்கு அனுப்ப முடிகின்றது, ஆனால் ஒரு புல்லின் மீது நடக்கின்றான், அதைக் குறித்து விவரி என்றால் அவனால் அதைக் குறித்து கூறமுடியவில்லை" என்று நான் கூறினேன். தேவன் எளிமையில் மறைந்திருக்கின்றார். பாருங்கள்? உங்களால் அந்த விதத்திற்கு எளிமையாக ஆக்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு மனிதன் கல்வியறிவைப் பெறுகின்றான், அவன் அறிந்து கொள்ளும் முதல் காரியம் என்னவென்றால், அவன் மிக மகத்தானவன் என்பதே, அவனால் தன்னை தாழ்த்திக் கொள்ள முடியவில்லை. 147. ஆகவே தேவன் மிக மகத்தானவராதலால், அந்த பாவியிடமிருந்து அவர் தம்மைத் தாமே தாழ்த்தி மற்றும் தம்மை தாமே மறைத்துக்கொள்கிறார். இயேசு அதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினார். அவர், "பிதாவே! வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து கற்றுக்கொள்கின்ற பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்" என்று கூறினார். தேவனை அறிந்துக்கொள்ளுகின்ற வழி எது என்றால் எளிமையாக ஆகுவதேயாகும். மேலே செல்கின்ற வழி கீழே ஆகும். 148. வட துருவம் மற்றும் தென் துருவம் எவ்வழியாக உள்ளது? நீங்கள் அந்தரத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். புரிகின்றதா? 149. மேலே செல்லும் வழி கீழே தான் உள்ளது. "தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். பாருங்கள்? இன்னும் இன்னும் அறிந்து கொள்ள முயற்சி செய்துகொண்டிருப்பதைக் காட்டிலும் நாம் நம்மைத் தாழ்த்த வேண்டும். 150. ஒரு காரியத்தை மாத்திரமே அறிந்து கொள்ளுங்கள் - மற்ற காரியத்தையும் வழியிலிருந்து அப்புறப்படுத்தி, கிறிஸ்துவை நோக்கி மாத்திரமே பார்வையை குவியமைத்து செலுத்திப் பாருங்கள். உங்கள் பெயரை கூட எழுதத் தெரியவில்லை என்றாலும் அதற்கும் இதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. உங்கள் இருதயத்தை கிறிஸ்துவை நோக்கியும் அவருடைய சித்தத்தை நோக்கியும் குவியமைத்து செலுத்திப் பாருங்கள், அப்பொழுது என்ன சம்பவிக்கின்றது என்று கவனித்து பாருங்கள். ஆம். நிச்சயமாக 151. இப்பொழுது, அங்கே அநேகம் பேர் வந்து பார்த்து, "அதோ ஒரு பெரிய சர்ப்பம் இருக்கின்றது. மக்கள் அங்கே சென்று அந்த சர்ப்பத்தை நோக்கிப் பார்த்து சுகமாகுகின்றனர். ஒருக்கால் நாம் நம் குடும்பத்தை அங்கே கொண்டு சென்றால் நலமாக இருக்கும்" என்று கூறினர். 152.இன்றும் கூட இப்படிப்பட்ட காரியங்களை நீங்கள் கேட்கலாம். "அதோ அந்த பெரிய சுகமளிப்பவன் நகரத்துக்கு வருகின்றார். அங்கே அவர் வருகின்றார், நாம் எல்லோரும் அங்கே செல்வோம், சுகமடைவோம்" என்று கூறுகின்றனர். இப்பொழுது, நீங்கள் அந்த விதமாக நினைக்கும்போது, நிச்சயமாகவே உங்கள் காமிரா, புகைப்படக்கருவியானது குவியமைப்பிலிருந்து அப்பால் உள்ளது. ஆம், ஐயா. 153. பார்வையை இயேசுவிடமாக நோக்கி குவியமைத்து செலுத்துங்கள், அவரை நோக்கி மாத்திரமே செல்லுங்கள், அவரை நோக்கிப் பாருங்கள், அப்போது தேவனுடைய நோக்கம் என்ன என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். 154. இப்பொழுது, அந்த எபிரெயன் அங்கே வந்து அந்த வெண்கல சர்ப்பத்தை நோக்கிப் பார்த்த போது, "அந்த வெண்கலம், அந்த சர்ப்பம், என்றால் பாவம் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டாயிற்று என்பதாகும். வெண்கலம் என்றால் அதன் மேல் தெய்வீக நியாயத்தீர்ப்பு என்பதாகும். என் பாவங்களை தேவன் நியாயந்தீர்த்து விட்டார். ஆகவே நான்... இந்த வெண்கல சர்ப்பத்தின் மூலம், அது ஏதோ ஒன்று வரவிருக்கிறது என்பதன் பிரதிநிதித்துவமாயிருக்கின்றது, பாவம் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டாயிற்று. நான் விடுதலையானேன்" என்று கூறினான். அவன் சுகமாக்கப்பட்டான். அது சரியே. 155. ஆகவே இன்றைக்கு இயேசு பரிசுத்த யோவான் 3:14ல், "வெண்கல சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல, மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்" என்று கூறினார். நீங்கள் தானே அவரை நோக்கிப் பார்க்க முடிந்தால்; அவரை ஒரு சபை மனிதனாக அல்ல ஒரு தீர்க்கதரிசியாக அல்ல, ஒரு நல்ல மனிதன் என்றவாறல்ல, திரித்துவத்தின் மூன்றாவது நபராக அல்லது ஏதோ ஒன்றாக அல்ல, இம்மானுவேலாக, தாமே கீழே இறங்கி வந்து தமது ஜீவனை அளித்தவர் என்ற விதமாக நீங்கள் அவரை நோக்கிப் பார்ப்பீர்களானால்; அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு" மேலே உயர்த்தப்பட்டார். 156. நீங்கள் தானே உங்கள் புகைப்படக்கருவியை அந்த காட்சியைப் பார்க்கும்படியாக குவியமைத்து செலுத்துவீர்களானால், தேவன் தம்முடைய ஜீவனை இங்கே அமைத்துக்கொண்ட போது அது தேவன் தம்முடைய ஜீவனையே கிரயமாக அளித்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் அதை அளிக்க வேண்டியதில்லை. ஆனால் அவர் அதை எந்த ஒரு கிரயமுமின்றி இலவசமாக ஜீவனை விட்டார். அவர் தேவன். அவர் மரிக்க வேண்டிய அவசியமே கிடையாது, ஆனால் அவர் மரணத்தை ஏற்றார், தம்முடைய சொந்த ஜீவனை இலவசமாக ஈந்தார், அதினால் தானே குமாரர்களை அவரிடமாக கொண்டு வந்து, அவருடைய கிரியை தாமே தொடர்ந்து நடைபெறும்படிக்காகவும் அப்படியாக செய்தார். "நான் செய்கின்ற கிரியைகள்," யோவான் 14:12, "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்." ஆகவே காரியங்கள் தாமே அப்படியாக செய்யப்படுமென்றால், உங்களால் அவரை காணமுடிகின்றது என்றால், அவரை மாத்திரமே உங்களால் காண்முடிகிறதென்றால், அப்பொழுது நீங்கள் உங்கள் புகைப் படக்கருவியை சரியான விதமாக குவியமைத்து செலுத்தும்படிக்கு அமைத்து, தேவன் உங்களை உபயோகப்படுத்தும் ஒரு நிலைக்கு ஆகும்படிக்குச் செய்யும். நிச்சயமாக. 157. இப்பொழுது, நீங்கள் அதை சற்று நோக்கிப் பார்த்து,"என் காரில் சிறிய அளவிலான சிலுவையிலறையப்பட்ட இயேசு நாதரின் உருவத்தை (crucifix) தொங்கவிட்டுள்ளேன். என் வீட்டில் ஒரு சிலுவையை வைத்திருக்கிறேன்" என்று கூறுவீர்களானால் அதெல்லாம் சரி தான். ஆனால் அது காரியமன்று. அதைக் குறித்து அவர் பேசிக்கொண்டிருக்கவில்லை. 158. நீங்கள் ஒரு பாவி என்பதை தேவன் அறிவார் என்பதை நீங்கள் பார்க்கவேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். மேலும் நீங்கள் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, உங்கள் அக்கிரமங்களை தேவன் தம் மேலேயே வைத்தார், தம் மேலேயே வைத்து, ஒரு மனிதனாக ஆனார். அவர் தம்முடைய வரம்பு எல்லையைக் கடந்து, தேவனாக இருந்த அவர் ஒரு மனிதனாக ஆகும்படிக்கு கீழ் இறங்கி வந்து, உங்களுக்கு பதிலாக அவர் மரிக்கும்படியாகவும், உங்களுக்காக தம்மையே அளிக்கும்படியாகவே வந்தார். மேலும் நீங்கள் உங்கள் பாவத்தை அறிக்கையிட்டீர்கள். ஒரு தயாரிக்கப்பட்ட வெண்மையாக்கும் திரவம், க்ளோராக்ஸ் அல்ல ஆனால் தேவனுடைய வல்லமையானது இரத்தமாக்கப்பட்டு, மாம்ச இச்சையினால் வந்த பாவம் நிறைந்த உங்கள் இரத்தத்தை எடுத்துப்போட்டு, நீங்கள் விடுதலையான நிலையில் உள்ள தேவனுடைய மனிதனாகவும் தேவனுடைய பெண்ணாகவும் ஆகும்படியாகவே அவர் தாமே அப்படியாகச் செய்தார். உங்களுக்கு புரிகின்றதா. 159. நீங்கள் எதை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? நான் அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையைச் சேர்ந்தவன். நான் யுனைட்டட் பெந்தெகொஸ்தே சபையைச் சேர்ந்தவன். நான்மெதோடிஸ்ட் சபையைச் சேர்ந்தவன், பாப்டிஸ்ட் சபையைச் சேர்ந்தவன்" என்று கூறுகிறீர்கள். நீங்கள் இன்னுமாக உங்கள் பார்வையை சரியாக குவியமைக்காமல் அப்புறமாக செலுத்திக்கொண்டிருக்கிறீர்கள். 160. இயேசு கிறிஸ்துவின் மேல் உங்கள் பார்வையை குவியமைத்து செலுத்தி வையுங்கள். ஆமென். அப்போது,"உன் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டது, உன் அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது" என்ற பதில் உனக்கு திரும்பி வருவதைக் கேட்பீர்கள். நீ தாமே. 161. அந்தச் சிறிய சிரோபெனிக்கேயா ஸ்திரீயைப் போல விடாப்பிடியாக உறுதியாக இருங்கள். அவளுக்கு எத்தனை தடவைகள் ஏமாற்றம், நினைத்தவை நடக்காமற் போயிருந்தாலும் அதைக் குறித்து அவள் அக்கறைக்கொள்ளவில்லை, அவள் அங்கே வந்தாள், அது தேவன் தான் என்று தன் பார்வைக் குறியை சரியாக குவியமைத்து செலுத்தியிருந்தாள். அப்போது அவர் அவளிடமாக வந்தார், அவள் என்ன கேட்டிருந்தாளோ அதை அவள் பெற்றுக்கொண்டாள், ஏனென்றால் அவள் தன் பார்வையை குறியை, சரியாக குவியமைத்து செலுத்தி வைத்திருந்தாள். அவள் சரியாக அமைத்து வைத்திருந்தாள், காற்றானது எவ்வளவு பலமாக வீசி அடித்து, "அற்புதங்களின் நாட்கள் கடந்து போயிற்று. உன் கணவன் உன்னை விட்டுச் சென்று விடுவான்" என்று வீசி கூறியிருந்தாலும் சரி. அது அவளை எந்த ஒரு சிறு அணுவளவும் தொந்தரவு செய்யவில்லை. அந்த துப்பாக்கி தோட்டாவானது சரியாக குறியை நோக்கிப் பாய்ந்து அடித்தது. ஆமென். நாம் தாமே குவியமைத்து குறி பார்த்து.... 162. [ஒலிநாடாவில் காலியிடம்].....நேரம். அவர் வரும்படியாக நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த ஒன்று தான் நடந்தது. நடந்துகொண்டிருக்கின்றது. ஓ என்னே! பாருங்கள், அந்த நோக்கத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது என்னவாயிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். 163. ஆட்டு வாசலை சற்றுப் பாருங்கள். அங்கே மக்கள் இருந்தனர். மனிதன் இரட்சிப்பை நோக்கிப் பார்ப்பதற்கென ஒரு வழியை தேவன் எப்போதுமே வைத்திருந்தார். அந்த வெண்கல சர்ப்பம், மக்கள் அதை நோக்கிப் பார்க்க வேண்டியவர்களாக இருந்தனர். அது சரியே. ஆகவே அந்த ஆட்டு வாசல், அவர்கள் அதை நோக்கிப் பார்க்க வேண்டியவர்களாக இருந்தனர். அந்த மக்கள் அங்கே உட்கார்ந்திருந்தனர். 164. அது ஒரு மருத்துவமனை என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம். அங்கே அநேக வியாதிப்பட்டவர்கள் மற்றும் வேதனையோடு இருந்தவர்கள் இருந்தனர். அங்கே ஆயிரக்கணக்கானோர், திரளான கூட்டத்தினர் அங்கே கிடத்தப்பட்டிருந்தனர், இன்று உள்ள ஒரு மருத்துவமனை போல அது இருந்தது. அவர்களுக்கு அன்பானவர்களின் மிருதுவான கரங்கள், இன்று ஒரு மருத்துவமனையில் அவர்களுக்கு சேவை செய்தன, செய்வது போலவே அப்போதும் காணப்பட்டது. 165. அவர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களுடைய கண்கள் அந்த தண்ணீரை கவனமாக பார்த்துக்கொண்டேயிருந்தன. அங்கே அந்த ஆட்டு வாசல் இருந்த இடத்தில் ஐந்து மண்டபங்கள் இருந்தன. அங்கே...அது எருசலேமுக்கு வெளியே இருந்தது, அங்கே, இல்லை இந்த வாசல் ஆகவே அவன் உள்ளே வந்ததும் அவன் கவனித்துக்கொண்டே இருந்தான். இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றானது சம்பவித்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த இயற்கைக்கும் மேம்பட்ட காரியமானது சம்பவிக்க ஆரம்பித்த உடனே, எல்லோருமே உடனடியாக வேகமாக பாய்ந்து ஓடினர். 166. இன்று சபையை சற்று பாருங்கள். தேவன் தம்முடைய வார்த்தையானது உறுதிப்படுத்தப்பட்டு காண்பிக்கப்படும் போது நாம் அந்த இயற்கைக்கு மேம்பட்டதை கவனித்து எதிர் நோக்கி பார்க்கவேண்டும் என்று அவர் விரும்புகின்றார். ஆனால் இப்பொழுதோ நாம் அதினின்று ஓடி விடுகிறோம். ஏனென்றால் அது நம் ஸ்தாபனங்களுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. பாருங்கள்? 167. அந்த ஆட்டு வாசலிலே, அந்த இயற்கைக்கு மேம்பட்ட அசைவிற்காக அவர்கள் கவனமாக பார்த்துக்கொண்டிருந்தனர். தேவன் எப்போதுமே தம்முடைய ஜனங்களின் மூலமாக, அவருடைய வாக்குத்தத்தத்தின் உறுதிப்படுத்தலுக்காக இயற்கைக்கு மேம்பட்ட உறுதிப்படுத்தலின் மூலமாக அசைவாடினார். அவர் அதைச் செய்யப் போவதாக வாக்குத்தத்தம் செய்துள்ளார். அந்த வாக்குத்தத்தமானது இயற்கைக்கு மேம்பட்டவிதத்தில் அசைவாட ஆரம்பித்த போது, அவர்கள் சரியாக அதற்குள்ளாக குதித்தனர், அதை எடுத்துக் கொண்டனர். 168. இன்று, இப்போதும் கூட, பரிசுத்த ஆவி, தேவனுடைய இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையானது, பூமியில் இருந்து, அசைவாடி காரியங்களை காண்பித்துக்கொண்டிருக்கின்றது. மக்களோ, அதற்குள்ளாக செல்வதை விட்டு விட்டு, அதை விட்டு ஓடிப்போகின்றனர், அந்த வார்த்தையானது மாம்சமாக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அவர் செய்த அதே காரியங்களை, நாம் செய்வோம் என்று வாக்குத்தத்தம் செய்துள்ளது, அதே காரியங்களை அது செய்கின்றது. மேலும் அது நம்முடைய குழுக்களுடன் தொடர்புடையதாக இல்லாதிருந்தால், நாம் அதனோடு எந்த விதமான இணைப்பையும் வைப்பதில்லை. அது சரியே. 169. இயேசு அங்கே சென்று, அந்த முழு சபையில் ஒரு ஒரே நபரை மாத்திரமே கண்டார். "தேவன் எல்லோரையும் சுகமளிக்கமாட்டாரா?" என்று நீங்கள் கேட்கலாம். இல்லை, ஐயா. 170. ஆகவே அந்த பெந்தெகொஸ்தே சகோதரர், இதை உங்களுக்கு நான் கூறட்டும். பூமியிலே மனிதர் எழும்பி புறப்பட்டு மருத்துவமனைகளுக்கு சென்று அதில் உள்ளவர்களை விடுவித்து, முழு மருத்துவமனையும் காலியாகி வெளியே செல் என்று கூறும்படியான ஒரு சமயத்துக்காக நீங்கள் காத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதை போன்று ஒருக்காலும் நீங்கள் வஞ்சிக்கப்படாதிருங்கள். நான் கூறுவதை நம்புங்கள். அது ஒரு பொய் என்று நம்புங்கள். அதைப் போன்ற ஒன்று இதுவரைக்கும் செய்யப்படவில்லை. இயேசுதாமே... 171. அது ஒரு மருத்துவமனை என்று சற்று காட்சியகப்படுத்தி பேசலாம். அவர் ஆவியானவரின் நடத்துதலின்படியே அங்கே சென்றார். ஆயத்தமாயிருக்கிறான் என்று அவர் அறிந்திருந்த ஒரு மனிதன் இருப்பதைக் கண்டார். அவர் பேசினார், அந்த மனிதன், அவனுடைய வாழ்க்கையின் இரகசியத்தை அவனிடம் கூறினார், அங்கே அவனிடம் கூறினார். 172. அவனால் நடக்க முடியாமலிருக்கவில்லை. அவனால் நடக்க முடிந்தது. ஆனால் வேறு யாரோ ஒருவர் அவனை முந்திக்கொண்டு ஓடினான். "நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான்" என்று அந்த மனிதன் கூறினான். பாருங்கள்? அவன் குருடாயிருக்கவில்லை. செவிடாக இருக்கவில்லை, ஊமையாயிருக்கவில்லை. அவன் முடனவாக இருக்கவில்லை. அவன் தசைகளை சுருங்கி குன்றச் செய்கின்ற ஒரு வியாதியை கொண்டவனாக இருந்தான், முடிவில் அவனைக் கொன்று போடக்கூடிய ஒரு வியாதியாக அது இல்லை. அவனுக்கு அந்த வியாதி முப்பத்தெட்டு வருடங்களாக இருந்தது. அவன் அந்த குளத்திற்குள் இறங்க முயற்சிப்பான், ஆனால் அவனை விட சற்று பெலமுள்ளவர்கள் முந்திச் சென்று குளத்துக்குள் இறங்கிவிடுவார்கள், பிறகு அந்த தூதனின் வல்லமையானது குளத்தினின்று சென்று விடும். 173. இன்று நாம் போய் தேவனுடைய மனிதன் ஒருவனைக் காண்கிறோம், தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகின்றான், தரிசனங்களைப் பார்க்கின்றான், போய் அதைப் போன்ற காரியங்களை செய்கின்றான், ஆனாலும் அவர்கள், "அதோ, அந்த மூலையில் ஜோன்ஸ் உட்கார்ந்துள்ளார். சுகமளிப்பவர்களாகிய நீங்கள் ஜோன்ஸை சுகமளிக்க முடியுமா என்று பார்க்கலாம்" என்று கூறுகின்றனர். 174. அந்த அதே பழைய பிசாசு தான், இயேசுவின் கண்களைச் சுற்றிலும் கந்தைத் துணிகளால் கட்டியிருந்த போது, அவரிடம் பேசின அதே பிசாசு தான். கூறினர் ... அவர் தலையை ஒரு பிரம்பினால் அடித்தனர். அந்த பிரம்பை ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றி வைத்துக்கொண்டு, "உன்னை அடித்தது யார் என்று கூறு, அப்பொழுது நீ ஒரு தீர்க்கதரிசி என்று நாங்கள் நம்புவோம்." என்று கூறினார்கள். 175. ஏன், உலகம் தோன்றுவதற்கு முன்னரே, அந்த பிரம்பை யார் தன் கையில் வைத்திருப்பார் என்று அவர் அறிந்திருந்தார். அவர் யாருக்காகவும் கோமாளித்தனமான செய்கைகளை காண்பிக்கவில்லை. தேவனுடைய சித்தம் என்னவோ சரியாக அதைத் தான் அவர் செய்தார். சபையும் சரியாக அதைத் தான் செய்யும். பாருங்கள்? 176. அந்த ஆட்டு வாசல், ஆனால் அவர்கள் ஏதோ ஒன்றிற்காக கவனித்து காத்திருந்தனர். அவர்கள் ஏதோ ஒன்றிற்காக எதிர்ப்பார்த்திருந்தனர். 177. இப்பொழுது, அவர்கள் "ஓ சரி, நாம் அங்கே சென்று பார்ப்போம், மற்றவர் என்ன செய்கின்றார்கள் என்று பார்க்கலாம். அது இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றாக காணப்படுகின்றதா என்று பார்க்கலாம்" என்று கூறுவார்களானால். அவர்கள் ஒன்றுமே பெற்றுக்கொள்ளவில்லை. 178. ஆனால் அந்த மனிதன் தான் முந்திச் செல்ல வேண்டியவனாக ருக்கின்றான், பின்னால் உட்கார்ந்து கொண்டு இருப்பதல்ல, ஆனால் முன்னே இருக்கவேண்டியவனாக உள்ளான்; பீட அழைப்பு கொடுக்கப்பட காத்துக்கொண்டிருந்த அந்த மனிதன், இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றைக் காண காத்துக்கொண்டிருந்த அந்த மனிதன். 179. இங்கே உள்ள இந்த மனிதனைப் போன்று, சகோதரன் வில்லியம்ஸ் அவர்களின் மகன் பெந்தெகொஸ்தே குடும்பத்தில் வளர்க்கப்பட்ட ஒருவர். ஆனால், இன்னுமாக, ஒரு சமயத்தில் மகனை அனுப்பவேண்டும் என்று உணர்த்தப்பட்டார், தகப்பனால் ஒரு கூட்டத்துக்கு அனுப்பப்பட்டு மேலும், அங்கே நின்றுகொண்டிருக்கின்ற அந்த வாலிப நபர், அவர் தேவனுடைய இயற்கைக்கு மேம்பட்ட கரத்தைக் கண்டார், உடனடியாக அவர் ஒரு கிறிஸ்தவராக ஆனார். அவர் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார், ஏனென்றால் அவர் தண்ணீர் கலங்குவதை கண்டார். அதில் ஏதோ இயற்கைக்கு மேம்பட்ட ஒன்று இருப்பதை அவர் அறிந்திருந்தார். 180. அது, "சபையை சேர்ந்துக்கொள், கைகளை குலுக்குதல் 44ம் வருடத்தில் இன்னும் பத்து இலட்சம் பேர் சேர்த்தல் அல்லது ஒரு புதிய சபை, புதிய கட்டிடம், அல்லது புதிதான ஒன்று" என்பதல்ல. 181. அது அந்த இயற்கைக்கு மேம்பட்ட அசைவிலிருந்து வந்த ஒரு புதிய ஜீவன் ஆகும், அது சம்பவிக்க அவர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் அது நடைபெறும் என்று அறிந்திருந்தனர்; ஆகவே அவர்கள் அங்கே வந்து காத்துக்கொண்டிருந்தனர். 182. இப்பொழுது, அது எல்லா நேரத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்காவிட்டால், நாம் வீட்டின் மேல் சுற்றிலும் குதித்துக்கொண்டிருக்கையில், "உம், நாம் இந்த சபையை விட்டு சென்று விடலாம். அது எந்த ஒரு அசைவில்லாமல் காணப்படுகிறது" என்று நாம் நினைக்கின்றோம். என்ன ஒரு அர்த்தமற்ற யோசனை! நம்மால் அப்படி காத்திருக்க முடியவில்லை! ஆபிரகாம் அப்படி இல்லை, காத்திருந்தான்..... தேவன் எந்த ஒரு அசைவும் இன்றி இருந்து விட்டார் என்று அவன் நினைத்துப்பார்க்கவில்லை. அவன் இருபத்தைந்து வருடங்களாக காத்திருந்தான், அதன் பிறகு அவன் தேவனின் அசைவின் கரத்தை கண்டான். 183. அவர்கள் ஆட்டு வாசலில் காத்திருந்தனர், ஒரு மாதம், பிறகு இன்னொரு மாதம், காலமாக இருந்தாலும் அந்த ஒரு இயற்கைக்கு மேம்பட்ட அசைவுக்காக காத்திருந்தனர். ஆகவே அவர்கள் அதற்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். ஓ என்னே! அவர்கள் அதை எதிர்நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தனர். 184. ஆகவே இன்று நாம் அதன் தரிசன காட்சியை இழந்து விட்டோம், பெந்தெகொஸ்தே. நாம் ஏதோ ஒன்றை இழந்து விட்டோம். நாம் கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்போமாக. நம் ஸ்தாபனங்கள் மிகவும் அகன்று விரிந்து வழியை விட்டு அகன்று செல்லும் அளவிற்கு பரந்துள்ளது, மேலும் இப்பொழுது நாம் இன்னும் பெரிய பெரிய சபைகளை பெறவும், இன்னும் மேற்குடி மக்களை சபைகளில் பெறவும், இன்னும் சிறந்த விதத்தில் கல்வியறிவு பெற்றுள்ள பிரசங்கிகள் மற்றும் இன்னும் காரியங்களைப் பெற முயற்சி செய்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆகவே நாம் எதைப் பெற்றிருக்கிறோம்? நாம் எதைப் பார்க்கவேண்டும் என்று தேவன் நமக்கு கூறியுள்ள அந்த அதே காரியத்தை விட்டு அகன்று சென்றுவிட்டோம். நீங்கள் எதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்? நோக்கிப் பார்த்துப் பிழைத்துக்கொள். நாம் பிழைக்க வேண்டுமானால் அதைத் தான் நாம் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். 185. மற்றவர்கள் அவர்களைப் பார்த்து எள்ளி நகைத்திருப்பார்கள், "அங்கே இருக்கின்ற அந்த பரிசுத்த உருளையர் கூட்டத்தைப் பாருங்கள், அங்கே அந்த குளத்தைச் சுற்றிலும் இருக்கிறதை பாருங்கள். ஏன், அவர்கள் கூறுகின்றனர், ஒரு.... அது என்ன, அது வீசும் காற்றினால் ஏற்படுகின்ற ஒன்றை தவிர வேறொன்றும் இல்லை. ஆம், காற்று சுழன்று கீழே வரும்போது, அது தண்ணீரை சற்று சுழற்றி பின்தள்ளுகிறது, அவ்வளவு தான்" என்று கூறினர். 186. ஆனால் அவர்களுக்கு அல்ல. அது இரக்கத்தின் தூதன் ஆகும். அது சுகமளித்தலின் தூதனாகும். அது அந்த தூதன் என்று நான் விசுவாசிக்கின்றேன், அது எளிமையான ஒன்றாக காணப்பட்ட போதிலும் அது அப்படி தான். ஆகவே, நீங்கள் பாருங்கள், தேவன் எளிமையில் மறைந்திருத்தல். 187. அப்படிப்பட்டவர்கள் என் கூட்டத்திற்கு வந்து "சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் ஒரு பரிசுத்த உருளையன் என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் நீங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அந்த மக்கள் கூட்டமானது கூச்சலிட்டுக்கொண்டும், அழுதுகொண்டும் தொடர்ந்து நீங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அந்த நிலையிலே இருந்து 'ஆமென்' என்று கூக்குரலிடுவதையும் நான் கவனித்தேன். அது என்ன, உணர்ச்சி வசப்படுதல் தவிர வேறொன்றும் இல்லை" என்று கூறுகின்ற மக்கள் உண்டு. விசுவாசிக்காத உங்களுக்கு அப்படி ஒருவேளை இருக்கலாம். 188. ஆனால், தேவனுடைய அருமையான காரியங்களை பார்த்துள்ள நமக்கு; பரிசுத்த ஆவி என்ன என்று நமக்கு தெரியும்! 189. "அந்நிய பாஷையில் பேசுகின்ற அந்த மக்கள், அவர்கள் ஏதோ உளரிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள்... அது அறிவுப்பூர்வமான ஒன்றாகும். அது ஏதோ ஒரு மனக்கிளர்ச்சியினால் உண்டான ஒரு உற்சாகம் தான்" என்று நீங்கள் கூறுகிறீர்கள். அல்லது யாரோ ஒருவர் கூறுகிறார்... அது ஒருக்கால் உங்களுக்கும் கூட இருக்கலாம். 190. ஆனால் அந்த நபருக்கோ அது தொடர்ந்து வருவதான ஒன்றாகும், அது அவனுக்கு வித்தியாசமான ஒன்றாயிருக்கிறது. ஆம், ஐயா. ஆம், ஐயா. 191. "சரி, இப்பொழுது, உங்களுக்கு தெரியுமா, அது தான்... நாளில் தானே... அப்போது தானே அந்த காரியம் நடந்தது. அது - அது ஆம், மக்கள் அதை விசுவாசிக்க மாட்டார்கள்." என்று நீங்கள் கூறுகிறீர்கள். 192. அது தேவனின் அசலான அசைவை ஒருக்காலும் நிறுத்தவே நிறுத்தாது. இயேசு சரியாக அவிசுவாசத்தின் மத்தியில் வந்தார், ஆனால் அது அவரை ஒரு இமி அளவு கூட ஒரு போதும் நிறுத்தவே முடியவில்லை. அவர் தொடர்ந்து காரியத்தை செய்து கொண்டே முன் சென்றார். 193. இன்றும் கூட மக்கள், எவ்வளவாக விமர்சிக்க முயற்சித்தாலும், அது தீவிர மூட பக்திவைராக்கியம் என்று எவ்வளவாக கூற முயற்சித்தாலும், மக்களோ தொடர்ந்து அதை விசுவாசித்து முன் சென்று கொண்டே செல்கின்றனர். அவர்களால் அதை விவரித்து கூற முடியாது. அது என்னவென்றும் கூட அவர்களுக்கு தெரியாது. அதைக் குறித்ததான சிறியதொரு உட்கருத்தானது அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 194.பெஞ்சமின் ஃப்ராங்க்லின் போன்று, தன்னுடைய கையில் ஒரு காற்றாடியைப் பிடித்துக் கொண்டு, "நான் அதை பெற்றுக்கொண்டேன். நான் பெற்றுக்கொண்டேன். நான் கண்டு பிடித்து விட்டேன்" என்று அவர் கூறினார். அவர் ஏதோ ஒன்றை கொண்டிருந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார். 195. அதே போல தான் இந்த ஆணும் பெண்ணும், அவர்களால் அணுக்களைக் குறித்தும் ஒரு அணுவில் எத்தனை சிறு துணுக்குகள், கூறுகள் உள்ளன என்றும் உங்களுக்கு கூற முடியாதவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுள்ளனர் என்று அறிந்துள்ளனர். ஏன் அப்படி? அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு நேராக தங்கள் குறியை அமைத்து வைத்துள்ளனர், பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு "நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்பிற்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறுங்கள் அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்" என்று கூறினதை நோக்கி குறி அமைத்து வைத்துள்ளனர். அறிக்கை செய்யப்பட்ட பாவமானது அந்த இரத்தத்துக்குள்ளாக விழும்போது, முழுவதும் இரத்தமாக இருக்கின்ற அதற்குள்ளே விழும்போது, அது மன்னிக்கப்படுகின்றது. இரத்தம் அந்த பாவத்தை மன்னிக்கின்றது, அப்போது ஒரு மனிதன் தேவனுடைய குமாரனாக நிற்கின்றான். ஆமென். 196. அப்பொழுது அவனுடைய குறியானது சரியாக அமைக்கப்பட்டுள்ளது, "நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும்." ஆகவே எப்படியாயினும் ஒருவிதத்திலோ அல்லது வேறு விதத்திலோ, நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்திருக்கின்ற நிலையில் இருப்பீர்கள். ஏதோ ஒரு இயற்கைக்கு மேம்பட்ட வழியில், ஒரு அசைவானது இருக்கும், உங்களுக்குள் ஏதோ ஒன்று "இங்கே செல், அதைச்செய். புறப்பட்டு அங்கே செல், அதைச் செய்" என்று கூறும் பாருங்கள், உங்களில் இருக்கின்ற ஒன்றானது, சரியாக எப்படியாக இருக்க வேண்டுமோ அந்த விதமாகவே எப்போதுமே இலக்கை சரியாக அடிக்கும். எவ்வளவு அற்புதமான ஒன்று! 197. நாம் முடிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம், ஏனென்றால் இப்பொழுது மிகவும் நேரம் கடந்து கொண்டிருக்கின்றது. இன்னும் சில நிமிடங்கள் மாத்திரமே. 198. அந்த ஜனங்கள் சிரித்திருப்பர், ஆனாலும் அது அவர்களை நிறுத்தவில்லை. அவர்கள் அப்படியே அதே விதமாக காத்திருந்தனர். 199. மக்கள் ஒருவேளை இப்படியாக கூறலாம், நம் சபை, நம் சகோதரர், "செய்தியானது அப்படியே அசைவற்று இருந்து விட்டது" என்று இன்னுமாக கூறலாம். 200. அது ஒருக்காலும் அசைவற்று இருக்கவில்லை. தண்ணீர் கலக்கப்படுவதற்காக நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். ஏதோ ஒன்று சம்பவிக்க நான் கவனித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். நான் இப்பொழுது இங்கே டூசானில் இருக்கின்றேன். ஏன்? எனக்குத் தெரியாது. தண்ணீரானது அசைந்து என்னை தள்ளிக்கொண்டு வந்துள்ளது. ஏதோ ஒன்று சம்பவிக்க நான் கவனித்து பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அது நடக்கத்தான் போகின்றது. 201. நான் உங்களுக்கு கூறினேன், முன்பொரு நாளில் நான் இங்கே வந்த போது, "ஏதோ ஒன்று சம்பவிக்கப்போகின்றது. ஒரு இடியோ அல்லது ஒரு வெடியோ ஏற்பட்டு வெடிக்கும், அப்பொழுது அந்த ஏழு முத்திரைகள் வந்தன" என்றேன். அது சரியா அல்லது இல்லையா என்று ஒலி நாடாவை போட்டுக் கேளுங்கள். பாருங்கள்? ஓ நாம் தண்ணீர் கலக்கப்படுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறோம். 202. அங்கே டூசானுக்கு வடக்காக உள்ள அந்த பாலைவனத்தின் பக்கமாக, இரு வழிச் சேருகின்ற ஒரு சந்திப்பில் ஏதோ ஒன்றை நாங்கள் கண்டிருந்தோம் நாங்கள் உங்களுக்கு இங்கே கூறியிருந்தது சம்பவிப்பதற்கு முன் நான் அந்த ஊடுருவிக் குத்தும் சிறு முட்களை (goat headers) எடுத்துப் போட்டுக்கொண்டிருந்தேன், அப்பொழுது அது சடுதியாக சம்பவித்தது, முழு மலையை அப்படியே அசைத்தது. பாறைகள் உருண்டு கீழே விழுந்தன மற்றும் அதைப் போன்றவை கீழே விழுந்தன. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் திரும்பி, "உடனே உன் வீட்டுக்கு திரும்பிப் போ, ஏனென்றால் ஏழு முத்திரைகள் திறக்கப்படவிருக்கின்றன" என்று கூறினார். ஒலி நாடாக்களை எடுத்து நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அது கர்த்தர் உரைக்கிறதாவது, அது மற்றும் எல்லாகாரியத்தையும் சம்பவிப்பதற்கு முன்னரே கூறினது. அது சத்தியமா இல்லையா என்று நீங்களே பாருங்கள். நான் கடந்து போன பிறகும், அது இன்னுமாக தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும். 203. நண்பர்களே, நாம் கடைசி காலத்தில் இருக்கின்றோம். இயேசு வருவதற்காக நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றேன். நான் நேசித்து வருகின்ற, ஒரு வாலிபனாக இருந்த முதற்கொண்டு என் ஜீவியத்தையே அவருக்கு அளித்திருக்கின்ற, அந்த ஸ்தோத்தரிக்கப் பட்ட கர்த்தராகிய இயேசு அவர் வருவதற்காக நான் இன்னுமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றேன். அவர் வருவார் என்று நான் விசுவாசிக்கின்றேன். ஒரு வேளை ஆபிரகாமுக்கு நடந்தது போல, அது அப்படியே நீண்டு கொண்டிருக்கலாம். ஆனாலும் இன்னுமாக நான் பலமடைந்து, இன்னும் அவருடனான இருக்கும் அன்பிலே பலப்பட்டு, என்னைத் தானே அனுதினமும் அவரிடம் முனைப்பாங்குடன் தெளிவாக தெரியப்படுத்திக்கொண்டிருப்பேன். இங்குள்ள ஒவ்வொரு விசுவாசியும் அந்த அதே காரியத்தை தான் செய்துகொண்டிருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். 204. மற்றவர்கள் உங்களிடமாக "ஓ நீ பழங்கால வழக்கமுடைய ஒருவன். நீ இருக்கவேண்டிய இடம் என்னவென்றால் . . ." என்று கூறினாலும் பரவாயில்லை. அவர்கள் என்ன கூறினாலும் எனக்கு அக்கறையில்லை 205. நான் இன்னும் தேவனை விசுவாசிக்கின்றேன். நான் வார்த்தையின் பேரிலே சரியாக அதன் மேல் குவியமைத்து பார்த்து, அது சத்தியம் என்று அறிந்து கொண்டேன். அதிலிருந்து ஒருவராலும் என்னை இன்னுமாக அசைக்கவே முடியவில்லை. தேவன் என் இருதயத்தை சரியாக அந்த வார்த்தைக்கு நேராகவே அப்படியே நிலைத்து வைத்திருக்கும் வரைக்குமாக, நான் அதிலேயே தரித்து நிற்பேன். ஆமென். 206.எலியா, அவன் ஒரு நாளிலே அவன் ஏதோ ஒன்றிற்காக அவன் நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான், மக்களுக்கு உதவி செய்வதற்காக அவன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் வயதாகும் வரைக்குமாக பார்த்துக்கொண்டேயிருந்தான், சுமார் வயது எண்பதுகளில் இருந்திருக்கலாம், உபவாசித்து, ஜெபித்துக் கொண்டிருந்த பிறகு, அவன் மிகவும் களைப்புற்றிருந்தான், மலையை ஏறுவதற்கு அவனால் முடியவில்லை. அனால் தேவனோ அவனிடமாக, அந்த மக்கள் மனதிரும்புவார்களானால் ஏதோ ஒரு காரியமானது நடைபெறும் என்று கூறியிருந்தார். அவன் எதை எதிர் நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான்? அவன் வேலைக்காரனை பார்த்து, "மேலே சென்று பார். பார். ஏதோ ஒன்று சம்பவிக்கப்போகின்றது" என்று அவனை மேலே அனுப்பினான். மூன்றரை வருடங்கள் ஆனது, இன்னும் மழை பெய்யவில்லை, ஒரு மேகம் கூட இல்லாதிருந்தது, வானத்திலிருந்து பனி கூட விழவில்லை. ஆனால் எலியாவோ, "போய் பார்" என்று கூறினான். மேலும் எலியா... 207. கேயாசி ஏறி நின்று பார்த்தான், பார்த்தான், பார்த்துக்கொண்டே இருந்தான். ஒன்றையுமே அவன் காணவில்லை. அவன் கீழே இறங்கி வந்தான். "ஒன்றையுமே நான் காணவில்லை" என்று கூறினான். "திரும்பவும் போ" ஆமென்."திரும்பிப் போ, அது சம்பவிக்கும் வரைக்குமாக அப்படியே இரு. 208. எலியா அங்கே செல்கிறான்... அல்லது நான் சொல்ல வருவது, கேயாசி, அவன் உற்று நோக்கிப் பார்க்கின்றான், பார்க்கின்றான், பார்க்கின்றான். 209. ஆகவே எலியா, அந்த சிறிய வழுக்கை தலையோடு அங்கே வெயிலில், அவனுடைய முக மயிர், தாடி, வெள்ளை தாடியோடு இருந்தான், அவனுடைய எலும்பும் தோலுமாக காணப்பட்ட கரங்களையும் எலும்பும் தோலுமாக இருந்த முழங்காலைக் கொண்டவனாய் உட்கார்ந்திருந்தான். அவன், "கர்த்தராகிய தேவனே" என்று கூறி ஜெபிக்க ஆரம்பிக்கையில் 210. "இப்பொழுது திரும்பவும் போ" என்று கூறினான். ஆமென். அவன் என்ன செய்துகொண்டிருந்தான்? தேவன் தம்முடைய வாக்குத்தத் தத்தைக் காத்துக்கொள்ள அவன் எதிர்பார்த்து நோக்கிக் கொண்டிருந்தான், வானம் எவ்வளவாக வெண்கலம் போல காணப்பட்டாலும், எவ்வளவாக நியாயத்தீர்ப்பானது அதன் மேல் இருந்தாலும் அதைப் பற்றி அவன் பொருட்படுத்தவில்லை. அது சரி. 211. யாரோ ஒருவர், முன்பொரு நாளிலே என்னிடமாக, "சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், மேலும் நீங்கள் நிறுவப்பட்டுள்ள மத ஸ்தாபனங்களைக் குறித்து மிக அதிகமாக அதற்கெதிராகப் பேசுகிறீர்கள். எது உங்களை அப்படி செய்கின்றது?" என்று கேட்டார். 212. நான், "அந்த ஸ்தாபனங்களில் உள்ள சகோதரருக்கு எதிராக என்னிடத்தில் ஒன்றுமே இல்லை, ஆனால் அதன் முறைமைக்கு எதிராகத் தான் நான் இருக்கின்றேன்" என்று கூறினேன். 213. யேசுவின் சரீரத்தை சீஷர்கள் தைலமிடுவதற்கு கொண்டு செல்வது போல அந்த சரீரமானது ஏறக்குறைய அழுகும் நிலைக்கு செல்லவிருந்தது, அது சரி, துர்வாசனை மிகவும் பயங்கரமாக இருந்தது. ஆனாலும் அவர்கள் சரியாக அதனுடனே தரித்து இருந்தனர். 214. இன்றைக்கும் அதே போலத் தான் காரியமானது உள்ளது, சபையானது எல்லாவற்றிலும் சிக்கிக்கொண்டு தடுமாறித் தவித்துக்கொண்டிருக்கின்றது. அது எல்லா விதமான நிலையிலும் காணப்படுகின்றது. அது கோட்பாடுகளிலும் மற்றும் சம்பிரதாயங் களிலும் மற்றும் எல்லாவிதமான காரியத்திலும் காணப்படுகின்றது, ஆனாலும் நான் அதனுடனே தரித்திருக்க வேண்டியவனாக இருக்கின்றேன். நாம் அங்கே இருக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். நாம் அதை நேசிப்பதால் நாம் அங்கே தரித்திருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். நமக்குள் ஏதோ ஒன்று இருந்து, நம்மை வற்புறுத்திக்கொண்டிருக்கிறது. நம் இருதயத்துடிப்பானது "அதனுடன் இரு, ஏனென்றால் ஒரு நாளிலே உயிர்த்தெழுதல் நடக்கப்போகிறது, தேவன் அதிலிருந்து எடுத்துக்கொள்வார்" என்று கூறுகிறது. ஆமென். ஆம். அற்புதமான கர்த்தர் இயேசு! சரி. 215. நாம் காண்பதென்னவென்றால், ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அளவு தெரியும் வரைக்குமாக எலியா பார்த்துக்கொண்டேயிருந்தான். 216. இப்பொழுது, அவிசுவாசமானது அதனை அத்தனை சீக்கிரமாக பிடித்திருக்கும். "உன்னால் அந்த ஒன்றைத் தான் செய்ய முடியுமானால்?" பாருங்கள்? "அவ்வளவு தான் உன்னால் செய்ய முடியுமென்றால், சரி, அதை திரும்ப எடுத்துக்கொள்." 217. ஆனால் அது என்னவாக இருந்தது? அவன் இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றிற்காக பார்த்துக்கொண்டிருந்தான். ஓ தேவனுடைய கரம் மாத்திரமே அதைச் செய்ய முடியும் என்று அவன் அறிந்திருந்தான். அவன் அந்த கரத்தை பார்த்த போது, இ-யே-சு J-E-S-U-S, அவன் வி-சுவா-சம், F-A-I-T-H, கொண்டிருந்தான். ஆம் அவன் அதைப் பார்த்த போது, "பெருமழையின் இரைச்சலை நான் கேட்கின்றேன்" என்றான். அது என்னவாயிருந்தது? அவன் அந்த முதல் அசைவை ஏற்றுக்கொண்டான் 218. ஓ அவிசுவாசியே, இந்த காலையில், உங்கள் தண்ணீர் ஞானஸ்நானங்கள் மற்றும் எல்லா காரியங்களிலும் குழம்பி சிக்கியிருக்கின்ற நீங்கள் எல்லாரும், தேவனுடைய ஆவியானவர் தாமே உங்கள் கண்களை திறக்க அனுமதித்து, ஒரு சிறிய காரியத்தை உங்களுக்கு காண்பிக்க விடுங்கள், அப்பொழுது அதிலிருந்து நீங்கள் ஆரம்பியுங்கள். "பெருமழையின் இரைச்சலின் சத்தம் எனக்கு கேட்கின்றது." வார்த்தைக்கு பதிலாக சபையின் கோட்பாடுகளை விசுவாசிக்கின்ற நீங்கள், வார்த்தைக்கு திரும்பி வாருங்கள், அந்த சிறிய முதல் அசைவை சற்று பாருங்கள். விசுவாசம் அதை ஏற்றுக்கொண்டது. "அதைத் தான் நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்." 219. நாம் கர்த்தருடைய வருகைக்காக எதிர்நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். கடைசி நாட்களில் பரிசுத்த ஆவி கீழே இறங்குவதை நாம் காண்கின்றோம். அடையாளங்களையும் மற்றும் அற்புதங்களையும் நாம் காண்கின்றோம். என்ன சம்பவித்துக் கொண்டிருக்கின்றது என்றும் நாம் கவனித்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம். பாருங்கள்? உங்களால் காணமுடிகின்றதா? நீங்கள் எதைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? இது சம்பவிக்கும் என்று தேவன் கூறியுள்ளது சரியாக அப்படியே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. விசுவாசம் அதை பிடித்து இழுக்கட்டும், "எனக்கும் கூட அது தேவை" என்று கூறட்டும். 220. எலியாவை கவனியுங்கள். அவன் அதை ஏற்றுக்கொண்ட போது, அவனுடைய ஜீவனானது புதுப்பிக்கப்பட்டிருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா. அவன் ஆகாபின் இரதத்திற்கு முன்பாகவே ஓடிச் சென்றான். அந்த மலையைக் கூட ஏறமுடியாத நிலையில் இருந்து, அவன் அந்த இரதத்தைக் கடந்து முன் ஓடினான். வேகமாக ஓடின அந்த குதிரைகளைக் கடந்து முன் ஓடினான். எல்லாரும் மழைத் தண்ணீர் பிடிக்கும் குடங்களை எடுங்கள். பெருமழையின் இரைச்சல் எனக்கு கேட்கின்றது." அந்த சிறிய முதல் அசைவு, "மகிமை!" 221. அந்த பெதஸ்தா குளத்தில் முதல் சிறிய அசைவு ஏற்பட்ட போது, அவர்கள் அதை அடைய விரைந்தனர். ஆமென். 222. ஓ இங்குள்ள மக்கள் தாமே, இந்த காலையில் நீங்கள் இன்னும் பரிசுத்த ஆவியை பெறவில்லை என்றால், உங்களுக்கு அந்த முதல் சிறு அசைவாக ஒரு ஒலி "அது சத்தியம். அந்த மனிதன் வார்த்தையைத் தான் கூறுகின்றார், அந்த வார்த்தை சத்தியம் ஆகும்'' என்று கூறுமானால், அப்பொழுதே உடனடியாக கூடுமானவரைக்கும் விரைந்து செயல்படுங்கள். காத்திராதேயுங்கள். எதைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? எதற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் நேரம் தாமதமாகி விட்டது. அதை நோக்கி, உங்களால் கூடுமான வரைக்குமாக வேகமாக செல்லுங்கள். ஏன்? எலியா அந்த அசைவைக் கண்டபோது, பதிலளிக்கப்பட்ட ஜெபத்திற்கு அத்தாட்சியாக அது இருந்தது. 223. ஓ தேவனே, இக்காலையில் இங்குள்ள ஒவ்வொரு வியாதிப்பட்ட நபரும், இப்பொழுது பரிசுத்த ஆவியின் பிரசன்னமானது நம் மத்தியில் இருப்பதை உணர்கின்ற ஒவ்வொருவரும் அதை தெளிவாக அறிந்து கொள்ளட்டும். உங்களின் ஜெபத்திற்கு தேவனின் பிரசன்னத்தில் பதிலளிக்கப்பட்டது என்பதன் அத்தாட்சி அதுவாகும். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு மனிதனும், அந்த மகத்தான உணர்வானது "அது தான் சத்தியம் ஆகும்' என்று கூறுவதை தெளிவாக அறிந்துகொள்வார்களானால், "என் ஜெபமானது பதிலளிக்கப்பட்டதின் அத்தாட்சி அது தான்" என்று கூறுவதை எடுத்துக்கொள்வீர்களானால், இப்பொழுது உங்கள் கரங்களை உயர்த்தி, "தேவனே, இப்பொழுது நான் அதை பெற்றுக்கொள்கிறேன்" என்று கூறுவீர்களானால், ஏதோ ஒன்று சம்பவிக்கும். அது சார்ந்துள்ள.... 224. நம்மை சுற்றிலுமாக எல்லா அடையாளங்களையும் தேவன் போடுகின்றார், எறிகின்றார் (throws) ஆனாலும் நாமோ தொடர்ந்து செல்கின்றோம், அதற்கு சற்று வழி விலகிச் சென்று விடுகிறோம். ஆமாம். ஓ, என்னே! ஜெபத்திற்கான பதில் என்று எலியா அறிந்திருந்தான். 225. முரண்பட்டதான எந்த ஒன்றையும் காண யோனா மறுத்தான். அவன் சமுத்திரத்தின் ஆழத்தின் அடிப்புறத்தில் மீனின் வயிற்றில் இருந்தான். ஆனால், "அது என்னை மறைக்காது" என்றான். மேலும் அவன், "ஆகிலும் இன்னும் ஒரு முறை உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன்" என்று கூறினான். அவன் எதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்? அவனால் அந்த ஆலயத்தை உண்மையாக, நிஜத்தில் பார்க்க முடியவில்லை, ஆனால் அந்த ஆலயம் செய்திருந்த அந்த வாக்குத்தத்தத்தை அவன் பார்த்தான். 226. ஓ தேவனே, வார்த்தை அளித்துள்ள வாக்குத்தத்தத்தை மாத்திரம் எங்களால் பார்க்க கூடுமானால் அந்த "இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே ஒன்று கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன். மேலும் "ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்' கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்துள்ளதை, எங்களால் மாத்திரம் அதைக் காணக்கூடுமானால், முதல் அசைவிலே, அதற்குள்ளாக சென்று விடுவோம். இன்னுமாக காத்துக்கொண்டிருக்க வேண்டாம். எதற்காக நீங்கள் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்? 227. தேவன் உங்கள் ஜெபத்திற்கு பதில் அளிக்கின்றார், அதை தாமே உங்களை சுற்றிலும் வைக்கின்றார். பிறகு நீங்களோ "உம் சரி, இன்னார் இன்னார் என்ன சொல்லுவார் என்று நான் சற்று பார்ப்பேனாக" என்று கூறுகிறீர்கள். ஓ அதை ஒருபோதும் செய்யாதீர்கள். 228. கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். "எங்கே இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அவர்கள் நடுவிலே நான் இருக்கிறேன். அவர்கள் கேட்கட்டும். அவர்கள் பெற்றுக்கொள்வார்கள்" என்று அவர் கூறியிருப்பதை நோக்கிப் பாருங்கள். என்னே ஒரு வாக்குத்தத்தம், என்ன ஒரு தெய்வீக வாக்குத்தத்தம்! சந்தேகப்படும்படியான எந்த ஒன்றையுமே அவர் காண மறுத்தார். 229. பிசாசு உங்களிடமாக, "சற்று பொறு, ஒருக்கால் இன்றிரவு எழுப்புதல் கூட்டம் ஆரம்பிக்கையில் சிறிது நீ நலம் பெறலாம்" என்று கூறலாம். அது ஒருக்கால் நியாயமாக இருக்கலாம், அது அருமையானதாகவும் இருக்கலாம், ஆனால் எழுப்புதல் கூட்டம் ஆரம்பிக்கும் வரைக்குமாக காத்திருக்காதீர்கள். 230. சரியாக இப்பொழுதே அந்த எழுப்புதலில் பங்குள்ளவர்களாக ஆகுங்கள். உங்களுக்குள் தேவன் ஆரம்பிக்க விரும்புகின்றார். சபையில் தேவன் ஆரம்பிக்க விரும்புகிறார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் செய்தியாளனை எடுத்து, செய்தியானது புறப்பட்டுச் செல்லும்படியாக அனுப்புகின்றார். தேவன் அந்த செய்தியை, மகத்தான அடையாளங்களைக் கொண்டும், அற்புதங்களைக் கொண்டும் உறுதிப்படுத்துகின்றார். பாருங்கள்? உங்களை சந்தேகம் கொள்ளும்படியாக செய்கின்ற எந்த ஒன்றையுமே பார்க்காதீர்கள். வேண்டாமென்று மறுத்துவிடுங்கள். 231. யோனா அவ்விதமாகச் செய்தான் அப்பொழுது தேவன் அவனை மீனின் வயிற்றிலிருந்து விடுவித்து வெளியே கொண்டு வந்தார். நிச்சயமாக. ஆம், ஐயா. 232. யோபு, அவனுடைய எல்லா நண்பர்களும் அவனை புறம்பே தள்ளினாலும், எல்லா காரியமும் மோசமான நிலையை அடைந்தாலும், யோபு வானத்தை நோக்கிப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவர்களில் சிலர் யோபுவிடம், "நீ ஒரு இரகசிய பாவி. நீ - நீ, நீ அந்தப்படியே தான் காணப்படுகின்றாய். யோபே, நீ மேலே அந்த வழியாக எதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்? ஏனென்றால் நீ பாவம் செய்துள்ளாய், நீ செய்துள்ளதை தேவன் நிரூபித்துள்ளார். யோபே நீ ஒரு இரகசிய பாவி" என்று கூறினார்கள். 233. தான் ஒரு பாவி இல்லை என்று யோபு அறிந்திருந்தான். தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைக்கு தேவைப்படுகின்ற அந்த சர்வாங்க தகனபலியை சரியாகச் செலுத்தியிருந்தான், அவன் செய்து முடித்திருந்தான். அந்த சர்வாங்க தகனபலி தான் தேவனுக்கு தேவையாயிருந்தது. சர்வாங்க தகனபலியை மாத்திரமே தேவனுக்கு செலுத்த வேண்டியிருந்தது, தான் அந்த சர்வாங்க தகனபலியை செலுத்தியுள்ளான் என்பதை யோபு அறிந்திருந்தான். 234. வார்த்தையை மாத்திரம் விசுவாசிக்கவேண்டும் என்று தேவன் உங்களிடம் கேட்கின்றார். ஆமென். ஆமென். இந்த எல்லா விதமான கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் மற்றும் மற்றவை எல்லாம் கைக்கொள்ள தேவன் கேட்பதில்லை. அவர் கேட்பதெல்லாம், நீங்கள் அவரை விசுவாசிக்க வேண்டும் என்பதே விசுவாசிக்கிறவன்!" ஆமென், ஆமென். "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான்!" "பூமியின் எல்லைகளெல்லாம் உள்ளவர்களே, அவரை நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்ளுங்கள்." "அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். ஆமென், ஆமென். ஆம், ஐயா. எந்த ஒரு காரியத்திற்காகவும் காத்திருக்காதீர்கள். நோக்கிப் பாருங்கள். 235. யோபு தரித்து நின்று, நோக்கிப் பார்த்தான். அவனுடைய தோலைப் பார்த்தான், முழுவதும் அழுகிப்போயிருந்தது. அவன் மேல் முழுவதுமாக இரத்தம் இருந்ததை பார்த்தான். அவன் சரீரம் முழுவதும் கொடிய பருக்கள் இருந்தன. அவனுடைய மனைவி வந்தாள். அவன் சபை அங்கத்தினர்கள் எல்லாரும் அவனை விட்டுச் சென்று விட்டார்கள், அவன் ஒரு இரகசிய பாவி என்று அவனை குற்றம் சாட்டினார்கள். அவனுடைய மனைவி வந்து "நீங்கள் பார்ப்பதற்கு மிகவும் இழிவான நிலையில் உள்ளீர்கள். நீங்கள் தேவனை தூஷித்து ஜீவனை விட்டு மரணமடையலாம் அல்லவா?" என்று கூறினாள். 236. அதற்கு அவன், "நீ பயித்தியக்காரி போல பேசுகிறாய். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்" என்று கூறினான். 237. அந்த நேரத்திலே, யோபு வார்த்தையுடன் தரித்து நிற்கையில், அப்பொழுது மின்னல்கள் பிரகாசித்து அடிக்க ஆரம்பித்தது, இடிகள் முழங்கின, அப்போது அந்த தீர்க்கதரிசி வானத்தை நோக்கிப் பார்த்தான். அப்போது அவன், "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன். கடைசி நாட்களில் பூமியின் மேல் அவர் நிற்பார். இந்த தோல் புழுக்கள் இந்த சரீரத்தை அழித்துப் போட்டாலும், என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன், அவரை நானே பார்ப்பேன்" என்று கூறினான். 238. கவனியுங்கள். அழைக்கப்படுகிறார்; அழைக்கப்படுகிறார். முதலில் அவர் "மீட்பர்" என்று அடுத்ததாக, அவர் "தேவன்" என்று "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன். கடைசி நாட்களில், அவர் பூமியின் மீது நிற்பார். இந்த தோல் புழுக்கள் இந்த சரீரத்தை அழித்துப்போட்டாலும், என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன், அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்." அவன் சரீரமானது அழுகிக்கொண்டு அவன் மரித்துக்கொண்டிருக்கையில், அவன் இன்னுமாக மாம்சத்தில் இருக்கையில், உயிர்த்தெழுதலை அவன் காணும் வரைக்குமாக அவன் பார்த்துக்கொண்டேயிருந்தான், அல்லேலூயா, தானும் அதில் சேர்க்கப்பட்டுள்ளான் என்று அவன் அறிந்து கொண்டான், ஏனென்றால் அவன் தேவனுடைய வார்த்தையை கைக்கொண்டு அதைக் காத்துக் கொண்டிருந்தான். சகோதரனே நோக்கிப் பார்த்து, பிழைத்துக்கொள். ஆமென். தேவனுடைய நோக்கம் என்ன என்று அவன் கண்டான், அவன் அதைச் செய்தான். யோபுவை சோதிக்க தேவனுக்கு ஒரு நோக்கம் இருந்தது. 239. மக்களை சோதிக்கும்படி அவருக்கு ஒரு நோக்கம் இருந்தது. ஒவ்வொரு காரியமும் ஒரு நோக்கத்துக்காக செய்யப்படுகின்றது. இப்பொழுதும் அவர் அந்த அதே காரியத்தை தான் செய்துகொண்டிருக்கிறார். அவர் நமக்கு அடையாளங்களையும் அற்புதங்களையும் மக்கள் நடுவிலே அனுப்புகிறார். அவர் சுவிசேஷ சத்தியத்தை அனுப்புகிறார், அவர்கள் அதை நோக்கிப் பார்க்கும்படிக்கு செய்கிறார், ஏதோ ஒரு போதகத்தை பார்த்து, உண்மையான சத்தியத்தை மறுதலிக்கவும் மற்றும் ஒரு கோட்பாட்டை எடுத்துக்கொள்ளவும்; இதை மறுதலிக்கவும் மற்றும் அதை எடுத்துக்கொள்ளவும், வேதாகமம் அதற்கு முரணாக போதிக்கிறது என்று அவர்கள் அறிந்திருந்தும் அப்படியாகச் செய்கின்றனர். ஆனால் அவர் அதை ஒரு சோதனைக்காக செய்கின்றார். ஆதலால் நியாயத்தீர்ப்பின் நாளிலே எந்த ஒரு சாக்குப்போக்கும் சொல்வதற்கு இடமிருக்காது. ஓ என்னே! 240. இந்த கடைசி நாட்களில் என்ன வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளது என்று பாருங்கள். இப்பொழுது முடிக்கும் தருணத்தில், நாம் முடிப்பதற்கு முன்னர் இதை நான் சற்று கூறட்டும். கடைசி நாட்களில் என்ன வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கின்றது என்று பாருங்கள். 241. இந்த கடைசி நாட்களில் அவர் ஏற்கெனவே செய்துள்ளார் என்று பாருங்கள். அவர் பரிசுத்த ஆவியை தம்முடைய மக்களின் மீது ஊற்றியுள்ளார். மூல பெந்தெகொஸ்தேயை மறுபடியுமாக திரும்பக் கொண்டு வந்துள்ளார், பரிசுத்த ஆவியின் மூல ஞானஸ்நானத்தை திரும்பக் கொண்டு வந்துள்ளார்; மூல, அசலான தண்ணீர் ஞானஸ்நானத்தை திரும்பக் கொண்டு வந்துள்ளார், எல்லாவற்றையும் திரும்பக் கொண்டு வந்துள்ளார், எல்லாவற்றையும் அதன் மூல நிலைக்கு திரும்பக் கொண்டு வந்துள்ளார். சரியாக கீழே வந்து, ஒரு போதும் தவறவே முடியாத தீர்க்கதரிசனங்களையும் மற்றும் தரிசனங்களையும் நமக்கு காண்பித்து கிறிஸ்துவின் மூல அத்தாட்சியை திரும்பக் கொண்டு வந்துள்ளார். எல்லாமே சரியாக அப்படியே பிழையற்று நடக்கின்றது, எல்லா காரியமும் சரியாக அதே விதத்திலே நடந்தேறுகிறது, அது மானிட சிந்தைக்கு அப்பாற்பட்டதென்று காண்பிக்கும்படியாக அப்படியாக நடந்தேறு கின்றது. மானிட சிந்தை அதைச் செய்யவே முடியாது. அது தேவன் ஆகும். 242. இஸ்ரவேல் புத்திரரை வழி நடத்தின அந்த மகத்தான அக்கினி ஸ்தம்பத்தை கவனித்துப் பாருங்கள். எந்த ஒருவரும், எந்த ஒரு வேதாகம அறிஞரும், அது தான் உடன்படிக்கையின் தூதன், இயேசு கிறிஸ்து என்று அறிவார்கள். 243. எபிரெயர் கூறுகின்றது, எபிரெயர் 11-ம் அதிகாரம் கூறுகிறது, "மோசே எகிப்தை விட்டுப் போனான், எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்." பாருங்கள்? அது என்னவாயிருந்தது? வனாந்திரத்தில் கிறிஸ்து. 244. யோவான் 16-ல், இல்லை . . . மன்னிக்கவும். யோவான் 6, அவர்கள் இராப்போஜனத்தை கைக்கொண்டிருக்கையில், அல்லது அது எதுவாயிருந்திருந்தாலும் சரி, அப்பத்தை பிட்டுக்கொண்டு அங்கே யூபிலியில் ஒரு மகத்தான தருணத்தை கொண்டிருந்தனர். அங்கே இயேசு, "நானே தேவனிடத்திலிருந்து வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம். என் மாம்சத்தை புசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, நான் அவனை அந்த நாளில் கடைசி நாட்களில் எழுப்புவேன்" என்று கூறினார். தாம் அதைச் செய்யப்போகிறார் என்று அவர் அறிந்திருந்தார். தாம் தான் அந்த ஜீவ அப்பம் என்று அவர் கூறினார். 245. அப்போது அவர்கள், "நீ உன்னைத் தானே தேவனாக ஆக்கிக்கொள்கிறாய். நீ உன்னை தானே... ஆனால், ஏன், நீ பயித்தியக்காரத்தனமான ஒருவன் என்று இப்பொழுது எங்களுக்கு தெரிகிறது" என்று கூறினார்கள். மூளைக்கோளாறு, பைத்தியக்காரன் (mad) என்றால் "பைத்தியக்காரத்தனமானவன், (crazy)" என்ற அர்த்தம். நீ பைத்தியகாரத்தனமுள்ள ஒருவன் என்று தெரியும். உனக்கு ஐம்பது வயது கூட ஆகவில்லை, இதோ நீ "ஆபிரகாமைக் கண்டேன்" என்று கூறுகின்றாயே. ஆகவே உனக்கு பைத்தியம் பிடித்துள்ளது என்று எங்களுக்கு தெரியும். உனக்கு மனக்கோளாறு ஏற்பட்டுள்ளது. நீ தீவிர மத பக்தி கொண்டவன்" அதற்கு அவர், "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்" என்று கூறினார். ஆமென். 246. "இருக்கிறேன்" என்பது என்ன? முட்செடியில் இருந்த அந்த ஜுவாலித்து எரிந்த அந்த ஒளி. மோசே அதைக் கண்டான். அவனுடைய வாழ்நாள் முழுவதுமாக அவன் அதை கவனித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான், அது அவனை நேராக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள்ளாக வழி நடத்தினது. 247. அந்த அதே ஒளியானது கீழே இறங்கி வந்து அங்கே நின்று கொண்டிருந்தது. "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன். அந்த அக்கினியால் ஜுவாலித்து எரிந்துக் கொண்டிருந்த முட்செடி நானே. நானே அந்த ஒளியின் தூதன், இருக்கிறவராக இருக்கிறேன். நான் தேவனிடத்திலிருந்து வந்தேன், தேவனிடத்திற்குப் போகிறேன்" என்று கூறினார். 248. உயிர்த்தெழுதல் நடந்த சில நாட்களுக்கு பிறகு, தர்சு பட்டணத்தானாகிய சவுல் பெந்தெகொஸ்தேயினரை துன்பப்படுத்தி சித்ரவதை செய்ய தமஸ்குவுக்கு செல்லும் வழியிலே சென்று கொண்டிருந்தான். அவன் அந்த பாதையிலே சென்று கொண்டிருந்த போது ஒரு மகத்தான ஒளியானது சடுதியாக கீழே இறங்கி, அவன் கண்களை மூடிப்போட்டது. அவனாலே. அவனோடு இருந்த மற்றவர்களால் அந்த ஒளியைப் பார்க்க முடியவில்லை, ஆனால் பவுலால் பார்க்க முடிந்தது. அது அவனுடைய கண்களை குருடாக்கும் அளவிற்கு அவ்வளவாக மிளிர்ந்தது. "சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?" என்று கூறினது. உடனே அவன், "ஆண்டவரே, நீர் யார்?" என்று கேட்டான். 249. அவர், "இயேசு நானே" என்றார். அக்கினியால் ஜுவாலித்து எரிந்த அந்த முட்செடியில் இருந்த அந்த அதே ஒளி, தேவனிடத்திலிருந்து வந்து தேவனிடத்திற்கு திரும்பி சென்ற அந்த அதே ஒளி. 250. அந்த அதே ஒளியின் புகைப்படத்தை நாம் இன்று நம்மோடு வைத்துள்ளோம், அது அந்த அதே அற்புதங்களையும் மற்றும் அதே அதிசயங்களையும், அதே அடையாளங்களையும் செய்துக்கொண்டிருக்கின்றது. ஆனாலும் நாம் இன்னும் வேறே ஏதோ ஒன்றிற்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம். அந்த சுவிசேஷ சத்தம், வார்த்தையின் உறுதிப்படுத்துதல், இந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம், நாம் போதிக்கின்ற இந்த காரியங்கள் முற்றிலுமாக சத்தியம் ஆகும். அவைகள் எங்கே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது? (சபையார் "ஆமென்" என்று கூறுகின்றனர்) ஆமென். வியூ! நான் மதப்பூர்வமான உணர்ச்சியடைகிறேன். ஆம், ஏன்? ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கின்றார். ஏனென்றால், உலகம் முழுவதுமாக, முன்னும் பின்னும் அவர் அதை நிரூபித்திருக்கிறார், ஒரு முறை கூட அது தவறினதேயில்லை. ஆமென். 251. எதை எதிர்ப்பார்த்து நீங்கள் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்? எதற்காக நீங்கள் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்? உஹ் - உஹ் இது தான் நேரம். தண்ணீர் கலக்கப்படுகின்றது. இப்பொழுது உள் செல்லுங்கள்; கடைசி நாட்களின் அடையாளங்கள் தான் அது. 252. "சாயங்கால நேரத்திலே வெளிச்சம் உண்டாகும்" என்று உங்களுக்கு தெரியும். ஆம். "உண்டாகும்," ஹேவுட் (Haywood) கூறினார். அது சரியே, "மகிமைக்கு செல்லும் பாதையை நீங்கள் நிச்சயமாக கண்டறியலாம்.''ஆம், இந்த கடைசி நாட்களில், நீங்கள் அதை கண்டு பிடிப்பீர்கள். 253. நோக்கிப் பாருங்கள். நீங்கள் எதைப் பார்த்துக் கொண்டிருகிறீர்களோ அதைப் பொறுத்து தான் காரியமானது உள்ளது. என்ன செய்யப்பட்டுள்ளது என்று நோக்கிப் பாருங்கள். அக்கினி ஸ்தம்பம், பரிசுத்த ஆவி, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். இப்பொழுது நாம் நோக்கிப் பார்ப்போமாக நாம் விசுவாசிப்போமாக. நாம் கடைசி நாட்களில் இருக்கின்றோம் என்பதை புரிந்துகொள்வோமாக. நாம் கடைசி மணி நேரங்களில் இருக்கின்றோம். நாம் கடைசி மணி நேரத்தின் கடைசி நிமிடங்களில் இருக்கின்றோம். 254. நான் அந்த படக்காட்சியை வைத்திருக்கிறேன், ஒருக்கால் நான் அதை சகோதரன் அவுட்லாவிடம் கொண்டு வருவேன், என்றாவது ஒரு நாளில், புதன் ஆராதனைக்காக கொண்டு வந்து உங்களுக்கு நான் அதை போட்டுக் காண்பிப்பேன், அதை நாங்கள் எருசலேமில் எடுத்தோம், அதற்கு நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் என்று பெயர் உள்ளது. விஞ்ஞானம் என்ன கூறியுள்ளதோ அதை வைத்து எடுத்துப் பாருங்கள். 255. வேதாகமம் கூறுகின்றது, "நீங்கள் அத்திமரத்தை பார்க்கும்போது மற்ற எல்லா மரங்களும் தங்கள் மொட்டுகளை விடும்போது" என்று இயேசு கூறுகின்றார். இஸ்ரவேல் ஒரு தேசமாக வந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் ஒரு தேசமாக இருக்கிறார்கள். மற்ற மரங்களையும் நாம் காண்கிறோம்: மெத்தோடிஸ்டுகள் தங்கள் லைகளை துளிர்விட்டுள்ளனர், கத்தோலிக்கர்கள் தங்கள் இலைகளை துளிர்விட்டுள்ளனர், ஏனைய மற்ற எல்லாமே தங்கள் இலைகளை துளிர்விட்டுள்ளனர்: ஓரல் ராபர்ட்ஸ் மூலமாக பெந்தெகொஸ்தே துளிர்விட்டுள்ளது; மற்ற எல்லாருமே தங்கள் எழுப்புதல்களை கொண்டிருக்கின்றனர், அவைகள் தங்கள் கிளையை துளிர் விட்டுள்ளது. அப்பொழுது "காலமானது சமீபமாயிருக்கின்றது என்று அறிந்து கொள்ளுங்கள். வையெல்லாம் சம்பவிக்குமுன் இந்த சந்ததி ஒழிந்து போகாது.' 256. இஸ்ரவேல் தன்னுடைய சொந்த தேசத்தில் உள்ளதை நாம் காணலாம், ஆறு முனைக் கொண்ட தாவீதின் நட்சத்திரக் கொடியாகிய தன்னுடைய கொடி மேலே உயர்த்தப்பட்டதாக இஸ்ரவேல் உள்ளது. அவள் தன் சொந்த பணத்தை வைத்திருக்கின்றாள், சொந்த தேசமாக ருக்கின்றாள், சொந்த இராணுவத்தை கொண்ட நாடாக இருக்கின்றாள். எல்லாவற்றையும் அவள் வைத்துள்ளதால், அவள்- அவள் இஸ்ரவேலாக இருக்கின்றாள். அது என்னவாயிருக்கின்றது? அதிலிருந்து இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை தேவன் எடுத்துக்கொள்ளும்படியாக, அவள் சுத்திகரிக்கப்படும்படியாக தயாராக இருக்கின்றாள். 257. இன்றைக்கு சபையைப் பாருங்கள், அது பெருங்குழப்பத்தில் உள்ளது, எல்லாவற்றைக் கொண்டும் குழப்பமுற்று உள்ளது. அது "அதில் இன்னும் அதிக அங்கத்தினர்கள் சேர்ந்துள்ளனர். அவர்கள் கொண்டிருப்பதைக் காட்டிலும் நம்மிடம் சிறந்தது உள்ளது. நாம் இது, அது, மற்றும் மற்றதாகவும் இருக்கின்றோம். 258. ஆனால் மணவாட்டியோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர் நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறாள். அந்த இரகசிய, கிறிஸ்துவின் இரகசிய வருகையானது இரவிலே தம்முடைய மணவாட்டியை எடுத்துக்கொள்ள இருக்கிறது. நான் வாசித்த ரோமியோ ஜூலியட் புத்தகம் போன்று, ஒரு முறை அவன் ஒரு ஏணியுடன் வந்து, தன் மணவாட்டியை அவர்கள் நடுவில் இருந்து எடுத்துக்கொண்டது போல அப்படி தான் ஒரு நாளிலே இயேசு வருவார், அவனுடைய கோட்பாடுகளை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கின்ற அவளுக்காக வராமல், கிறிஸ்துவை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் அவளுக்காக, அவர் வரும்படியாக காத்துக் கொண்டிருக்கிற, தன்னுடைய இருதயம் அவருக்கு நேராக நேர்ப்படுத்தி வைத்திருக்கின்றவர்களுக்காக அவர் வருகின்றார். 259. அவர்கள் வந்தனர், இரத்த சம்பந்தமான உறவு, ஈசாக்கு ரெபெக்காளைப் போல, சொந்த இரத்த உறவு. அப்படித் தான் நாமும் வரவேண்டியவர்களாக இருக்கின்றோம். அந்த பலியின் மூலமாக, நம்முடைய பாவங்கள் இயேசுவின் இரத்தத்தினாலே நீக்கப்பட்டு அதினாலே கிறிஸ்துவுடன் இரத்த சம்பந்தமான உறவைக் கொண்டவர்களாக இருக்கிறோம். ஏதோ ஒரு சபை கூறுவதன் படியாக அல்ல, யாரோ ஒருவர் சொன்னதின் படியாக அல்ல; ஆனால் இரத்தம் என்ன செய்துள்ளதோ அதன்படியும், அது என்ன செய்துள்ளது என்று நிருபித்து, அந்த அதே காரியத்தின் மூலமாக வார்த்தை கிரியை செய்து, இயேசு கொண்டிருந்த அந்த அதே ஊழியத்தை செய்துகொண்டிருத்தல் ஆகும். ஆமென். 260. சபையே நீ எதை நோக்கிப்பார்த்துக்கொண்டிருக்கிறாய்? ஓ இந்த கடைசி நாட்களில், ஓ, மக்களாகிய நம் மத்தியில் அவர் தாமே இருக்கின்றார். ஆனாலும் நாம் அதை மறந்து போகிறோம். அவர் நம் மத்தியில் இருக்கின்றார். ஆனாலும் நாம் அதை அறிந்திருக்கவில்லை. இக்காலை வேளையில் பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கின்றார், ஆனாலும் ஒருக்கால் நிறைய பேர்கள் இங்கிருந்து சென்று பிறகு அதை மறந்து போவார்கள். ஒருக்கால் வியாதிப்பட்டுள்ள அநேகர் தங்கள் விசுவாசமானது இப்பொழுது எங்கு நங்கூரமிடப்பட வேண்டும் என்றும் விசுவாசிக்க மறந்து போய் விடுவார்கள். அது உண்மை... 261. குளமானது உண்மையாகவே இப்பொழுது கலக்கப்பட்டுள்ளது. இயற்கையில் நடப்பதிலிருந்து தண்ணீரானது இப்பொழுது பின்பக்கமாக சுழன்று இயற்கைக்கு மேம்பட்டதை காண்பித்துக் கொண்டிருக்கின்றது. பரிசுத்த ஆவியானவர் தாமே இங்கே இருக்கின்றார். இயல்பான மக்கள் கூட்டதை, அறிவுத்திறன் வாய்ந்தவர்கள், இங்கே உட்கார்ந்துள்ள, நன்கு உடையுடுத்தியுள்ள, சிறந்த கல்வியறிவு பெற்று, பார்த்துக்கொண்டிருக்கின்ற மக்களை எடுக்கின்றார். பரிசுத்த ஆவி தாமே அவர்கள் மீது இறங்கி, ஏதோ ஒன்று அவர்களை சுற்றி சுழல்கின்றது. அவர்கள், "தேவனுக்கு மகிமை! அல்லேலூயா!" என்று கூச்சலிடுகின்றனர். என்ன நடந்தது? தண்ணீர் கலக்கப்பட்டுள்ளது. ஆமென். 262. அங்கே உட்கார்ந்துள்ள பாவிகள், பின்மாற்றமடைந்தவர்கள், விபச்சாரிகள், குடிகாரர்கள் மற்றும் எல்லாவிதமான மக்களும், இப்பொழுது பரிசுத்தமுள்ளவர்களாக, பக்தியுள்ளவர்களாகவும் உள்ளார்கள். அவர்கள் அதை பெற்றுள்ளதால், அவர்களுடைய வாழ்க்கையில் எந்த இடத்திலும் உங்களால் ஒரு தவறைக் கூட சுட்டிக் காண்பிக்க முடியாது. அது என்னவாயிருக்கின்றது? தண்ணீர் கலக்கப்படுகின்றது. எதை நீங்கள் நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் விழுகின்றதை.... 263. சிறிது நேரத்திற்கு முன்னர் நான் சகோதரன் அவுட்லாவுடன் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்து, வியாதிகளுடன் மற்றும் காரியங்களுடன் இருந்த மக்களை சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தேன். சரியாக இப்பொழுதுசரிப்படுத்தப்படும் என்றும், மக்களின் வாழ்க்கைகளில் நடந்த வெவேறு சம்பவங்களையும் மற்றும் காரியங்களையும் காண்பித்துக் கொண்டிருந்தேன். அது என்னவாயிருக்கிறது? அது தான் அந்த பரிசுத்த ஆவி, இயேசு கிறிஸ்து, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நாம் எதற்காக காத்துக்கொண்டிருக்கிறோம்? தண்ணீர் கலக்கப்படுவதற்காகவா? அது ஏற்கெனவே கலக்கப்பட்டுள்ளது. அந்த தூதன் கூடிய சீக்கிரத்தில் கடந்து சென்று விடுவான், எல்லா வல்லமையும் சென்று விடும், அதன் பிறகு எந்த ஒரு இரட்சிப்பும் விடப்பட்டு இருக்காது. நீங்கள் வெளியே புறம்பான இருளில் விடப்படுவீர்கள். 264. சில நாட்களுக்கு முன்னர், ஒரு சம்பவத்தைக் குறித்து கேள்விப்பட்டேன். முடிக்கையில், நாம் இதை கூறட்டும். ஒரு கொலையை செய்த பையன் ஒருவன் இருந்தான். அவன் ஏதோ தவறைச் செய்திருந்தான். 265. ஆம், முன்பொரு நாள் நான் ஒரு வழக்குக்காக அங்கே டெக்சாசுக்கு அழைக்கப்பட்டேன். முன்பொரு நாள் அவர்களிடமாக ஒரு சிறு சான்றிதழை பெற்றேன், அதில் "ஒரு வாழ்க்கையை இரட்சித்தல்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த சிறிய அயர்ஸ் க்காக அங்கே சென்றிருந்தோம். அன்றிரவு அங்கே ஹூஸ்டனில் கர்த்தருடைய தூதனின் புகைப்படத்தை எடுத்த அந்த மனிதன், அவர் என்னை தாக்கி பேசி என்னைக் குறித்து உலகில் உள்ள எல்லா குறைகளையும் என் பேரில் கூறியிருந்தார். அவர் தன் கரத்தை என் மீது போட்டு என்னை கட்டித் தழுவி, "மக்களை தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரத்தை கைக்கொள்கிறவர் என்று நான் கூறின அந்த அதே மனிதன் தாமே, சகோதரன் பிரன்ஹாம் ... என் மகனுக்கு மின்சார நாற்காலியினால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவனைக் காப்பாற்ற வந்துள்ளார் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்" என்று கூறினார். அது சரியே. அங்கே அவர்களுக்கு முன்னர் நான் பேசினேன். அப்போது கவர்னர் என்ன செய்தார் தெரியுமா? அதற்கு மன்னிப்பை அளித்தார். ஓ என்னே, நான்கு ஓ அல்லது ஐந்து நாட்களுக்குப் பிறகு அவன் சாகவிருந்தான். சரியா. ஏன்? நான் ஜீவனில் அக்கறை கொண்டிருப்பவன் ஆவேன். ஜீவன்! 266. நான், "ஐயா, அந்த பையனின் ஜீவனை எடுக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. முதல் முதலாக சிந்தப்பட்ட இரத்தமானது என்னவென்றால் ஒரு சகோதரன் இன்னொருவனுடைய இரத்தத்தை சிந்தினது. அவன் அவனுடைய இரத்தத்தை சிந்தினான். ஆனால் தேவனோ அவனுக்கு மரண தண்டனை விதித்து அவன் ஜீவனை எடுத்துப்போடவில்லை அவர் அவன் மேல் ஒரு அடையாளத்தை போட்டார், அதென்னவென்றால் அவனை யாரு கொல்லகூடாது என்று போட்டார். அதை அழித்துப் போட்டு விடாதீர்கள்." என்று கூறினேன். ஆமென், ஆமென். சரியே. நாம் ஜீவனில் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றோம். 267. ஒரு நாளில், ஒரு மனிதனை கொலை செய்த ஒரு பையனின் தாயார். அந்த பையன் சாவதற்கு தயாராக இருந்தான். ஆகவே அந்த சிறிய தாயானவள் அந்த கவர்னரின் வாசலிலே நின்று கொண்டிருந்தாள், அவர்கள் காத்திருக்கச் சொன்னார்கள். அதற்கு பிறகு, முடிவாக, காவல்காரர்களில் ஒருவன், "கவர்னர் அவர்களே, அந்த பையனின் தாய் அங்கே வெளியே இருக்கின்றாள், உங்களை சந்திக்க வேண்டும் என்கிறாள். அவள் உங்களை காணவேண்டும் என்று கூறுகிறாள்" என்று கூறினான். 268. ஆகவே அவர்கள் கதவை திறந்தனர், "அம்மாளே, கவர்னர் உங்களை சந்திப்பார்" என்று கூறினார்கள். 269. அந்த பரிதாபத்திற்குரிய தாய் கைகளையும் கால்களையும் கொண்டு ஊர்ந்து வந்து கவர்னரின் பாதங்களில் வந்து அவனண்டை வந்தாள் தன் கரங்களை அவன் பாதத்தின் மீது வைத்தாள், "கவர்னரே, மதிப்பிற்குரிய ஐயா, முடிவில் உம் ஒருவரை தான் நான் நம்பியிருக்கிறேன், நீர் ஒருவர் தான் என் மகனின் உயிரை காக்க முடியும். தயவு கூறுங்கள் ஐயா. அவன் குற்றம் செய்தவன் என்று எனக்கு தெரியும். அவன் குற்றவாளி. உங்கள் நீதிமன்றங்கள் அவன் குற்றவாளி என்று அறிந்து தீர்ப்பளித்துள்ளனர்" என்று கூறினாள். ஆகவே தேவனுடைய நீதிமன்றத்தில் நம்மில் எத்தனைப் பேர் குற்றமற்றவர்களாக இருக்கின்றோம்? மேலும் அவள், "உங்கள் நீதிமன்றங்கள் அவனை குற்றவாளியாக உள்ளான் என்று கண்டறிந்துள்ளன. அவன் கொலை செய்தான், ஆகவே அவன் மரணத்திற்கு பாத்திரவான். எனக்கு அது தெரியும். ஆனால், ஐயா, ஒரு மனிதன் என்ற வகையில், என் மகனின் ஜீவனை எடுக்க எந்த ஒரு உரிமையும் உங்களுக்கு இல்லை. தேவனால் மாத்திரமே ஜீவனை அளிக்க முடியும், அந்த ஜீவனை தேவனால் மாத்திரமே எடுக்க முடியும். அதைச் செய்யாதீர்கள், ஐயா. தயவு செய்து அதைச் செய்யாதீர்கள். நான் உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன், ஒரு தாயின் இருதயமானது எவ்வளவு தான் தாங்கும்." என்றாள். ஆகவே அந்த கவர்னர் அவளை அனுப்பிவிட்டார். 270. அந்த தாயின் மன்றாட்டு அவருடைய இருதயத்தை வெகுவாக நொறுக்கியது, அவர் உடனே சிறைச்சாலைக்கு புறப்பட்டு செல்கிறார், சிறையில் அந்த பையன் உட்கார்ந்திருந்தான், அங்கே அந்த கவர்னர் சென்றார். 271. சிறையில் இருந்த அவனோ ஒரு விதமான சிக்கலான மனநிலை (complex) அவனுக்கு ஏற்பட்டு விட்டிருந்தது. இன்றுள்ள சபை எப்படியாக காரியத்தை செய்துள்ளதோ அதைப் போல, "பார், நான் விரும்பும் விதமாகத் தான் நீ பிரசங்கிக்க வேண்டும்," என்று கூறுகிறது, அப்படியில்லை என்றால் நீங்கள் அந்த பிரசங்கத்தை கேட்பதே இல்லை. "நான் அதற்கு எந்த ஒரு கவனத்தையும் கொடுத்து கேட்கமாட்டேன்!" அந்த பையன் அப்படியாக உட்கார்ந்திருந்தான். அங்கிருந்த மனிதன் ஒவ்வொருவராக வந்து அவனிடம் பேச முயற்சித்தனர். ஆனால் அவனோ தன்னை சுற்றிலும் ஒரு மனோபாவத்தை அமைத்து கொண்டு அவர்கள் சொல்வதை கேட்கக்கூடாது என்று முடிவு செய்திருந்தான். 272. அப்போது அந்த கவர்னர் உள்ளே வந்தார். அவர், "மகனே, நான் உன்னிடம் சற்று பேச விரும்புகிறேன்" என்றார். அதற்கு அவன், "வாயை மூடுங்கள், இங்கிருந்து வெளியே செல்லுங்கள்" என்று தன் சிறைச்சாலை தனி அறையிலிருந்து கூறினான். "மகனே, நான் உனக்கு உதவி செய்யவே வந்துள்ளேன்" என்று அந்த கவர்னர் கூறினார். அதற்கு அவன், "நீங்கள் இங்கிருந்து வெளியே போங்கள் என்று உங்களுக்கு கூறினேன் அல்லவா" என்று கூறினான். 273. அதே போல தான் மக்கள் இன்று பரிசுத்த ஆவியானவருக்கு செய்கின்றனர். ஆமாம். "வெளியே செல் உனக்கும் எனக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை" என்று கூறுகின்றார்கள். கதவை மறுபடியும் தட்டுகிறார். "நான் உங்களுக்கு செவிகொடுத்தால், என் சீட்டு சூதாட்ட விருந்தை நான் விட்டு விட வேண்டியதாக இருக்கும். நான் இதை விடவேண்டி இருக்கும். நான் அதை விடவேண்டியதாக இருக்கும். என் சபைக் கோட்பாட்டை நான் விட வேண்டுமே. நான் விட்டு விட வேண்டுமே." பாருங்கள்? நீங்கள் அவருக்கு செவிகொடுக்கிறது நலம். அவர் ஒருவரிடம் மாத்திரம் தான் மன்னிப்பு என்பது உள்ளது. அது சரி. நீங்கள் எதை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்? பாருங்கள்? 274. ஆகவே அந்த பையன் அநேக காரியங்களை நோக்கிப் பார்த்திருந்து விட்டான், இந்த கவர்னரை நோக்கிப் பார்க்க அவனுக்கு பயமாக இருந்தது. அவன் தன் தலையை திருப்பி வைத்திருந்தான். 275. அந்த விதமாக தான் மக்கள் இன்று பீட அழைப்பின் போது செய்கின்றது. அவர்கள் தங்கள் தலையை திருப்பி வைத்துக் கொள்கின்றனர். அவர்கள் அதை கேட்க விரும்பவில்லை. "அது தான் சத்தியம்" என்று கூறுகின்ற தேவனிடமிருந்து தங்கள் தலையை திருப்பிக் கொள்கின்றனர். ஒரு சிறிய, மெல்லிய சத்தம், ஒரு தொடுதலைப் போன்று. 276. உங்களுக்கு தெரியுமா, எலியா அந்த பெருங்காற்றின் சத்தம், இரத்தம், அக்கினி, புகை ஆகியவைகளின் சத்தத்தை கேட்டான். ஆனாலும் அது அவனுடைய கவனத்தை கோரவில்லை ஆனால் அந்த சிறிய அமர்ந்த மெல்லிய சத்தத்தை அவன் கேட்டபோது, அவன் வெளியே வந்தான். ஓ அந்த சிறிய மெல்லிய சத்தத்தை சபையானது கேட்க தவறியுள்ளது! சரி. 277. ஆதலால், அந்த மனிதன் அவனால் முடிந்த வரைக்கும் முயற்சி செய்தான். அந்த கவர்னர் அந்த பையனிடம் பேசி புரிய வைக்க முயற்சி செய்தார். அந்த பையனோ, "ஒன்று நீங்கள் இங்கிருந்து வெளியே செல்கிறீர்களா அல்லது நான் உங்களை வெளியே தூக்கி போடட்டுமா" என்றான். 278. அந்த கவர்னர் திரும்பி, "சரி மகனே. என்னால் முடிந்த வரைக்குமாக நீ புரிந்து கொள்ள முயற்சி செய்தேன்" என்று கூறினார். 279. அவர் வெளியே நடந்து போன போது, அந்த பையன் சுற்றிலும் பார்த்தான், அந்த கவர்னர் அந்த சிறையின் பொது அறையில் நடந்து சென்ற போது, அந்த பையன் கர்வத்துடன் திமிர் பிடித்தவன் போல பார்த்துக்கொண்டிருந்தான். 280. அவன் அவ்விதமாக பார்த்துக்கொண்டிருந்த போது, காவலர்களில் ஒருவன் வந்து, "கவர்னர் அவர்களே, உங்கள் முயற்சிக்கு எதாவது நன்மை ஏற்பட்டதா?" என்றான். அதற்கு அவர், "எதுவும் இல்லை. அவன் செவிகொடுக்க மறுக்கிறான்" என்று கூறினார். 281. உடனே அந்த பையன் குதித்தான். சிறைச்சாலை கம்பிகளை பிடித்துக்கொண்டு, "அது யார்?" என்றான். "அவர்கவர்னர். உன்னை மன்னிக்க அவர் வந்துள்ளார்." 282. ஆனால் அப்போதோ மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது. அவன் கூச்சலிட்டான். அவன் அழுதான். "அதை சற்று நினைத்துப் பார். இங்கே இந்த சிறைச்சாலை தனி அறையிலே கவர்னரே வந்தார், என்னை மன்னிக்க வந்தார், ஆனால் நானோ அவரை புறக்கணித்து விட்டேனே" என்றான். 283. பிறகு அவர்கள் அவன் கழுத்தில் தூக்கு கயிறை சுற்றினார்கள், அவன் முகத்தை கறுப்பு துணியால் மூடும் முன்னர், அவன் பதிமூன்று அடிகள் நடந்த பிறகு, அவன் கூறின கடைசி வார்த்தைகள், "அதை சற்று நினைத்துப் பார். கவர்னரே என் சிறைசாலை தனி அறையில் வந்து நின்றார், என்னை மன்னிக்க வந்தார், ஆனால் நானோ அவரை கூறினதை புறக்கணித்தேன்" என்றான். பிறகு அவனை தூக்கில் போட்டனர். 284. ஓ இக்காலை வேளையிலே இங்கே கவர்னரிலும் பெரியவர் இருக்கின்றார். இயேசு கிறிஸ்து இங்கே இருக்கின்றார். ஆகவே ஒரு மனிதன் அல்லது பெண் என்று அழைக்கப்படும் அந்த சிறிய தனி அறையிலே, அவர் மன்னிபை அளிக்க இங்கே இருக்கின்றார். அவரை வேண்டாம் என்று புறக்கணிக்க வேண்டாம், வேண்டாம். அவ்விதம் செய்யாதீர்கள். இங்கே உங்கள் ஜீவியத்தில் தேவன் எதற்காக உங்களை கொண்டு கொண்டு வந்திருக்கின்றார் என்பதன் நோக்கத்தை கண்டறிந்து கொள்ளுங்கள். 285. நண்பர்களே, நாம் ஒரு மகத்தான மணி நேரத்தில் இருக்கின்றோம். நீங்கள் அதை அறிவீர்கள். அந்த பழைய பாடலானது கூறுவது போல நாடுகள் உடைகின்றன, (இது என்ன நேரம் என்று பாருங்கள்), இஸ்ரவேல் விழித்தெழும்புகின்றது வேதாகமம் முன்னுரைத்த அடையாளங்கள் புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன திகில்அவர்களை சூழ்ந்துள்ளது சிதறப்பட்டோரே, உங்கள் சொந்தத்திற்கு திரும்புங்கள். மீட்பின் நாள் சமீபமாயுள்ளது மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போயுள்ளன பரிசுத்த ஆவியால் நிறையப்பட்டு உங்கள் விளக்குகளின் திரியை வெட்டி சுத்திகரியுங்கள் உங்கள் மீட்புசமீபமாயுள்ளது, தலையுயர்த்தி நோக்குங்கள் அது சரியே, கள்ள தீர்க்கதரிசிகள் பொய்யுரைக்கின்றனர் இயேசு கிறிஸ்துவே நம் தேவன் என்ற தேவனுடைய சத்தியத்தை மறுதலிக்கின்றனர் அது சரியே இந்த சந்ததி தேவனின் வெளிப்பாட்டை மறுதலிக்கின்றது ஆனால் நாமோ அப்போஸ்தலர்களின் அடிச்சுவடுகளில் நடப்போம் மீட்பின் நாள் சமீபமாயுள்ளது மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போயுள்ளன பரிசுத்த ஆவியால் நிறையப்பட்டு உங்கள் விளக்குகளின் திரியை சுத்திகரியுங்கள் உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது, தலையுயர்த்தி நோக்குங்கள் 286. அது சரியே. சகோதரனே, நோக்கிப் பாருங்கள், இந்த உலகத்தின் எல்லா கோட்பாட்டிலிருந்தும் விலகிச் செல்லுங்கள். நோக்கிப் பாருங்கள். கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். இயேசுவை நோக்கிப் பாருங்கள், அந்த பாடல் கூறுவது போல. "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என் சகோதரனே, பிழைத்துக்கொள் இப்பொழுது இயேசுவை நோக்கிப் பார் பிழைத்துக்கொள் அது அவருடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என்பது அதுவே தான் இக்காலையில் எதை நீங்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என் சகோதரனே, பிழைத்துக்கொள் இப்பொழுது இயேசுவை நோக்கிப் பார் பிழைத்துக்கொள் அது அவருடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என்பது அதுவே தான் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் அதை சேர்ந்து பாடுவோமாக. உங்களுக்கு இந்த பாடல் தெரியுமா? "நோக்கிப் பார்த்துப் பிழைத்துக்கொள்" என் சகோதரனே, பிழைத்துக்கொள் இப்பொழுது இயேசுவை நோக்கிப் பார், பிழைத்துக்கொள் அது அவருடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா! "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என்பது அதுவே தான் இப்பொழுது நாம் அதை சேர்ந்து பாடுவோமாக. "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என் சகோதரனே, பிழைத்துக்கொள் இப்பொழுது இயேசுவை நோக்கிப் பார் பிழைத்துக்கொள் அது அவருடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா! "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என்பது அதுவே தான் 287. நீங்கள் எதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? இயேசுவை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கின்றவர்களுக்கு, இரண்டாவது முறையாக அவர் தாமே இரட்சிப்பு உண்டாகத்தக்கதாக மகிமையோடே வருவார், இந்த பாவம் நிறைந்த உலகத்தை விட்டு, இந்த பாவமும் மற்றும் காரியங்களிலிருந்து நம்மை வெளியே எடுக்க வருகின்றார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையார் 'ஆமென்" என்கின்றனர்] நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள். உங்களால் செய்ய முடிகின்ற ஒரே காரியம் என்னவென்றால், வார்த்தையை எடுப்பது தான். ஜீவிக்கின்ற வார்த்தை மாம்சமாக்கப்படப் போகின்றது என்பதற்கான பிரதிநிதித்துவமாக கோலின் மீது வைக்கப்பட்ட சர்ப்பமானது இருந்தது போன்று, பரிசுத்த ஆவியின் பிரசன்னம் நம் நடுவில் இருந்து அது உறுதிப்படுத்தப் படுவதன் பிரதிநிதித்துவமாக இன்று வார்த்தையானது இருக்கின்றது. இக்காலை வேளையிலே அவர் தாமே நம்முடைய சிறிய அணுக்குள்ளாக இருக்கின்றார். நாம் நம் தலைகளை தாழ்த்துகையில் நீங்கள் அவருக்கு செவிகொடுக்க மாட்டீர்களா? தொடர்ந்து இசையை வாசியுங்கள் சகோதரனே. "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என் சகோதரனே, பிழைத்துக்கொள் இப்பொழுது இயேசுவை நோக்கிப் பார், பிழைத்துக்கொள் அது அவருடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா! "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என்பது அதுவே தான் [சகோதரன் பிரன்ஹாம் "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என்னும் பாடலை வாய் மூடி மெல்ல இசைக்கின்றார்] "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என் சகோதரனே, பிழைத்துக்கொள் இப்பொழுது இயேசுவை நோக்கிப் பார், பிழைத்துக்கொள் அது அவருடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என்பது அதுவே தான் 288. உங்கள் தலைகளை தாழ்த்தியிருக்கையில், இப்பொழுது இயேசுவை நோக்கிப் பாருங்கள், சகோதரனே, அந்த வார்த்தை. நீங்கள் இதுவரை மனந்திரும்பவில்லை என்றால், மனந்திரும்புங்கள். நீங்கள் இதுவரைக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறவில்லை என்றால், ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள் என்ற வாக்குத்தத்தமானது உங்களுக்கு உண்டு. அதைக் கொண்டு தான் மூல சபையானது ஆரம்பித்தது, அந்த விதமாகத் தான் அது ஆரம்பித்தது. தேவன் முடிவற்றவர் ஆவார். அவர் தம்முடைய திட்டத்தை மாற்றவே முடியாது. அது மாறாததாக அதே விதத்திலே இருக்கவேண்டும். சபையானது பெந்தெகொஸ்தே நாளன்று மனந்திரும்புதல், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் மற்றும், பரிசுத்த ஆவியை பெறுவீர்கள் என்ற வாக்குத்தத்தத்துடனே ஆரம்பமானது. "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்." 289. அது உங்களுக்கு சம்பவிக்கவில்லை என்றால், நண்பரே, நீங்கள் இப்பொழுது தேவனிடமாக உங்கள் கரத்தை உயர்த்தி "சகோதரன் பிரன்ஹாம், எனக்காக ஜெபியுங்கள்" என்று கூறுவீர்களா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை, உங்களை, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அருமையானது. தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக, உங்களை, உங்களை. அது அருமையானது. அது சரியே. "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என் சகோதரனே, பிழைத்துக்கொள் இப்பொழுது இயேசுவை நோக்கிப் பார், பிழைத்துக்கொள் அது அவருடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என்பது அதுவே தான். 290. இப்பொழுது, இது வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் கடைசி நாட்களில் இருக்கின்றோம். இதைக் குறித்து மிகைப்படுத்தப்பட்டு கூறப்பட்டுள்ள காரியங்கள் எதுமே இல்லை. இதில் பொய்யானது, கள்ளக் காரியமானது, புரளி, கட்டுக்கதை எதுவுமே இல்லை. அது வார்த்தை வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருத்தல் என்பதே. அது வார்த்தை சத்தியத்தை கூறுதல் என்பதாகும். நீங்கள் கூட்டங்களில் இருந்துள்ளீர்கள். இதற்கு முன்னர் நீங்கள் கூட்டங்களில் இருந்துள்ளீர்கள், ஆகவே அது சத்தியம் என்று உங்களுக்கு தெரியும். 291. இப்பொழுது நம்மிடையே போலியாக செய்து காண்பிப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். நமக்கு அது தெரியும். ஆனால் அவர்களை நோக்கிப் பார்க்கவேண்டாம். மோசேயுடன் ஒரு கலப்பான ஜனக்கூட்டமானது இருந்தது. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்ற சில உண்மையான இஸ்ரவேலரும் இருந்தனர். பாருங்கள்? 292. சகோதரனே, அதே போல தான் இந்த குழுவிலும் இருக்கிறது. உண்மையான, அசலான ஆவியால் நிரப்பப்பட்ட ஆண்கள், பெண்கள் உள்ளனர், உண்மையானவர்கள், உண்மையானவர்கள், அவர்கள் ஜீவியத்தின் பேரில் ஒரு விரலைக் கூட காண்பிக்க முடியாது. நீங்கள் இக்காலை வேளையிலே நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்ளலாம் அல்லவா? போலியாட்கள் பேரிலிருந்து உங்கள் பார்வையை திருப்புங்கள். அதி தீவிர மத பக்தி வைராக்கியம் கொண்டவர்களாக இருப்பவர்கள் மீதுள்ள உங்கள் பார்வையை அப்புறப்படுத்துங்கள். அந்த எல்லாவிதமான காரியத்திலிருந்தும் உங்கள் பார்வையை திருப்புங்கள், உண்மையான இயேசுவை நோக்கிப் பாருங்கள். நாம் அவருடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளோம். அல்லேலூயா. "அவரை நோக்கிப் பார்ப்பவர்களுக்கு இரண்டாந்தரம் அவர் தரிசனமாவார்." 293. நீங்கள் முன்னே பீடத்தண்டை ஜெபத்திற்காக நிற்க வர விரும்புவீர்களானால், நீங்கள் பரிசுத்த ஆவியை பெறவில்லை என்றால்; அப்போஸ்தலர் புத்தகத்தில், பேதுரு பேசியுள்ள, இந்த எல்லா தகுதிகளையும் நீங்கள் சந்தித்திராவிட்டால், அவைகள் உங்கள் ஜீவியத்தில் காணப்பட நீங்கள் விரும்புவீர்களானால். இன்னும் ஒரு அடி நாம் பாடும் போது, உங்களை அழைக்க நான் விரும்புகிறேன், ஜெபத்திற்காக பீடத்தண்டை வந்து நில்லுங்கள். அதற்கு பிறகு நாங்கள் ஞானஸ்நானத்தை கொடுப்போம் அல்லது நீங்கள் பரிசுத்த ஆவியை பெறும்படியாக நாங்கள் உங்களுக்கு ஜெபிப்போம். நாம் இந்த பாடலை பாடுகையில் "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என் சகோதரனே, பிழைத்துக்கொள் இப்பொழுது இயேசுவை நோக்கிப் பார், பிழைத்துக்கொள் இன்னும் வேறு யாராவது வர விரும்புகிறீர்களா? அது அவருடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா! "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என்பது அதுவே தான் "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என் சகோதரனே, பிழைத்துக்கொள் இப்பொழுது இயேசுவை நோக்கிப் பார், பிழைத்துக்கொள் அது அவருடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என்பது அதுவே தான் 294. இக்காலையில் பெண்களுக்கு என்னவாயிற்று? எல்லாரும் ஆண்கள்? இப்படிப் பார்ப்பது அபூர்வம். இது உத்தமமாக இருக்கும் ஒரு மணி நேரம் ஆகும். சரி. "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என் சகோதரனே, பிழைத்துக்கொள் இப்பொழுது இயேசுவை நோக்கிப் பார், பிழைத்துக்கொள் அது அவருடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா! "நோக்கிப் பார்த்து......." என்பது அதுவே தான் 295. இன்னும் வேறு யாராவது சிலர் இருப்பார்கள் என்று நான் உணர்கிறேன். முன்னே வாருங்கள். இங்கே நின்றுகொண்டிருக்கின்ற இந்த நான்கு மனிதர், இன்னும் வரவேண்டியவர் அநேகர் உள்ளனர். வாருங்கள். நீங்கள் பிழைக்க விரும்புகிறீர்களா? நினைவில் கொள்ளுங்கள், தேவன் அதை எழுதி வைத்துக்கொள்கிறார். அவர்கள், "இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டனர். அவர்களுக்கு சொல்லப்பட்டது. என்ன செய்யவேண்டும் என்று இப்பொழுது அவரால் அதை மாற்றவே முடியாது, வேதாகம காலங்கள் முழுவதுமாக அது மாற்றப்படவே இல்லை. 296. இப்பொழுது நாம் பலதரப்பட்ட கருத்துக்களை கொண்டிருக்கிறோம். இப்பொழுது அதை மாற்றுவோம், ஓ எல்லாவற்றையும். இப்பொழுது அவைகளை நோக்கிப் பார்க்காதீர்கள். அவர்கள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்காதீர்கள். 297. இங்கே அவர் என்ன கூறியிருக்கின்றார் என்று பாருங்கள். வேதாகமத்தை நோக்கிப் பாருங்கள். சகோதரனே, நீ நோக்கிப் பார், அப்பொழுது பிழைத்துக்கொள்வாய். உங்களால் அந்த ஒரு வழியில் மாத்திரமே முடியும்; சகோதரியே, உங்களுக்கும் கூட அப்படி தான். இந்த அனுபவத்தை நீங்கள் பெறாமலிருக்கலாம். சரியாக அது தான் வேதாகமம் என்றும், அதிலே தேவன் தாமே உறுதிப்படுத்தப் பட்டிருப்பதை நீங்கள் அறியாமல் இருப்பீர்களானால் இப்பொழுதே வாருங்கள். ஆபத்தில் சிக்கிக்கொள்வதை தவிர்த்து விடுங்கள். (Don't take no chance) 298. இக்காலை வேளையிலே நீங்கள் எதை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? எதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த மிகப் பயங்கரமான, பரபரப்பான நாளிலே நீங்கள் நின்று விட்டீர்களா? எதற்காக நீங்கள் எதிர்பார்த்துப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? தேவன் எல்லாவற்றையும் சரியாக அமைத்து வைத்துள்ளாரே. 299. தண்ணீர் கலக்கப்பட்டது, அந்த சிறிய முதல் அசைவு, மக்கள் உள்ளே குதித்தனர். 300. வானத்திலே உள்ளங்கையின் அடையாளம், "அந்த மேகம், ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம்" என்று எலியா கூறினான். அது என்னவாயிருந்தது? அவன் விசுவாசித்துக்கொண்டே இருந்தான். "பெருமழையின் இரைச்சலை நான் கேட்கிறேன்" என்றான். அந்த மேகம் இரண்டு மேகங்களாக ஆனது. பிறகு அந்த இரண்டு மேகங்கள் ஒரு குன்றின் அளவுக்கு ஆனது. பிறகு அந்த குன்று ஒரு மலையின் அளவுக்கு ஆனது. அந்த மலை இன்னொரு மலையாக ஆனது. முதல் காரியம் என்ன தெரியுமா, முழு வானமும் இடி இடித்து, மழை கொட்டினது. அது என்ன? தேவன் அனுப்பினதை அவன் ஏற்றுக்கொண்டான். 301. ஆகவே இக்காலையிலே, அந்த சிறு காரியமானது உங்கள் இருதயத்தை தொட்டு, "எனக்கு அது தேவை" என்று கூறுமானால், அது தான் அந்த சிறு அடையாளம், ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அளவு ஆகும். வாருங்கள். "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என் சகோதரனே, பிழைத்துக் கொள் இப்பொழுது இயேசுவை நோக்கிப் பார் பிழைத்துக்கொள் அது அவருடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா "நோக்கிப் பார்த்து......." என்பது அதுவே தான் நாம் நமது தலைகளை தாழ்த்துவோமாக. 302. இங்குள்ள சகோதரர் தாமே. ஊழியக்கார சகோதரராகிய உங்களில் சிலர், நீங்கள் தாமே கீழே இறங்கி சென்று, சகோதரரே, உங்களில் சிலர், சென்று இங்கு கீழே வந்துள்ள இந்த சகோதரரின் மீது கரங்களை வைப்பீர்களா, சகோதரரே, உங்களால் கூடுமானால், சென்று உங்கள் கரத்தை வையுங்கள். 303. கர்த்தராகிய இயேசுவே, இந்த மனிதன் அந்த அறிக்கையை கொண்டு வந்துள்ளார், இக்காலையில் வந்துள்ளார். அவரிடம் இருக்கின்ற எல்லா சந்தேகங்களையும் எடுத்து கரைத்துப்போடும். அந்த இரத்தம் தானே, பிதாவே! கர்த்தாவே, எங்களை மன்னியும்!........?......... எல்லாவற்றையும் விட்டு விடும்படிக்கு அவர் மிகவும் பெருமதிப்புக்குரியவர் ஆவார். 304. அதே போல, இங்கே இருக்கின்ற இந்த சகோதரர், கர்த்தாவே, இவருடைய அறிக்கை தாமே இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் போடப்படுவதாக. இவர் தாமே பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுவாராக. தேவன் தாமே இவருடைய பெயரை மாற்றுவாராக, தன்னுடைய கோலின் மேல் சார்ந்து நின்றிருக்கிறார். ஆனால் பரிசுத்த ஆவி அவருக்கு தேவைப்படுகிறது. இக்காலையில் தன்னுடைய அறிக்கையை அவர் செய்திருக்கிறார்! .....?...... 305. அவரை பரிசுத்த ஆவியால் நிரப்பும் ...?.... பரிசுத்த ஆவியின் மகத்தான வல்லமையானது புறப்பட்டு வருவதாக ஆமென். 306. சபை முழுவதுமாக உங்கள் தலைகளை இப்பொழுது தாழ்த்துங்கள், ஜெபத்தில் இருங்கள். இந்த சகோதரர் இப்பொழுது ஜெபம் செய்துகொண்டிருக்கின்றார், எல்லோரும் உங்கள் கரங்களை இவர்கள் மீது வைத்து ஜெபியுங்கள். இதோ, இன்னொருவர் இப்பொழுது வருகிறார். 307. கர்த்தராகிய இயேசுவே, இன்று அவர் அறிக்கை செய்ய வருகின்றார், அந்த அறிக்கையின் பேரிலே தேவனே, நீர் தாமே அவரை பரிசுத்த ஆவியால் நிரப்பும்படியாக நான் ஜெபிக்கின்றேன் கர்த்தாவே. இப்பொழுது அவர் தன் பார்வையை கல்வாரியை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கின்றார், அங்கே உள்ள இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே இவரை சுத்தமாக்கும். அந்த பிளவிற்கு அப்பால். அந்த ஒரே இரத்தம் மாத்திரமே தாண்டிச் செல்லும். இந்த பிளவிற்குள்ளாக புரண்டோடுவது அந்த இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே, அது இன்றிரவு இவரை தேவனுக்கு பக்கத்தில் வைக்கின்றது. பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக இதை அருளும். ஆமென். 308. இப்பொழுது எல்லோரும் ஜெபத்தில் இருங்கள், சகோதரரே, இங்கே நின்று கொண்டிருக்கின்ற இந்த மனிதரின் மீது உங்கள் கரத்தை வையுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் இப்பொழுது ஜெபித்துக்கொண்டிருங்கள். 309. இப்பொழுது, உங்கள் அறிக்கையை செய்ய இப்பொழுது நீங்கள் வாருங்கள். தேவனால் பொய் சொல்ல முடியாது. 310. சரியாக அந்த விதத்தில் தான் நான் அதை பெற்றுக்கொண்டேன், நான் மேலே வந்து, "தேவனாகிய கர்த்தாவே, நான் மிகவுமாக உத்தமத்துடனே வருகின்றேன். என் முழு இருதயப்பூர்வமாக அதை செய்ய விழைகிறேன். இது மரணத்துக்கும் ஜீவனுக்கும் இடையே உள்ள ஒன்றாகும், ஆதலால் நான் - நான் மரிக்க விரும்பவில்லை நான் - நான் பிழைத்துக்கொள்ள விரும்புகிறேன், நான் - நான் பரலோகத்துக்கு செல்ல விரும்புகிறேன். நீர் வாக்குத்தத்தம் செய்திருக்கின்றீர்" என்று கூறினேன். 311. பெந்தெகொஸ்தே என்ற ஒரு காரியத்தைக் குறித்து நான் கேட்டதேயில்லை, அதை பற்றின ஒன்றை கேட்டதில்லை. ஆனால், நானோ, "இங்கே இந்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரியம் என்னவென்றால், வேதாகமத்தின் கூறுவது என்னவென்றால், நான் மனந்திரும்ப வேண்டும் என்றே கூறுகின்றது, ஆகவே நான் அதை செய்கிறேன். நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டேன். இப்பொழுது, கர்த்தாவே, நீர் தாமே எனக்கு பரிசுத்த ஆவியை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறீர். நீர் அதை செய்வதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர்." என்றேன். 312. அந்நிய பாஷையில் பேசுவது என்பதான ஒன்றை நான் கேள்வி பட்டதில்லை, வேதாகமத்தில் அது எழுதப்பட்டிருப்பதை தவிர நான் அதை குறித்து அறியவில்லை அப்படி ஏதாவது இருக்குமா என்று நினைத்து கூட பார்க்கவில்லை. சரியாக அங்கே அறையில் ஒரு ஒளியானது வந்தது, ஒரு சிலுவையின் வடிவில் வந்தது, அது கூறினதெல்லாமே அந்நிய பாஷையில் இருந்தது. நான், "ஐயா, உங்கள் சத்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, உங்கள் மொழியும் புரியவில்லை. நீர் ஆங்கிலம் பேச முடியவில்லை என்றால், என்னால் உங்கள் மொழியை புரிந்து கொள்ள முடியவில்லை; நீர் தாமே மறுபடியுமாக திரும்ப வந்து மறுபடியுமாக பேசுவீரானால், நீர் என்னை ஏற்றுக்கொண்டீர் என்பதற்கான ஒரு அடையாளமாக அது இருக்கும்" என்று கூறினேன். மறுபடியுமாக அது வந்தது. 313. ஓ சகோதரனே, நான் நோக்கிப் பார்த்தேன் பிழைத்தேன். அப்பொழுதிலிருந்து நான் தேவனுடைய மகிமையான பரிமாணங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன், அதில் தாமே தேவனுடைய வல்லமையானது அவருடைய ஆசீர்வாதங்களின் மதகுகளிலிருந்து தாராளமாக புரண்டோடிக்கொண்டிருக்கின்றது. 314. இப்பொழுது நாம் நிற்கையில் இங்கே இருக்கின்ற நம்மில் ஒவ்வொருவரும் நமது கரங்களை உயர்த்துவோமாக, இந்த மனிதரும் கூட கரத்தை உயர்த்தட்டும். இப்பொழுது சகோதரரே, பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கின்றார். மன்னிக்கிறவர் சரியாக இங்கே உங்கள் பக்கத்திலே இருக்கின்றார். நாம் முழு இருதயத்தோடும் இப்பொழுது விசுவாசிப்போமாக. ஒவ்வொருவரும் விசுவாசியுங்கள். இப்பொழுது நம் சத்தங்களை தேவனிடமாக எழுப்புவோமாக. தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. பரலோகப் பிதாவே, நாங்கள் ஜெபிக்கிறோம் ...?.... கர்த்தராகிய இயேசுவே, நான் ஜெபிக்கின்றேன், நீர் தாமே இதை அருளுவீராக....?.... கர்த்தாவே, இந்த பெண் தாமே அதை இப்பொழுது காணத் தவற வேண்டாம் ....?....... "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என் சகோதரனே, பிழைத்துக்கொள் இப்பொழுது இயேசுவை நோக்கிப் பார், பிழைத்துக்கொள் அது அவருடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா "நோக்கிப் பார்த்து....... " என்பது அதுவே தான் 315. வியாதிபட்டோர் எல்லோருமே, நீங்கள் இப்பொழுது இதே விதத்திலே நோக்கி பார்ப்பீர்களாக, இயேசுவை நோக்கிப் பாருங்கள். இப்பொழுது இயேசுவை நோக்கிப் பார் பிழைத்துக்கொள் 316. அது தான். அந்த வெண்கல சர்ப்பத்தைப் போல அந்த சர்ப்பத்தில் எந்த ஒரு வல்லமையும் இல்லை, ஆனால் அவர்கள் அதை தான் நோக்கிப் பார்த்தனர். இப்பொழுது வாக்குத்தத்தமானது "வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்று கூறுகின்றது. வெண்கல சர்ப்பம் போல, கைகளை வைக்குதலானது அதற்கு பிரநிதித்துவமாக இருக்கின்ற படியால் நான் என் கைகளை இவரின் மீது வைக்கின்றேன். இவர்கள் தாமே முன்னதாக மரித்த அவரை, இயேசுவை நோக்கிப் பார்ப்பார்களாக. வியாதிப்பட்டிருக்கின்ற நம் மக்கள் சுகமடைய அவர் தாமே இவர்களுடைய பாவ கிருபாதார பலி ஆவார். அவர் தாமே நம்முடைய பாவத்தின் கிருபாதார பலியாக இருக்கின்றார். தேவனுடைய வல்லமை தாமே இந்த தண்ணீரின் மீது வருவதாக, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இவர்கள் ஒவ்வொருவரையும் சுகமாக்குவதாக. அந்த குழந்தையா? அந்த குழந்தையா? 317. இயேசுவின் நாமத்தினாலே....?... கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே...... ஓ இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் முழு இருதயத்துடனே விசுவாசியுங்கள். அதை விசுவாசியுங்கள். ஒ, "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்ளுங்கள்," என் சகோதரரே, பிழைத்துக்கொள்ளுங்கள். எப்படி அதைச் செய்வீர்கள்? இப்பொழுது இயேசுவை நோக்கிப் பார் பிழைத்துக்கொள் அது அவருடைய வார்த்தையில் பதிவு... நினைவில் கொள்ளுங்கள் சகோதரனே...?... 318. இன்று சபைகள் இப்படி இருப்பதன் காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? நாம் தாமே ... நாம் உடனடியாக தொடர்ந்து இருக்காமல் பின்னடைவு செய்துவிடுகிறோம். எலியா அப்படியே தரித்திருந்தான், அவன் ஜெபித்தான், ஜெபித்துக்கொண்டேயிருந்தான், ஒரு காரியம் சம்பவிக்கும் வரைக்குமாக அவன் ஜெபித்துக் கொண்டேயிருந்தான். பிறகு இரு சிறிய துளி கீழே வருவதைப் போல தன் இருதயத்தில் உணர்ந்தான், அப்போது அவன், "பெருமழையின் இரைச்சலை நான் கேட்கிறேன்" என்றான். இங்குள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களுக்கு கிறிஸ்து அல்லது அந்த பரிசுத்த ஆவி தேவை என்றால், சுகமாக்கப்பட விரும்புவார்கள் ஆனால், அவர்கள் தாமே அப்படியே தரித்து நின்று "கர்த்தாவே, நீர் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளீர். நீர் அதை வாக்குதத்தம் செய்துள்ளீர்" என்று கூறுங்கள், அப்பொழுது அந்த சிறு துளியானது வருவதை உணர்வீர்கள். "கர்த்தாவே, இதோ அது. நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறுங்கள், ஏதோ ஒன்று சம்பவிக்கப்போகின்றது. ஓ "நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்" என் சகோதரர்களே, பிழைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது இயேசுவை நோக்கிப் பாருங்கள்... 319. உங்கள் கரத்தை இப்பொழுது உயர்த்துங்கள். உங்களுக்கு என்ன தேவைப்படுகின்றதோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் அங்கே உங்களுடனே தனியறையில் (cell) இருக்கின்றார். ஆம் சரி. அல்லேலூயா! சரி சகோதரனே, நீங்கள் இங்கே வருவீர்களானால்.Content-Length: 0